மகப்பேறு மருத்துவத்தின் மூலம் தன்னைச்சுற்றியுள்ள பெண்களை புரிந்துகொள்ளும் மருத்துவர்! டாக்டர் ஜி
டாக்டர் ஜி
ஆயுஷ்மான்
குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா
இசை அமித்
திரிவேதி
பொதுமருத்துவம்
படித்த உதய் குப்தா, சிறப்பு மருத்துவராக மாற எலும்புகள் பற்றி படிக்க நினைக்கிறார்.
ஆனால் அதை படிப்பதற்கான சீட், அவருக்கு அருகில் கிடைப்பதில்லை. எனவே மகப்பேறு மருத்துவத்தை
அவர் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை முழு மனதாக செய்யவில்லை. ஆண் என்றால் மகப்பேறு
மருத்துவம் எதற்கு செய்யவேண்டும் என நினைக்கிறார். பெண்களுக்குத்தான் அது சரியானது
என நினைக்கிறார். இந்த மனநிலையை அவர் மாற்றிக்கொண்டு நல்ல மகப்பேறு மருத்துவராக அவர்
மாறுவதுதான் கதை.
உதய் குப்தா,
ஆணாதிக்க கருத்துகள் கொண்டவர். அவருக்கு அவரது நெருங்கிய உறவினரான எலும்பு மருத்துவர்தான்
ரோல்மாடல். அதுபோல மருத்துவராகி சந்தோஷமாக வாழவேண்டும். வெற்றிகரமான மருத்துவராக செயல்டுவதே
கனவு. ஆனால் நிலைமை அப்படி எளிதாக செல்லவில்லை. அவருக்கு மகப்பேறு மருத்துவம்தான் படிக்க
கிடைக்கிறது. மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை
என இரண்டு இடங்களிலும் அவர் தன்னை மிகவும் அந்நியமாக உணர்கிறார். வகுப்பில் அவர் மட்டும்தான்
ஒரே ஆண். வேலையின்போது, ஆசிரியரும் துறை தலைவருமான நந்தினி ஶ்ரீவஸ்தவா உதய்யை கடுமையாக
திட்டி சரியாக நடந்துகொள் என கூறுகிறார். முதலில் அவரை கேலி செய்யும் சக பெண் மருத்துவர்கள்
மெல்ல உதய்க்கு நண்பர்கள் ஆகிறார்கள். அதில் ஒருவர்தான் ஃபாத்திமா.
திருமணம்
நிச்சயமான பெண்ணான இவர்தான் உதய்க்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும் பெண் மருத்துவர்.
படம் நெடுக உதய் எப்படி மெல்ல தனது ஆணாதிக்க குணத்தை கைவிட்டு பிறர் குறிப்பாக பெண்கள்
பேசுவதைப் புரிந்துகொள்ள முயல்கிறார் என்பதை காட்சிகளாக காட்டியிருக்கிறார்கள். சில
காட்சிகளை மட்டும் கூறுகிறேன். மீதியை நீங்கள் படமாக பார்த்தால்தான் அதை புரிந்துகொள்ள
முடியும்.
உதய்யின்
அம்மா, சமூக வலைத்தளங்கள், டிண்டர் என முயன்றுகொண்டிருப்பார். உதய்க்கு அப்பா இல்லாமல்
தனிமையில் வாழும் அம்மாவைப் புரிந்துகொள்ள முடியாமல் தனது உலகத்தில் இருப்பார். அவரது
அம்மா தனக்கு ஏற்றபடி ஒருவருடன் நட்புகொள்வதை உலகம் என்ன சொல்லும் என அவமானத்தில் துடிப்பவராக
உதய் மாறும்போது, அவரது அம்மா பேசும் வசனங்கள் மெல்ல உதய்யை சூழலை பெண்களை புரிந்துகொள்பவராக
மாற்றும்.
குறிப்பாக
காவ்யா என மைனர் பெண், கர்ப்பிணியாக இருக்கும்போது, அவரை வீட்டுக்கு அழைத்து வந்து
தங்க வைத்திருக்கும்போதுதான் மேலே சொன்னதுபோல உரையாடல் நடக்கும்.
இன்னொன்று
எதிர்பாராத நெகிழ்வான நேரத்தில் ஃபாத்திமா கொடுக்கும் முத்தம். அதை அவரே தவறு என ஏற்றுக்கொண்டு
தனக்கு நிச்சயம் செய்தவருக்கு நேர்மையாக இருக்கவேண்டுமென கல்சுவரில் அமர்ந்து பேசுவது,
அடுத்து காவ்யாவுக்கு சோதனை செய்து சிக்கலான நிலை தெரிந்தபிறகு ஃபாத்திமாவை ஏளனம் செய்து
உதய் பேசுவார். அப்போது ஃபாத்திமா பேசும் வசனம் உயிரோட்டமானது.
துறைத்தலைவரான ஷெபாலி ஷா, மருத்துவராக நீ ஆணின் தொடுதலோடு
இருக்கிறாய் அது மாறாத வரையில் நீ மருத்துவராக்க முடியாது என சொல்வதும், படத்தின் முக்கியமான
விசாரணைக் காட்சியில் தனக்கு அந்த தொடுதல் போய்விட்டது என மனப்பூர்வமாக உதய் கூறுவதும்
மறக்கமுடியாத முத்திரைக் காட்சி.
அசோக் என்ற
எலும்பு மருத்துவர், மைனர் பெண்ணை காதல் செய்து கர்ப்பிணியாக்கி விடுவார். அதை சரிசெய்ய
உதய்யை கூட்டி வந்து பேசும் காட்சியும் அப்போது உதய் முகத்தில் காட்டும் வெறுமையும்
அற்புதமானது.
உதய் தனது
அம்மா, அடுத்து காவ்யா, பாத்திமா என ஒவ்வொருவரையும் மெல்ல புரிந்துகொள்வதுதான் படம்.
முதலில் தான், தனது உணர்வுகள் என ஒரு ஆதிக்கவாதியாக இருப்பவர், முழந்தாள் பணிந்து தனது
தோழியாக இருக்கவேண்டுமென பாத்திமாவின் திருமணத்தில் பேசும் கடைசிக் காட்சி இயக்குநர்
யாரென தேட வைக்கிறது.
படத்தில்
காதல் தொடர்பான பாடல் காட்சிகள், படம் சொல்ல வரும் விஷயங்களின் இயல்பைக் குலைக்கின்றன.
அமித் திரிவேதி பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் படத்தின் போக்கில் மான்டேஜாக அவை
வந்தால் சரி. தனியாக பார்ட்டி பாடல் எதற்கு என புரியவில்லை.
ஜங்லி பிக்சர்சிற்கு
இந்த படம் முக்கியமானது. இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் கதைகள் நம்பிக்கையான சினிமாவை
கண்முன் காட்டுகின்றன. வாழ்த்துகள்.
பெண்களைப்
புரிந்துகொள்ள
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக