இடுகைகள்

அம்னீசியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்!

படம்
             லக் கீ தென்கொரியா    தென்கொரிய டிவி சீரியல்களில் துக்கடா வேடங்களில் நடித்து வரும் சீ ஜூங், நினைத்த வேகத்தில் முன்னேற முடியவில்லை.அவனது ஒரே ஆதரவான அப்பா சலூன் வைத்து நடத்துகிறார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூட தனது மகனின் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி புல்லரிப்பாக பேசுவதோடு நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ தான் தங்கியுள்ள அறைக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க நினைக்கிறான். அப்போது அவனுக்கு விதி வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. விபத்தாகி நினைவிழந்த ஒருவரின் வீட்டு சாவி அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டான் என்பதே கதை. உண்மையில் தமிழில் வெளிவந்த அறை எண் 305 இல் கடவுள் போலத்தான் கதையின் மையம் இருக்கிறது. கதாநாயகன் சீ ஜூங்கிற்கு ஒரு நூடுல்ஸ் வாங்கித்தரக்கூட ஆளில்லை. அவன் காதலித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகிறது. அவனது துக்கடா வேஷங்கள் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அறை வாடகை கொடுக்க கூட கையில் நயா பைசா கிடையாது. இந்த லட்சணத்தில் அவன் வாழ்க்கையை நினைத்து அழ

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நினைவுகளை பாதிக்கும்- இரு நோயாளிகளிடம் செய்த பரிசோதனைகள்

படம்
                  மூளையும் நினைவுகளும் மருத்துவத்துறையில் மூளை நரம்பியல் இன்று வெகுவாக முன்னேறிவிட்டது . ஆனால் அதில் ஏற்பட்ட துல்லியமான அனைத்து மாற்றங்களையும் வெகுஜன மக்கள் அறியமுடியாது . திரைப்படங்கள் அந்த வேலையை செய்தன . தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்தவர் , பைத்தியம் ஆனவர் , கோமா நிலைக்கு சென்றவர் என பல்வேறு மனிதர்களை செல்லுலாய்டில் உலவ விட்டனர் . இதில் சுந்தர் சி போன்ற இயக்குநர்களின் படங்களில் கட்டையால் அடித்தால் கண்டிப்பாக ரத்த த்தைவிட மயக்கம்தான் வரும் எனும் டுபாக்கூர் விஷயங்களும் வெளிவந்தன . பின்னாளில் அவரே தன்னுடைய படத்தில் லாஜிக் பார்த்தால் எப்படி என்று சொல்லிவிட்டதால் , அவரை விமர்சிக்க ஏதுமில்லை . இப்போது ஒரு நோயாளி பற்றி பார்ப்போம் . அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி மொலைசன் . இவரது ஏழு வயதில் மோட்டார் பைக் விபத்தில் தலையில் அடிபட்டது . அதிலிருந்து டெம்பொரல் லோப் பகுதி பாதிக்கப்பட்டு வலிப்பு பிரச்னைஉருவானது . வலிப்பு தொடர்பான மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினார் . ஆனாலும் 27 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது . மருத்துவர் ஸ்கோவில்லே இவருக்கு