ஆதிக்கவாதியாக ஒருவரை மாற்றும் பயிற்சி











ஆதிக்கவாதியாக ஒருவரை பயிற்சி மூலம் மாற்ற முடியுமா? இதற்கான பதில் சற்று குழப்பமானது. அவர் தனக்குள் ஏன், எதற்கு, எப்படி, அவசியமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும். தான் கொண்டுள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டு தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் ஆதிக்க/அடிமை உறவு கெட்டுபோய்விட்டது என்பதற்கான அறிகுறி என புரிந்துகொள்ளலாம்.




இயற்கையாக ஒருவர் ஆதிக்கவாதி குணம் கொண்டவராக இல்லை. ஆனால் பயிற்சி மூலம் மாற்றமுடியுமா என்றால் முடியும். கதையில் ஒரு நடிகர் நன்றாக நடிக்கிறாரா என்று பார்த்து அதற்கேற்ப படத்தின் முடிவை இயக்குநர் கௌதம் எழுதுகிறாரே, அதுதான் இங்கு கான்செப்ட்.




ஒருவர் எந்தளவு ஆதிக்கவாதி பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ளமுனைகிறார் என்பதே இதில் முக்கியம். அதைப் பொறுத்து பயிற்சியாளர் பயிற்சிகளை அமைப்பார். பயிற்சி கொடுப்பவருக்குமே இது கடினமான பயணம்தான். ஒருவர் தன்னை சிறந்த வாகன ஓட்டுநர் என்று சொல்லிக்கொள்ளலாம். பிரச்னையில்லை. ஆனால் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது கடினம். அப்படி கற்பிப்பது அனைவருக்கும் கைவராது. ஏன் ஆதிக்கவாதியாக மாற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த தவறான பதில்களைப் பார்ப்போம்.




ஆதிக்கவாதியாக இருந்தால் நிறைய செக்ஸ் அனுபவிக்கலாம் என கேள்விப்பட்டேன். அது உண்மையா?




பிறருக்கு என்ன செய்வது என ஆணையிடுவது எனக்கு பிடித்திருக்கிறது.




எனக்கு செக்ஸ் அடிமைகள் தேவை. அதிக எண்ணிக்கையில் அவர்களை நான் வைத்திருக்கலாம் அல்லவா?




எனக்கு ஆணை/பெண்ணை பிடிக்காது. ஆண்/பெண் மேலாதிக்கவாதிகளாக இருக்கிறார்கள். அவர்களை பழிவாங்குவது சிறப்பானது.




எனது ஆண்தோழன்/பெண்தோழி/கணவன்/மனைவி ஆகியோர் என்னை ஆதிக்கவாதி ஆளுமையாக நினைத்துக்கொள்ளவேண்டும்.




எனக்கு சலிப்பு அல்லது ஆர்வம் ஏற்படுகிறது. எனவே ஆதிக்கவாதியாக இருக்க நினைக்கிறேன்.




மேற்சொன்ன பதில்களில் ஏதாவது ஒன்றை ஒருவர் மனதில் வைத்திருந்தால், அவர் ஆதிக்கவாதியாக மாற முயலும் முயற்சியை கைவிடுவதே நல்லது. அப்படி கைவிட்டால் அது அவரை சுற்றியுள்ளவர்களுக்கும், அவருக்கு நல்லது. இதற்கு பதிலாக அவர் வேறு ஏதாவது பொழுதுபோக்கை கையில் எடுக்கலாம்.




ஒருவர் ஆதிக்கவாதியாக பயிற்சி எடுக்கிறார் என்றால், அவர் அடிமையாக செயல்படுபவர் பற்றி என்ன மாதிரியாக கருத்தை மனதில் கொண்டிருக்கிறார் என்பதைக் கூறுவது அவசியம். ஒருவர் தான் சிந்திக்கும் முறை, செயல்படுவது என அனைத்திலும் தன்னை மாற்றிக்கொள்வது எளிதல்ல. இப்போது சில கேள்விகளுக்கு ஆதிக்கவாதியாக இருப்பவர் எப்படி பதில் சொல்லுவார் என்று பார்ப்போம்.




நீங்கள் கீழ்படிபவருக்கு சில கட்டளைகளை கூறுகிறீர்கள். அவர்களை அதை ஏற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?




நீங்கள் கூறும் செயல்முறைகள் தவறானதாக ஆபத்தானதாக இருந்தால் என்ன செய்வீர்கள்?




கீழ்படிபவர்களைப் பராமரிக்கும் உங்களின் பொறுப்பு, வரம்புகள் என்ன?




கீழ்படிபவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் தீர்த்து வைக்கிறீர்களா?




கீழ்படிபவர்களின் உணர்ச்சி, உடல், அறிவு, பொருளாதாரம், சமூகம், கல்வி சார்ந்த தேவைகளை தீர்க்கும்படியான ஏதேனும் எல்லைக்கோட்டை உருவாக்கியுள்ளீர்களா?




இந்த கேள்விகளைப் பார்த்தால் ஏதோ ஒருவர் கல்யாணத்திற்கு பெண் பார்த்தால் அவரிடம் கேட்கும் கேள்விதொனி தெரிகிறதா? உண்மையில் கல்யாண உறவை விட ஆதிக்க/கீழ்படிபவர் உறவு நிறைய பொறுப்புகளைக் கொண்டது. மிக சிக்கலானது. இதில் ஆதிக்கவாதி என்பவர் தலைவர், வழிகாட்டி, ஆசிரியர், ஊக்கமூட்டுபவர், திட்டமிடுபவர், பிரச்னைகளைத் தீர்ப்பவர் இன்னும் பல என்று அவர் ஏற்கும் விஷயங்கள் பொறுப்புகள் சென்றுகொண்டே இருக்கும்.




சிலர் இந்த கேள்விகளைக் கேட்டுவிட்டு ''நாங்கள் இருவரும் அவரவர் ஏற்ற பாத்திரங்களுக்கு ஏற்ப நடிக்கிறோம். அவ்வளவுதான். அதுவும் ஆன்லைன் வழி உறவுதான்'’ என்று கூறுவார்கள். எளிமையான பதில். கேட்பவர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட பாத்திரங்களை ஏற்கிறார்கள். ஆனால் அதில் உள்ள உணர்ச்சிகள் உண்மை. தொடக்கத்தில் இந்த உறவு நடிப்பு என்பது போல தோன்றினாலும் அதற்கும் உண்மைக்குமான கோடுகள் எளிதாக அழிந்துவிடும்.




ஆதிக்கவாதியாக உள்ளவர், உடல் உறவு இல்லாமல் தனது உறவை கீழ்படிபவருடன் தொடரமுடியுமா என்பதை தனக்குள்ளாக கேட்டுக்கொள்ளவேண்டும். முடியாது என்று அவருக்கு தோன்றினால் அவரால் ஆதிக்கவாதியாக இருக்கமுடியாது.




ஆதிக்கவாதி என்பவர், தனது பாலியல் செயல்பாடுகளால் முடிவு செய்யப்படுவதில்லை. இருவருக்குமான உறவில் பாலியல் உறவு என்பது முதன்மையானது கிடையாது. அர்த்தமுள்ள உறவு என்பதே அவசியம்.

https://visualhunt.com/

கருத்துகள்