இடுகைகள்

டாமினன்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதிக்கவாதியாக ஒருவரை மாற்றும் பயிற்சி

படம்
ஆதிக்கவாதியாக ஒருவரை பயிற்சி மூலம் மாற்ற முடியுமா? இதற்கான பதில் சற்று குழப்பமானது. அவர் தனக்குள் ஏன், எதற்கு, எப்படி, அவசியமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும். தான் கொண்டுள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டு தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் ஆதிக்க/அடிமை உறவு கெட்டுபோய்விட்டது என்பதற்கான அறிகுறி என புரிந்துகொள்ளலாம். இயற்கையாக ஒருவர் ஆதிக்கவாதி குணம் கொண்டவராக இல்லை. ஆனால் பயிற்சி மூலம் மாற்றமுடியுமா என்றால் முடியும். கதையில் ஒரு நடிகர் நன்றாக நடிக்கிறாரா என்று பார்த்து அதற்கேற்ப படத்தின் முடிவை இயக்குநர் கௌதம் எழுதுகிறாரே, அதுதான் இங்கு கான்செப்ட். ஒருவர் எந்தளவு ஆதிக்கவாதி பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ளமுனைகிறார் என்பதே இதில் முக்கியம். அதைப் பொறுத்து பயிற்சியாளர் பயிற்சிகளை அமைப்பார். பயிற்சி கொடுப்பவருக்குமே இது கடினமான பயணம்தான். ஒருவர் தன்னை சிறந்த வாகன ஓட்டுநர் என்று சொல்லிக்கொள்ளலாம். பிரச்னையில்லை. ஆனால் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது கடினம். அப்படி கற்பிப்பது அனைவருக்கும் கைவராது. ஏன் ஆதிக்கவாதியாக மாற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த தவற

டாமினன்ட் ஆட்களை அடையாளம் அறிய சில வழிகள்!

படம்
  ஆதிக்கவாதி கேரக்டர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். தான் தவறு செய்கிறோம் என்றால் அதை பகிரங்கமாக ஏற்கமாட்டார்கள். அறிமுகமில்லாத ஊருக்கு போகிறீர்கள்.அங்கு குறிப்பிட்ட இடத்திற்கு போக பஸ் தேவை. ஆனால் எந்த பஸ் என தெரியவில்லை. அதற்கு இன்னொருவரின் உதவியை நாடவேண்டும். ஆனால் ஆதிக்கவாதிகள், அதற்கு மலைப்பார்கள். அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். ''எனக்கு உங்களோட உதவி தேவை, உதவறீங்களா?’’ என்று கேட்க ஆதிக்கவாதி மனிதர்களின் மனம் ஒப்புக்கொள்ளாது. அதுதான் அவர்களது பலவீனம். எப்போதும் மனதில் பெருமை சூழ இருப்பார்கள். தன்னை மிகவும் நேர்த்தியானவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள், அவசியமான உதவியைக்கூட பிறரிடம் கேட்கத் தயங்குவார்கள். இதில்தான் ஆதிக்கவாதி ஆட்கள் மாட்டிக்கொள்கிறார்கள். உதவியை கேட்டால், இதுவரை தான் உருவாக்கிய தன்னைப் பற்றிய அனைத்து மாயைகளும் உடைந்துவிடுமே என பயப்படுகிறார்கள். ஒருவர் பிறருக்கு அதிகாரமளிப்பது எப்போது நடக்கிறது? உங்கள் நண்பர் உங்களை நம்பி வீட்டுசாவியைக் கையில் கொடுக்கிறாரா? தனக்கு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்ய ஓகே சொல்கிறாரா? பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நண்பர்கள் வாக்க

டாமினன்ட் ஆட்களை புரிந்துகொள்வது எப்படி?

படம்
டாமினன்ட்/ சப்மிஸிவ் என இரண்டு வகையான உறவு உள்ளது. டாமினன்ட் என்பதை ஆதிக்கவாதி, சப்மிஸிவ் என்பதை அடிமை என்றும் குறிப்பிடலாம். பிடிஎஸ்எம் உறவு முறையில் இதுபோல இருவர் வாழ்வது உண்டு. இந்த உறவு, இருவரும் ஏற்றுக்கொண்டுதான் தொடங்குகிறது. இதில் ஆதிக்கவாதி என்று கூறுபவர், ஆதிக்கம் செலுத்துவார். இவரை அடிமை பின்தொடர்கிறார். ஆதிக்கவாதி என்பவர் எப்படி இருப்பார், அவரது குணம் என்ன என்று கண்டுபிடிப்பது கடினம். அந்தளவு எளிதாக அவரை கண்டறிய முடியாது. அவருக்கு அதிகாரம் தேவை. அதை பிறர் மீது பயன்படுத்துவார் என உடனே நினைக்காதீர்கள். தன்னுடைய வாழ்க்கை, சூழல், தானுள்ள இடம் என அனைத்திலும் கையில் லகானைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படியென்றால் இப்படியான ஆள் சைக்கோபாத்தோ என உளவியல் ஆய்வு செய்ய நினைக்க கூடாது. அப்படி சோதனை செய்து லேபிள் குத்துவதை ஆதிக்கவாதி ஆட்கள் விரும்புவதில்லை. ஒருவரின் அடிமனதில் உள்ள கோபத்தை, வன்மத்தை வெளியே கொண்டு வர பெரிய சிரமங்கள் ஏதும் படவேண்டியதில்லை. அவருக்கு செய்யும் செயலில், இருக்கும் இடத்தில் கூடுதல் அதிகாரம் கொடுத்தால் போதும். உள்ளிருக்கும் பொய், புரட்டுகள்,மோசடித்தனங்கள