குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!

 








இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும். 


அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது. 


ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையிலேயே கழிந்துவிடும். அரசின் கெடுபிடியால் குடும்ப விசா வாங்குபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக சுருங்கிவிட்டது. ஏற்கெனவே 18600 பவுண்டுகள் இங்கிலாந்து குடிமகன் சம்பாதிக்கவேண்டும் என நிபந்தனை உள்ளது. இதன் விளைவாக பலரும் இணையத்தில் ஸ்கைப் சேவையைப்பயன்படுத்தி குடும்பம் நடத்தி வருகிறார்கள். அந்தளவு நிலைமை மோசமாக உள்ளது. 


ஏறத்தாழ அரசின் விசா கெடு்பிடியால், அதற்கு குடிமகன்களுக்கு நலத்திட்ட உதவிக்காக செலவிடும் தொகை பெருமளவில் குறையும். மேலும், வேறு நாட்டைச் சேர்ந்தவர்களை இ்ங்கிலாந்து நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் தடுக்க முடியும். அரசின் விதிமுறையை எதிர்த்து, பணக்காரர்கள் மட்டும்தான் இனி காதலிக்க முடியும் என மக்கள் ஊடகங்களில் கருத்து கூறி வருகிறார்கள். 


ஜேம்ஸ் டேப்பர்

கார்டியன் வீக்லி


cartoon stock









கருத்துகள்