அவதாரம் 3 - மனமும் ஆய்வுகளும் நூல் அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது!
அவதாரம் தொடர்வரிசை நூலின் மூன்றாவது நூல். இந்தவகையில் தொடரின் இறுதி நூலும் இதுதான். வெகுநாட்களாக உளவியல் கொள்கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்ற நூல்களில் எழுத முடிந்ததே ஒழிய அவற்றை முழுமையாக எழுத முடியவில்லை. அதற்கான நல்வாய்ப்பாக அவதாரம் நூல்கள் அமைந்தன. இதற்கென ஆங்கில நூல்களும், மாத இதழ்களும் கூட கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் வரிசைதான் அவதாரம்.
மூன்றாவது நூலில் உளவியலாளர்கள் பெரும்பாலானோரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதில், யாரேனும் விலகியிருந்தால், அவர்களைப் பற்றி வலைப்பூவில் எழுத முயற்சி மேற்கொள்ளப்படும். உளவியல் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு அவதாரம் 3 நூல், ஆச்சரியம் தரும். இதில், அந்தளவு உளவியலாளர்கள். அவர்களின் கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கை என பலவும் பேசப்படுகிறது. நூலைப் படியுங்கள். பிடித்திருந்தால் ஒத்த ஆர்வமுள்ளவர்களுக்குப் பகிருங்கள். நன்றி
நூலை எழுதும்போது எனக்கு ஊக்கமூட்டுதலாக இருந்த ஒரே ஆன்மா நண்பர் மெய்யருள் அவர்கள். அவர்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கிறேன்.
Please click the link for read the book
https://www.amazon.in/dp/B0CPKTBF2X
கருத்துகள்
கருத்துரையிடுக