திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா? பெரும்பாலான திருமணங்களில் பாலுறவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. திருமணம் செய்வதே வம்ச விருத்திக்குத்தானே? திருப்திகரமான பாலுறவு தம்பதிகளுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. ஆண், பெண் என இருவரும் உடல், சிந்தனை அளவில் வேறுபட்டவர்கள். பாலுறவில் ஏற்படும் திருப்தி, குறைகளை களைய உதவுகிறது. அனைத்து தம்பதிகளும் பாலுறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்றால் கிடையாது. வயது முதிர்ச்சி அடையும்போது, ஒருவரின் பாலுறவு ஆர்வம், வேகம், திறன் குறையும். பாலுறவு நல்ல முறையில் அமைந்தால் திருமண தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து போக வாய்ப்புண்டு. சுகர் டாடிக்கள் காசு கொடுத்து கல்லூரி பெண்களை தடவி மகிழ்வது கூட பாலுறவின் இன்பத்தை கொஞ்சமேனும் தொட்டுப் பார்க்கலாமே என்றுதான். திருமண உறவில் பாலின பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன? ஆண் மேலாதிக்க சமுதாயத்தில், ஆண்தான் குடும்பத்தலைவர். பெண், அவனுக்கு உதவி செய்யும் துணைப்பாத்திரம்தான். தமிழ் திரைப்படங்களில் வரும் கலையரசன், வாகை சந்திரசேகர் போல குடும்பத்திற்காக ...