கொலை, சித்திரவதைக்கு எளிதில் இணங்கும் கொலைக்கூட்டாளிகள்

 









கொலை செய்யும் இலக்கில் அனைவரும் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இரண்டு பேர் சந்திக்கிறார்கள். அவர்கள் இருவருமே பிறரை கொலை செய்வதில் சித்திரவதை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ராய் நோரிஸ், லாரன்ஸ் ஆகியோர் இணைந்து பெண்களை வேனில் கடத்தி சித்திரவதை செய்து கொன்றனர். இவர்கள் இருவரும் சிறையில் சந்தித்து மாட்லாடி நட்ப்பை வளர்த்தினர். அப்போதுதான் இருவருக்குமே பிறரை துயரப்படுத்தி கொல்வதில் ஒத்த எண்ணம் இருப்பது தெரிய வந்தது. அப்புறம் எதற்கு தாமதம் என களத்தில் இறங்கினர்.

இருவருக்குமே பெண்களை துயரப்படுத்தி வல்லுறவு செய்து சித்திரவதை செய்வதில் அப்படியொரு சந்தோஷம் இருந்தது. எனவே தெளிவாக சிறையல் திட்டம் தீட்டியவர்கள், தண்டனை முடிந்தவுடன் வெளியே வந்தனர். வந்தவுடன் லாஸ் ஏஞ்சல்சில் வேன் ஒன்றை காசு போட்டு வாங்கினர். அதன் செல்லப் பெயர் மர்டர் மேக். 1979ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சிண்டி என்ற பெண்ணை வேனில் கடத்தினர். வேனில் வைத்தே அந்த பெண்ணை பிசைந்து பதம் பார்த்து சாறு குடித்தனர். பிறகு கோட் மாட்டும் ஹேங்கரை வைத்து கழுத்தை நெரித்து கொன்றனர். ராய் நோரிஸ், லாரன்ஸ் ஆகியோர் இருவரும் சிண்டியின்  இறந்த உடலைத் தூக்கி எறிந்துவிட்டு சென்றனர்.

பிறகு இரண்டு இளம்பெண்களை வல்லுறவு செய்துவிட்டு மலை ஒன்றில் உடலை தூக்கியெறிந்துவிட்டு சென்றனர். வல்லுறவு செய்யும் வேகத்தில் ஒரு பெண்ணை மட்டும் உயிரோடு விட்டுவிட்டனர. அந்த பெண் சும்மாவா இருப்பார்? நேராக சென்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார். விசாரணையில் நோரிஸ் ஐந்து கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு நாற்பத்து ஐந்து ஆண்டுகள் சிறை கிடைத்தது. இன்னொருவரான லாரன்சுக்கு மரணதண்டனை கிடைத்தது. 

அடுத்த கூட்டுக்கொலையாளிகள் கதை ஒன்று உள்ளது. இதில் ஒருவர் காவல்துறையில் மாட்டியது சுவாரசியமானது. அவர் அவரது நண்பரை சுட்டுக்கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். நான் தற்காப்பிற்காகவே எனது நண்பனைக் கொன்றேன் என்றார். அவர் அப்படி நண்பரை எதற்காக, ஏன் கொன்றார் என்பதை காவல்துறை விசாரித்தபோதுதான் ஹென்லி, கோரல், டேவிட் ப்ரூக்ஸ் ஆகியோர் கூட்டு கொலையாளிகளாக செயல்பட்டு 27 நபர்களை கொன்றது உலகத்திற்கு தெரிய வந்தது. இதில் ப்ரூக்ஸ் வேலை எங்கள் வீட்டுக்கு வந்தால் இருநூறு டாலர்கள் தருகிறேன் என பலருக்கும் ஆசை  காட்ட வேண்டியது. இதில் சரியென உடன்பட்டு வருபவர்களை கேண்டிமேன் என அழைக்கப்படும் குழு தலைவர் கோரல் வல்லுறவு செய்து சித்திரவதை செய்து கொல்வார். இவருக்கு உதவி செய்து வந்தவர்தான் ஹென்லி. இவர்தான் திடீரென புரட்சி எண்ணங்கள் வந்து குழு தலைவரான கேண்டிமேனை சுட்டுக் கொன்றார். இவர்கள் கொன்ற நபர்களில் பத்து வயது சிறுவனும் கூட அடக்கம் என்றால்  பார்த்துக்கொள்ளுங்கள். கேண்டிமேன் இறுதியாக ஹென்லியை கொலை செய்ய முயன்றபோதுதான் அவர் கேண்டிமேனை தீர்த்துக்கட்டினார். காவல்துறையினர் ஹென்லி, ப்ரூக்ஸ் ஆகிய இருவருக்கும் நீதிமன்றத்தில் நிறுத்தி ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தனர்.

இதில் நன்றாக பார்த்தால் கேண்டி மேன் என்பவரின் ஆணைக்கு இணங்க இருவர் வேலை பார்த்துள்ளனர். இப்படி மனநிலை சீராக இல்லாத ஆட்களை எளிதாக சாடிச ஆட்கள் வளைத்து விடுவார்கள். அதற்கு கீழேயுள்ள கதையும் முக்கியமான உதாரணம்.

1980ஆம் ஆண்டு ராபின் கெச்ட் என்பவர், சிகாகே ரிப்பர்ஸ் அல்லது ரிப்பர் கிரியூ என்ற குழுவைத் தொடங்கினார். இதில் ஆண்ட்ரூ, தாமஸ், ஸ்ப்ரிட்சர் என மூவர் இருந்தனர். இவர்கள் ராபின் கெச்ட் என்பவரின் செயல்பாடு, சாத்தான் வழிபாடு, சடங்கு மீது ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். இதனால் அவர்கள் தங்களுடைய வாகனத்தில் நபர்களைப் பிடித்து குறிப்பாக பெண்களை… வல்லுறவு செய்து அடித்து உதைத்து உடல் உறுப்புகளை வெட்டி சாத்தானுக்கு ஆகுதி செய்து கொலைகளை செய்து வந்தனர். ஒரு பெண்ணை வண்டியில் கடத்தில் அதை நகருக்குள் ஓட்டும்போது வல்லுறவு செய்யப்பட்டுவிடுவார். பிறகுதான் அந்த பெண்ணை ராபினுக்கு விருந்தாக அனுப்புவார்கள்.

அவர் பெண்ணைக் கொன்று உடல்பாகங்களை வெட்டி பைபிளை படித்தபடி இறைச்சியை உண்பார். இதில் ஏராளமான பெண்கள் இறந்துபோனார்கள். ஆனால் வேனிலில் ஒரு பெண்ணை கடத்தும்போது அந்தபெண் எப்படியோ தப்பித்துவிட்டார். பிறகுதான் வேடிக்கை தொடங்கியது. ராபின் சடங்கு செய்து இறந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தின்றாலும் கூட அவர் கொலை செய்யவில்லை. எனவே, கொலை செய்த இரு சகோதரர்கள், ஸ்ப்ரிட்சர் ஆகியோர் மாட்டிக்கொண்டார்கள். சகோதர ர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஸ்ப்ரிட்சருக்கு வாழ்க்கை முழுவதும் சிறையில் கழிக்கும்படி தண்டனை கிடைத்தது.

 

 

 


கருத்துகள்