இடுகைகள்

கடத்தல் பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறப்புக்காக பிராத்தியுங்கள்- நைஜீரிய பெண்களின் அவலநிலைமை!

படம்
நைஜீரியாவைச் சேர்ந்த அதாராவுக்கு பதினேழு வயதானபோது நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை மாற்றியது. அவரிடம் பேசிய பெண், லிபியாவில் வேலைவாய்ப்பு உள்ளது என்றார். இவர் மிகவும் சிரமப்பட்டு, அங்கு சென்றபோதுதான் 4 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கு பாலியல் தொழில் செய்ததோடு, அவரது எஜமானியோடும் உடலுறவு கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஐஎஸ் படையின் பாதாள சிறையில் உடலுறவுக்கான அடிமையாக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லிபியா படையினரால் மீட்கப்பட்டுள்ளார். தற்போது, உலக அகதிகள் அமைப்பு மூலம் நைஜீரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். காரணம் அவரது வீட்டில் பெற்றோரின் கட்டற்ற வன்முறை அதாராவால் தாங்க முடியாமல் இருந்தது. காப்பகத்திலும் உணவு, சுகாதார வசதிகள் குறைவுதான். ஆனால் அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நைஜீரிய ஊடகங்கள் வேலை என்ற பெயரில் கடத்தப்படும் பெண்களைப் பற்றி பரபரப்பான செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் இம்முறையில் மீட்கப்படும் பெண்களின் நிலைமை பற்றி கள்ள மௌனம் சாதிக்கின்றன. அரசும் இதில் பெர