பதற்றக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறையை உருவாக்கிய பால் சால்கோவ்ஸ்கிஸ்!

 








இருபதாம் நூற்றாண்டின் அரைபகுதியில் மருத்துவ உளவியலில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று, மனநல குறைபாடுகளுக்கு அதுவரை பயன்படுத்திய தெரபி முறைகளை மாற்றத் தொடங்கினர். 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலுள்ள பல்வேறு உளவியலாளர்கள் ஃப்ராய்டிய முறையை மாற்றி உளவியலாளர் ஆரோன் பெக் கண்டறிந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினர். பின்னாளில், காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி சிபிடி என்று அழைக்கப்பட்ட சிகிச்சை முறையை பால் சால்கோவ்கிஸ் என்பவர் கண்டறிந்தார்.  இதை ஆண்டுக்கு ஆண்டு உளவியலாளர்கள் மாற்றி மேம்படுத்தி வந்தனர். சிபிடியைப் பயன்படுத்தி அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டர் குறைபாட்டிற்கு சிகிச்சை செய்தனர். ஆனால் இப்படி ஒரு குறைபாடு தோன்றுவதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று தெரியாமல் தவித்தனர். 


எதிர்காலத்தில் அப்படி நடக்குமோ, இப்படி நடந்துவிடுமோ என்று மனதி்ல் எழுதும் கருத்துகள் வலிமையாகும்போது அப்செசிவ் குறைபாடு உருவாகிறது என பால் கண்டறிந்தார். இப்படியான மனக்கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இருக்காது. அவருக்கு ஏதாவது துக்கம் அல்லது நோய் வந்திருக்கும். ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான நோயோ, பிரச்னையோ வரக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுப்பார். இதன் மூலம் நோயாளிக்கு அந்த பிரச்னை மீது முழு கட்டுபாடு இருப்பது போல தோன்றும். அதாவது அவர் அப்படி நினைத்துக்கொள்வார். பாலின் சிபிடி சிகிச்சை முறைகளின் மூலம் பதற்றம், அதீத பதற்றம், பயம் சார்ந்த குறைபாடுகளை தீர்க்க முடிந்தது.  


பால் சால்கோவ்ஸ்கிஸ்


1979ஆம் ஆண்டு லண்டனில் உளவியல் பட்டம் பெற்றார். பிறகு 1985ஆம் ஆண்டு, ஆக்ஸ்ஃபோர்டில் பதற்றக்குறைபாடு பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார். பதற்றம் சார்ந்த குறைபாடுகளை முழுமையாக ஆராய்ச்சி செய்ய விரும்பினார். அங்கேயே மனநல குறைபாடுகளுக்கான சிகிச்சை முறையை உருவாக்கினார். 2000ஆம் ஆண்டில், பதற்ற குறைபாடு, மோசமான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தனி மையம் ஒன்றைத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டு பாத் பல்கலைக்கழகத்தில் சிபிடி சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் ஒன்றைத் தொடங்கினார். 


முக்கிய படைப்புகள் 


1998 பேனிக் டிசார்டர

1999அண்டர்ஸ்டேண்டிங் அண்ட் ட்ரீட்டிங் அபசேசிவ் கம்பல்சிவ் டிசார்டர்

2000 காசிங் ஹார்ம் அண்ட் அலோவிங் ஹார்ம்


கார்ட்டூன் ஸ்டாக்








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்