பாலியல் சீண்டல் வழக்குகளில் நேரடி சாட்சியங்களின் உண்மைத்தன்மை!

 








1979ஆம் ஆண்டு, லாஃப்டஸ் ஐவிட்னஸ் டெஸ்டிமோனி என்ற நூலை எழுதினார். இதில் விபத்து நடக்கும்போது அதைப் பார்க்கும் நேரடி சாட்சியங்கள் எப்படி தகவல்களை தவறாக புனைந்து கூறுகிறார்கள் என்பதை செய்த ஆய்வுகளின் மூலம் விளக்கியிருந்தார். 


பின்னாளில் லாஃப்டஸ், தடயவியல் உளவியல் மீது ஆர்வம் கொண்டார். 1980ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் பற்றிய வழக்கில் அவர் வல்லுநராக இயங்கி இருந்தார். நினைவுகள் என்பது காலப்போக்கில் பல்வேறு தவறான தகவல்களால் மாறுகிறது. தவறான தகவல்களால் நிரம்புகிறது என்பதை அடையாளம் கண்டார். ஆனால் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது எளிதாக இல்லை. 

தொண்ணூறுகளில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இதில் ஜார்ஜ் ஃபிராங்களின் என்பவர், தனது மகள் எய்லீனின் தோழியைக் கொன்றார் என்பது காவல்துறையின் வழக்கு. ஆனால் இதில் நேரடி சாட்சியான எய்லீன் கூறிய தகவல்கள் நிறைய மாறுபட்டன. பல்வேறு முறை அவை தவறாகவும் இருந்தன. ஆனாலும் நீதிமன்ற ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்தனர். தவறுதலாக பல்வேறு விஷயங்களை சேர்த்து, இணைத்து நினைவுபடுத்திக் கூறுவதைஃபால்ஸ் மெமரி சிண்ட்ரோம் என்று உளவியலாளர்கள் அழைக்கிறார்கள். 


1995ஆம் ஆண்டு மேற்சொன்ன வழக்கு திரும்ப விசாரணைக்கு வந்தது. நேரடி சாட்சியான எய்லீனுக்கு ஹிப்னோதெரபி வழங்கப்பட்டது. இதன்பிறகே உண்மையான நினைவுகளை எய்லீன் அடையாளம் கண்டார். உண்மையில் தனது அப்பா, தோழியைக் கொலை செய்திருப்பார் என அவர் நம்பியதால் பல்வேறு நினைவுகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிவைக்கப்பட்டன. ஆனால் அது உண்மையல்ல என்று லாஃப்டஸ் நீதிமன்றத்தில் வாதாடினார். 


தனது தவறான நினைவுகள் கொள்கையை நிரூபிக்க சோதனை ஒன்றை லாஃப்டஸ் செய்தார். இதில் மொத்தம் 24 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு பெற்றோர் மூலம் நான்கு வித கதைகள் கூறப்பட்டன. இதில் மூன்று உண்மையானவை. ஒன்று மட்டும் போலியானது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களுக்கு நினைவில் உள்ள கதைகள் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், வணிக வளாகம் பற்றிய கதையை நினைவில் வைத்திருந்தனர். நான்கு கதைகளில் எது தவறான கதை என்று கேட்டபோது, வணிக வளாகம் கதையை ஒன்பது பேர் போலியான கதை என்று கூறினர். 


லாஃப்டஸ் கண்டறிந்த ஆய்வு உண்மை, நீதிமன்றத்தில் நேரடி சாட்சிகளை விசாரிக்க புரிந்துகொள்ள பயன்பட்டது. அதேசமயம் இதை எளிதாக அன்றைய பாலியல்  வன்முறை, சீண்டல் செய்யும் குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. எனவே, தனது ஆய்வு முடிவுகளை கண்டறிந்த உண்மையை அந்தளவு தீவிரமாக லாஃப்டஸ் விவரிக்கவில்லை. 



1986ஆம் ஆண்டு, உளவியலாளர்கள், ஜான் யுய்லெ, ஜூடித் கட்சால் ஆகியோர் மோசமான அதிர்ச்சி சம்பவம் பற்றிய நினைவுகளை ஆராய்ந்தனர். ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. சிலர் இறந்துபோகிறார்கள். பலர் படுகாயம் அடைகிறார்கள். இதை நேரடியாக பார்த்தவர், தீவிரமான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். சம்பவம் நடைபெற்று ஆறுமாதங்களுக்குப் பிறகு மீள அதே சம்பவத்தை நினைவுபடுத்தி பல்வேறு தவறான கேள்விகளை கேட்கும்போது சாட்சி, நினைவுகளை பற்றி முரணாக கூற வாயப்புண்டு என உளவியலாளர்கள் ஜான், ஜூடித் ஆய்வு செய்து கூறினர். 


நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இதில் நேரடி சாட்சிகள் மூலம் வழக்கின் தீர்ப்பு உறுதிப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஜூரிகள் குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்தும் விதமாக செயல்படுகின்றனர். இதை உளவியலாளர்கள் ஏற்கின்றனர். எனவே, லாஃப்டஸ் பாலியல் சீண்டல் குற்றங்களை மறுக்கவோ, மனதில் உள்ள அழுத்தப்பட்ட நினைவுகளை மறுக்கவோ இல்லை. ஆனால் நேரடியான சாட்சியங்களில் உள்ள பிரச்னைகளை அடையாளம் கண்டு அதை சோதிக்கவேண்டும் என்று கூறினார். 


நீங்கள் உண்மையைக் கூறுகிறீர்களா அல்லது நினைவிலிருந்து உண்மையைக் கூற முயல்கிறீர்களா என்று எலிசபெத் லாஃப்டஸ் கேட்டார். இவரது கொள்கைகளை நீதிமன்றம் ஏற்று, அதற்கேற்ப சட்டங்களை மாற்றியமைத்தது. இன்று உளவியலில் இவரின் தவறான நினைவுகள் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதைப்பற்றிய மேம்பாடுகளும் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி எழுதப்பட்ட நூல் ஒன்றைக் கூட நீங்கள் வாசிக்கலாம். தி செவன் சின்ஸ் ஆஃப் மெமரி - ஸ்டீவன் ஸ்காக்டர். 

pixabay

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்