2023 ஆம் ஆண்டில் சிறந்த கிராபிக் நாவல்கள், அரசியல் நூல்கள்! - கார்டியன் நாளிதழ் பரிந்துரை

 







2023 - கிராபிக் நாவல்கள் 


ஒய் டோண்ட் யூ லவ் மீ - பால் பி ரெய்னி


கார்ட்டூனிஸ்ட் தனது கதையை நகைச்சுவையைப் பயன்படுத்தி கூறுகிறார். வேலையில் தடுமாற்றம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெற்றோரின் பிரச்னைகள், நூலில் பேசப்பட்டுள்ளன. நூலின் சம்பவங்கள், உணர்ச்சிகள் சிறப்பாக கைகூடி வந்திருக்கின்றன. 


மோனிகா - டேனியல் குளோவ்

இந்த ஆண்டில் வாசகர்கள் காத்துக்கிடந்து வெளியான படைப்பு. நூலில் நிறைய தத்துவங்கள், கோட்பாடுகள், நிரூபிக்கப்படாத கருத்துகள் பேசப்படுகின்றன. ஒரு இளம்பெண், தனது தாயைத்தேடுவதுதான் கதை. மூத்த கார்ட்டூனிஸ்டான ஆசிரியரின் படங்கள் அருமையாக வந்துள்ளன. கதையும் படிக்க சுவாரசியமாக உள்ளது. 


தி டாக் - டாரின் பெல்


இது ஒரு சுயசரிதை. ஆப்பிரிக்க அமெரிக்கரான டாரின் பெல், தன்னுடைய இனம் சார்ந்த சிக்கலுக்காகவே பள்ளி கல்லூரிகளில் கேலி, கிண்டல், சித்திரவதைகளை அனுபவிக்கிறார். இதை நூல் விரிவாக விளக்குகிறது. நூலாசிரியர் புலிட்சர் பரிசு வென்றவர். 


தாமஸ் கிர்டின் - தி ஃபார்காட்டன் பெயின்டர்


அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஓவியர் ஆஸ்கர் ஸராடேவின் நூல். கிர்டின் என்ற வாட்டர்கலர் ஓவியரைப் பற்றிய கதை. 


பிளட் ஆஃப் தி வர்ஜின் - சாமி ஹர்காம் 


1970களில் அமெரிக்காவில் குறைந்த பட்ஜெட்டில் திகில் படம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மகனை வளர்க்க நினைக்கும் தந்தை பற்றிய கதை.


யுவர் விஷ் இஸ் மை கமாண்ட் - தீனா மொகம்மது 


கற்பனையான உலகம் நிஜமாக இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கும்படியாக கிராபிக் நாவல் எழுதப்பட்டுள்ளது. கற்பனையாக, கருத்தியல் ரீதியாக இரண்டு வகையாகவும் நூல் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. 


ரோமிங் - ஜிலியன், மாரிகோ டமாகி


மூன்று மாணவர்கள், கனடா நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். இவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சுற்றுலாவாக செல்கிறார்கள். அவர்களின் அனுபவத்தை நூல் பேசுகிறது. புத்துணர்ச்சியும் ஊக்கமும் அளிக்கக்கூடிய நூல். 


டபிள்யூ தி வோர் - ஆன்கே ஃப்யூசென்பெர்கர், காட்ரின் டிவிரிஸ் 

ஒரு இளம்பெண் திருமணம், குழந்தைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். மனதிற்கு நெருக்கமாக வேடிக்கையான நூலாக உள்ளது. 


2023 அரசியல்


ஹிட்லர், ஸ்டாலின், மம் அண்ட் டாட் - டானி ஃபிங்கெல்ஸ்டீன் 


அகதி குடும்பம் எதிர்கொண்ட போர், அவர்களுக்கு இடையிலான அன்பு ஆகியவற்றைப் பற்றி நூல் பேசுகிறது. நூலாசிரியரின்அம்மா, ஹிட்லரின் வதை முகாமில் இருந்து சித்திரவதை அனுபவித்த யூதர். அப்பா,போலந்து நாட்டைச் சேர்ந்த யூதர். ரஷ்யா போலந்தை கைப்பற்றியபோது அங்கிருந்து வெளியேறியவர். 


தி அப்யூஸ் ஆஃப் பவர்


அரசு நிர்வாகத்தில் உருவாகுகிற ஊழல்களை பற்றி தீவிரமாக ஆய்வுப்பூர்வமாக பேசுகிற நூல். ஊழல் அரசால் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை சிறப்பாக விவரித்திருக்கிறார். 


ஜேம்ஸ் ஸ்மார்ட், காபி ஹின்ஸ்லிஃப்

கார்டியன் வீக்லி


கருத்துகள்