இடுகைகள்

வலது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை தொடங்கியது . அதற்கு நாடெங்கும் வரவேற்பு

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தோற்றுப்போவதன் காரணம்! - அமைப்பு முறை இல்லாத மக்கள போராட்டம்

படம்
                  போராட்டத்தின் வீழ்ச்சி 2010 தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளை போராட்டத்தின் காலம் என்று கூறலாம் . அத்தனை போராட்டங்கள் நடைபெற்றன . இதற்கான விதை துனிசியாவில் விழுந்தது . அங்கு தொடங்கிய போராட்டம் அப்படியே அரபு நாடுகளுக்கும் பரவியது . இதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான தளமாக அமைந்தன . குறிப்பாக ஃபேஸ்புக்கைக் கூறவேண்டும் . துருக்கி , உக்ரைன் , ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் நடந்த மக்களின் போராட்டங்கள் ஆட்சியாளர்களை என்ன செய்வதென தெரியாமல் பதைபதைக்க வைத்தன . சூடான் , ஈராக் , அல்ஜீரியா , ஆஸ்திரேலியா , ஃபிரான்ஸ் , இந்தோனேஷியா , லத்தீன் அமெரிக்கநாடுகள் , இந்தியா , லெபனான் , ஹைதி ஆகிய நாடுகள் போராட்டச் சுழலில் மாட்டின . மேற்சொன்ன பத்தாண்டுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடினர் . போராடியவர்களுக்கு பிற மக்கள் ஆதரவு தெரிவித்தனர் . போராட்டங்களை உலகளவிலான ஊடகங்கள் பதிவு செய்து ஒளிபரப்பின . புகழ்பெற்ற நாளிதழ்களில் கட்டுரைகள் ஏராளமாக எழுதப்பட்டன . போராட்டங்கள் வெற்றிபெற்றன என்பது உண்மைதான் . ஆனால் , போராட்டக்காரர்கள் கோரிய விஷயங்கள் ஏதேனும் நிறைவேற

இடது, வலது பக்க மூளை ஆதிக்கம் கொண்டவர் என ஒருவரைக் கூறலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? நாய்கள் உணவை வேகமாக உண்டால், அதை விரும்புகின்றன என்று அர்த்தமா? அப்படி கூற முடியாது. அறிவியலாளர்கள் உணவை வேகமாக சாப்பிடும் நாய்களுக்கு மரபணு ரீதியாக பிறழ்வு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த வகையில் லேப்ரடார் இன நாய்கள் உணவை அதிக ஆர்வத்தோடு வேகமாக சாப்பிடுவதும், உடல் பருமனால் அவதிப்படுவதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாயின் நாக்கில் மனிதர்களை விட சுவை மொட்டுகள் குறைவு. அவற்றால் இனிப்பு, கசப்பு, காரம் ஆகிய சுவைகளை உணர முடியும். ஆனால் மனிதர்களை போல சுவையை முழுமையாக அனுபவித்து அறிய முடியாது.  ஒருவர் இடது அல்லது வலது மூளை ஆதிக்கம் கொண்டவர் என கூறலாமா? வலது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள், கலையார்வம் கொண்டவர்கள் ; இடது மூளையின் ஆதிக்கம் கொண்டவர்கள், ஆராயும் இயல்பும், கணித திறமையும் கொண்டவர்கள் என கூறுவார்கள். இந்த கருத்தில் உண்மை இல்லை. மூளையைப் பொறுத்தவரை இடது, வலது என இரு பகுதிகளும் இணைந்துதான் செயல்படுகின்றன. இடது, வலது என இரு மூளைப்பகுதிகளையும் இணைக்கும் நரம்பிழைகளுக்கு கார்பஸ் கலோசம் (Corpus callosum) என்று பெயர். உடலின் மோட்டார் செயல்பாடுகள், கலை, கணிதம் ஆகிய