இடுகைகள்

தெலங்கானா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் பிரச்னைகளைப் பேசும் பத்திரிகையாளர்! - ரூரல் மீடியா ஷியாம் மோகன்

படம்
ஷியாம் மோகன் ஒளிப்பதிவாளருடன் பழங்குடிகளின் பிரச்னையைப் பேசும் பத்திரிகையாளர்! பேஸ்புக் வந்தபிறகு யூட்யூப் மெல்ல பின்தங்கியது கண்கூடாக தெரிந்தது. ஆனால், அந்தரங்க தகவல்களின் அத்துமீறல், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கமுக்கமாக வேலை பார்த்தது எல்லாம் அந்த சமூக வலைத்தள சேவைக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது. கூடவே பெருந்தொற்று காலம் வேறு வர, பேஸ்புக் மெல்ல செல்வாக்கை இழந்தது. அந்த இடத்தில் யூட்யூப் மெல்ல புகழ் பெறத் தொடங்கியது.  இன்று யூட்யூப் மூலம் இந்தியர்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 6,800 கோடி. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் இதன் பங்களிப்பும் உண்டு என 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டுபடி கூறியிருக்கிறது ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு.  இந்தியாவில் வாட்ஸ் அப் அமைப்பிற்கு 53 கோடி, யூட்யூப்பிற்கு 44.8 கோடி பயனர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைத்தள சேவைகளெல்லாம் இதற்கு பின்னர்தான். இப்படி யூட்பூப் வைத்து சம்பாதிப்பவர்கள் தங்களுக்கான இடத்தை எப்படி அடையாளம் கண்டுகொண்டனர் என்பது முக்கியமானது. உலகம் முழுக்கவே இப்போது எழுத்தை விட காட்சிகளைப் பார்க்கவே விரும்புக

கிட்னி நோயாளிகளுக்கு இலவச பயணம்

படம்
Telangana Today கிட்னி நோயாளிகளுக்கு இலவச பேருந்து வசதி தெலங்கானா அரசின் வசதி இது. ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு  அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை சந்திரசேகர ராவ் ஏற்பாடு செய்துள்ளார். கிட்னி நோய்க்கான பரிசோதனைக்கு மருத்துவமனைகள் செல்லும் நோயாளிகள், இனி சுருக்குப்பையை, வாலட்டை திறக்க வேண்டியதில்லை. இதற்காக அரசு 12.22 கோடி ரூபாயை செலவழிக்கவிருக்கிறது. ஏற்கனவே இவரின் ரைத்து பந்து திட்டத்தை மத்திய அரசு காப்பியடித்து இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டமாக்கியது. இனி புதிய திட்டத்தையும் காப்பியடிக்க வாய்ப்புள்ளது. மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.