கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!














ஆதிக்கவாதியாக ஒருவர் செயல்பட முடிவெடுத்துவிட்டார். சரி, ஆனால், அவர் முதலில் சில கேள்விகளை அவராக கேட்டுப் பார்த்து அதற்கான பதில்களைப் பெறவேண்டும். அப்போதுதான் தான் ஏற்கவேண்டிய பொறுப்பு பற்றி தெளிவாக அறிய முடியும். இப்போது கேள்விகளைப் பார்ப்போம்.




நீங்கள் குரூரமான அல்லது இரக்கம் கொண்ட ஆதிக்கவாதியா?




நீங்கள் சாடிஸ்டா? ஆம் எனில் உங்களை எப்படி வரையறை செய்வீர்கள்?




உங்கள் இணையர் மாசோசிஸ்டாக இருந்தால் அது உங்களை பாதிக்குமா?




ஒரு இணை அல்லது பல இணையர்களை பயன்படுத்துபவரா?




பல இணையர்களை பயன்படுத்துபவர் என்றால் அதில் கட்டுப்பாடுகளைக் கொண்டவரா?




உங்கள் இணையர்களுக்கான விசுவாச விதிகளை தனியாக வகுத்து வைத்தீர்களா? அது உங்களுடையதிலிருந்து மாறுபடுமா?




ஆதிக்கவாதியாக இருப்பது பிறரை விட உங்களை தனித்து காட்டுவதாக நினைக்கிறீர்களா?




ஒரு உறவுக்குள் குறிப்பிட்ட விதிமுறைகளை மதித்து நடப்பது என்பது எந்தவகையில் முக்கியமானது?




கீழ்படிபவரைத் தண்டிப்பது உண்டா? ஆம் என்றால் எப்படி?




இணையர்களுக்குள் முரண்பாடு வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்?




உங்களுக்கு சட்டென கோபம் வருமா? அப்படி வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?




ஒரு மாசோசிஸ்டை கீழ்படிபவராக ஏற்பீர்களா? அப்படி ஏற்றால்/ ஏற்கவில்லை எனில், அதற்கான காரணத்தையும் கூறுங்கள்.




மாசோசிசம் என்பதில் எப்போது கூடுதலாக வரம்பு கடந்து செல்கிறது என்று தோன்றும்?




ஆதிக்க/கீழ்படிபவர் உறவை வெளிப்படையாக அல்லது ரகசியமாக வைத்திருப்பீர்களா?







உங்களது ஆதிக்க/கீழ்படிபவர் உறவை குடும்பம் மற்றும் நண்பர்கள் அறிந்தால் என்ன மாதிரியாக நடந்துகொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?




உங்கள் இணையவர்களை கீழ்படிபவர்களாக அல்லது அடிமையாக எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்?




உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைபிடிக்கும் விதிகள் அதிகமா, குறைவா, அவற்றில் நெகிழ்வுத்தன்மை உண்டா?




ஆதிக்க/கீழ்படிபவர் உறவில் இருந்தபோதும் சமூகத்தில் உள்ள பிறருடன் கலந்து பழக வேண்டும் என தோன்றுகிறதா?




கேள்விகளை பிறரிடம் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே கேட்டு பதில்களை தயார் செய்துகொள்ளுங்கள். அடுத்து நாம் ஆதிக்கவாதிகளின் வகைகளைப் பார்க்கலாம்.




ஆதிக்கவாதிகளில் மொத்தம் எட்டு வகை உள்ளது. இது இல்லாமல் ஆதிக்கவாதி அல்லாதவர் என்ற வகை கூட உண்டு. இதில் கூறப்படும் ஆதிக்க வகையினர் பற்றி தெளிவாக ஆராய்ந்து முடிவெடுப்பது முக்கியம். தோராயமாக இவர் என ஒருவகையைத் தேர்ந்தெடுப்பது ஆபத்து. அது ஆதிக்க/கீழ்படிபவர் உறவைக் கெடுத்துவிடும்.









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்