அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளும் கோஸ்டிங் மனநிலை!

 




திடீரென காணாமல் போகும் காதலி! 


கோஸ்டிங் என்பது இப்போதைக்கு டேட்டிங் ஆப்ஸ்களில் அதிகம் நிலவும் ஒரு சூழல் என வைத்துக்கொள்ளலாம். 

ஒருவர் உங்களோடு நன்றாக பழகிக்கொண்டிருக்கிறார். தொலைபேசி எண், வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து கணக்குகளிலும் ஒன்றாக இருக்கிறீர்கள். சாட் செய்கிறீர்கள். இன்பாக்ஸில் செய்தி போடுகிறீர்கள். வீக் எண்டில் சந்திக்கிறீர்கள் என இருக்கும் உறவு ஒருநாள் திடீரென மாறுகிறது. எப்படி என்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நண்பர், தோழி திடீரென அனைத்து தொடர்புகளையும் உங்களுடன் துண்டித்துக்கொள்கிறார். உங்களுக்கு என்னாகும்? என்னாச்சு என பதற்றமாவீர்கள். ஆனால் அவர் அழைப்பு, குறுஞ்செய்தி, சமூக வலைத்தள செய்தி என அனைத்தையும் புறக்கணிக்கிறார். இது மனதளவில் யாரையும் பாதிக்க கூடியது. 

இதைத்தான் கோஸ்டிங் என்கிறார்கள். ஒருவர் தான் கொண்டுள்ள உறவை அனைத்து மட்டங்களிலும் துண்டித்துக்கொண்டு கண் பார்வைக்கே படாமல் காணாமல் போவது. 

கோஸ்டிங் என்பது உறவுகளுக்கு மட்டுமல்லாது, பல்வேறு குற்றங்களுக்கும் கூட ஆதாரமாக இருக்கலாம் என டேட்டிங் ஆப்கள் நினைக்கின்றன. எனவே, அவை இதுதொடர்பாக தடுக்கும் முறைகளை ஆய்வு செய்து நடைமுறை செய்து வருகின்றன. இந்த வகையில் ஸ்னாக் எனும் ஆப் இதுதொடர்பான வசதியை  உருவாக்கியுள்ளது. 2019இல் டேட்டிங் ஆப்பான பம்பிள், கோஸ்டிங்கை தடுக்கும் வசதியை உருவாக்கியது. 

கோஸ்டிங் என்ற வார்த்தையை உருவாக்கியவர் எழுத்தாளர் ஹன்னா வான்டர்போயல். 2014ஆம் ஆண்டே இதை இவர் உருவாக்கினார். ஆனால் அதை பிரபலப்படுத்தியவர் சினிமா நடிகையான சார்லிஸ் தெரோன். இவர் சீன்பென்னை திருமணம் செய்துகொள்வதாக அப்போது செய்தி அடிபட்டது. பிறகு சீன் பென்னின் அழைப்பு, குறுஞ்செய்திகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் என்று கூறப்பட்டது. இதுதான் கோஸ்டிங் என்ற வார்த்தை அதன் அர்த்தம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு தெளிவாக புரிய வைத்தது. 

கோஸ்டிங் என்பதற்கு ஆதரவாக பேசுபவர்கள். நேரடியாக ஒருவரின் உறவை வேண்டாம் என்று சொல்லுவதற்குத்தான் இப்படி டக்கென அனைத்தையும் வெட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள் என்கின்றனர். நேரடியாக சொன்னால் அப்போதைக்கு வலியாக இருந்தாலும் கூட பின்னாளில் அது மாறலாம். ஆனால் எந்த விளக்கமும் சொல்லாமல் திடீரென உறவை விட்டு விலகி தொலைவாக போவது ஒருவருக்கு சமூக அளவில் இருக்கும் மதிப்பை, குழிதோண்டி புதைக்கும். தன்னம்பிக்கையை கடுமையாக பாதிக்கும் என உளவியலாளர்கள் சொல்லுகிறார்கள். 

நியூ சயின்ஸ்டிஸ்ட் கட்டுரையைத் (அமெலியா டாய்ட்) தழுவியது. 

gifer





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்