ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ள தனித்த குண இயல்புகள்!

 




மக்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு முன்னகர்த்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். உளவியலோ, அவர்களின் கடந்தகாலத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று கூறியவர் உளவியலாளர் கார்டன் ஆல்போர்ட். இவரை ஆளுமை உளவியலின் தந்தை என புகழ்ந்து பேசுகிறார்கள். மனிதர்களின் ஆளுமை பற்றிய ஆய்வுகளை செய்தவர்கள் என ஹிப்போகிரேடஸ், காலென் ஆகியோரைக் கூறலாம். அதற்குப் பிறகு இதுதொடர்பான அதிகளவு ஆய்வுகள் நடைபெறவில்லை. ஒருவரின் சுயமான அடையாளம், தன்முனைப்பு பற்றி மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றன. 


இருபதாம் நூற்றாண்டில் உளவியல் பகுப்பாய்வு, குணவியல் இயல்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து வந்தனர். இதில் மனிதர்களின் ஆளுமைகளைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேற்சொன்ன இரண்டு ஆய்வு விஷயங்களைப் பற்றியும் கார்டன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். உளவியல் பகுப்பாய்வு, கடந்தகாலத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. குணவியல் ஆய்வுகளில் மனிதர்களின் தனித்துவத்திற்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை என்றார். அவர் மனித ஆளுமைகளைப் பற்றி என்ன யோசித்தார் என்று பார்ப்போம். 


மனித ஆளுமை என்பது மூன்று வகையாக உருவாகிறது. அதில் முதலில் இருப்பது கார்டினல் ட்ரெய்ட்ஸ். அதாவது குறிப்பிட்ட லட்சியத்தை மனதில் வைத்து இயங்குவது. இளமையில் பணம் இல்லாமல் அதை லட்சியமாக வைத்து பின்னாளில் இயங்குபவர்கள் உதாரணம். இவர்களை வேறு எதற்காகவும் மடைமாற்றம் செய்யமுடியாது. முதலீடு எவ்வளவு, லாபம் என்ன கிடைத்தது என அனைத்து விஷயங்களிலும் கணக்கு போடுவார்கள். 


அடுத்து காமன் ட்ரெய்ட்ஸ். நேர்மையான மனிதர்களாக இருப்பார்கள். அல்லது ஆவேசமான மனிதர்களாக இருப்பார்கள். நேர்மை என்பது ஒருவரின் முக்கியமான ஆளுமை. இப்படி இருப்பவர்கள் மிகச்சிலர்தான். கறாராக இருப்பார்கள். இந்த அடையாளத்திற்காகவே பெருமை கிடைக்கும். பிரச்னைகளும் தேடி வரும். ஆவேச குணமும் இதே வகையினர்தான். லொள்ளு பேசினால் கைகளால் பதில் சொல்லுவார்கள். அடுத்து செகண்டரி ட்ரெய்ட்ஸ். இந்த ஆளுமை உள்ளவர்கள் அந்நிய ஆட்களைப் பார்த்தால் பரிதாபங்கள் சுதாகர் போல அநியாயத்திற்கு வெட்கப்படுவார்கள். வணக்கம் சொன்னால் கூட பதிலுக்கு தலையை லைட்டாக ஆட்டியபடி கிளம்பி விடுவார்கள். இதில் இன்னொருவகையினர், இழவு வீட்டுக்கு வந்து மதுரை முத்து காமெடி சொல்லி சிரித்துக்கொண்டிருப்பார்கள். 


கார்டன் ஆல்போர்ட் இந்தியானாவின் மான்டேஸூமாவில் பிறந்தார். பள்ளியில் கூச்ச சுபாவம் கொண்ட மாணவர். படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். டீனேஜ் காலத்தில் பள்ளி வெளியிட்ட பத்திரிகை ஒன்றுக்கு ஆசிரியராக இருந்தார். பிறகு தனது குடும்பத்திற்கு சொந்தமான அச்சு தொழிலில் இறங்கினார். 


முதல் உலகப்போரில் ராணுவ சேவைக்கு சென்றார். பிறகு திரும்பி வந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்று தத்துவம், பொருளாதாரம் ஆகிய படிப்புகளை படித்தார். 1922ஆம் ஆண்டு உளவியலில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படித்தார். 1924ஆம் ஆண்டு, ஹார்வர்ட் திரும்பியவர் மனிதர்களின் ஆளுமை பற்றிய ஆராய்ச்சிகளை கற்பிக்கத் தொடங்கினார். இடையில் தார்மூத் கல்லூரிக்கு பணி மாறியவர் பிறகு ஹார்வர்டிற்கு திரும்பி அங்கேயே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் வரை பணியாற்றினார். 1967ஆம் ஆண்டு காலமானார். 


முக்கிய படைப்புகள் 


1937 personality a psychological interpretaion


1954 the nature of prejudice


1955 becoming 


1961 pattern and growth in personality

cartoonstock.com/zody zellman

கருத்துகள்