நெக்ரோபிலி - பிணங்களோடு மனிதர்கள் கொள்ளும் உடலுறவு ஆசை

 














அசுரகுலம்

ரத்த சாட்சி 1.0

இறந்தவர்களோடு வாழ்தல்.



இறந்த காதலியை தோளில் போட்டுக்கொண்டே திரிதல், அந்த உடலுடன் வாழ்தல், கொலை செய்து அல்லது இறந்த பிணங்களை தோண்டியெடுத்து அறையில் அருங்காட்சியகம் போல அமைப்பது, அழும் தசை துர்நாற்றத்தை சகித்துக்கொள்வது என வாழும் மனிதர்கள் உலகில் உண்டு. இதில் உடல்ரீதியான இன்பம் அனுபவிக்கும் பழக்கங்களையும் மனிதர்கள் செய்கிறார்கள்.

இதை உளவியல் மருத்துவர்கள் நெக்ரோபிலியா என்கிறார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரசிப்பது, மனநல குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு பிடித்தமானது.

உடலே விதையாக..

இங்கிலாந்தில் நடந்த கதை இது. அங்குள்ள லண்டன் நகரில் ப்ரௌன் என்பவர் ஒரு இடத்தை வாங்கினார். அறையில் இருந்து வரும் துர்நாற்றம் அவரை என்னடா இது என வெறுப்பு கொள்ள வைத்தது. சுவரில் ஒட்டியிருந்த வால்பேப்பரை உருவி எலி செத்திருக்கிறதோ என பார்த்தவர் நொடியில் முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார். சுவரில் கான்க்ரீட் கலவையில் மூடியபடி நிர்வாணமாக ஒரு உருவம். பெண். தொட்டுப் பார்த்து உறுதி செய்தவர், உடனே காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சுவரை இடித்துப் பார்க்க இன்னும் இரண்டு பிணங்கள் கிடைத்தன. அங்கு கிடைத்த பெண்களின் பிணங்களை சோதனை செய்து பார்த்தால் வல்லுறவு செய்யப்பட்டு பிறகு கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருந்தனர்.

 உடனே காவல்துறை இடத்தின் முந்தைய உரிமையாளரான கிரிஸ்டியை தேடியது. ஆள் எங்கு தேடியும் காணோம். உடனே கிரிஸ்டியின் வீடு, தோட்டம் என காவல்துறை ப்ரௌன் வீட்டில் செய்த அதே முறையில் தேடுதலை செய்ய கிரிஸ்டியின் மனைவி ஈதல், பிணமாக வீட்டில் தரையில் கண்டெடுக்கப்பட்டார். தோட்டத்தில் நிறைய கை, கால் எலும்புகள், மண்டையோடுகள் கிடைத்தன. அந்த ஊர் பூந்தி, டெய்லி புஷ்பம் ஆகிய நாளிதழ்கள் வீட்டில் கோரம் என தலைப்பிட்டு செய்திக்கட்டுரைகளை வளைத்து வளைத்து எழுதித்தள்ளின. செய்திகளை பொழுதுபோக்காக மாற்றத் தெரிந்தவன்தானே இன்று வித்தைக்காரனாக இருக்க முடியும்.

பெண்களை விஷவாயு மூலம் சுயநினைவிழக்க வைத்து வல்லுறவு செய்து கொன்றார் கிரிஸ்டி. பெண்களின் குறியில் உள்ள முடியை மட்டும் தனியாக வெட்டி வைத்துக்கொண்டார்.

பெண்களின் பிணங்களை சுவற்றில் சிமெண்டில் புதைத்து வைத்து அந்த துர்நாற்றத்துடனே மனைவியுடன் வாழ்ந்திருக்கிறார் கிரிஸ்டி. அந்த பெண்களின் வரிசையில் அவர் மனைவி கடைசியாக சென்று சேர்ந்தார். பெண்களை கொல்வதன் மூலமாக அவர்களை கட்டுப்படுத்தி, அவர்களின் பிணங்களை சுற்றி புதைப்பதன் மூலம் தன் வாழ்க்கை உயிர்ப்புடன் இருப்பதாக கிரிஸ்டி நினைத்தார். அப்படித்தான் வாழ்ந்தார்.

நெக்ரோபிலி

எதிர்க்காத எந்த மறுப்பும் சொல்லாத இணையர் என்ற வகையில் பிணங்களை சிலர் பாலியல் தூண்டுதல் தரும் விஷயங்களாக பார்க்கிறார்கள். சிறுவயதில் மோசமான அனுபவங்கள் ஏற்படுவது, வாழ்க்கை நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நடப்பது, அதனால் பாதிப்பு அடைவது ஆகியவை ஒருவரை வன்முறையான எண்ணம் கொண்டவராக பிறரது வாழ்வை அழிக்கும் தன்மையில் மாற்றுகிறது.

நெக்ரோபிலி குறைபாடு கொண்டவர்கள் வாழும் மனிதர்களுடன் உரையாடல் நடத்துவதை தவிர்ப்பார்கள், ஒளியை ஈர்க்கும் உடையை அணிவார்கள், பளிச்சென்ற பிறரைக் கவரும் உடைகளை புறக்கணிப்பார்கள், பிரச்னைக்கான தீர்வு என்பதை வற்புறுத்தல், வன்முறை மூலம் அடைய முயல்வார்கள். பெரிதாக எவர் குறித்தும் அக்கறை இருக்காது.

ஒருவரைக் கொன்று அந்த உடலைப் பாதுகாப்பது

பிணத்தை பாதுகாத்து பாலியல் இன்பம் பெறுவது பொதுவான நெக்ரோபிலி ஆட்கள் பழக்கம்.

 கற்பனையாக பல்வேறு செயல்களை நினைத்து பார்ப்பது என்பதும் உண்டு.

மருத்துவர் ஜொனாதன் ரோஸ்மன், பிலிப் ரெஸ்னிக் ஆகியோர் உருவாக்கிய கோட்பாடுகளே மேற்கூறியவை.

நெக்ரோபிலி குறைபாட்டிற்கு ஆட்படுபவர்களில் ஆண்களே அதிகம். 90 சதவீதம்.  பிணங்களைப் பார்ப்பதும் அதோடு உறவு கொள்வதும் சாதாரண மனிதர்களுக்கு எளிதல்ல. ஆனால் மருத்துவமனை, கல்லறை ஆகிய இடங்களில் வேலை செய்பவர்களுக்கு எளிது. எனவே, அங்குதான் நெக்ரோபிலி ஆட்கள் சுற்றி வருவார்கள். வேலையும் செய்வார்கள்.

ஒருவரின் உடலைத் தொடாமல் பார்த்தாலே பாலியல் இன்ப நிலைக்கு செல்பவர்களை பிளாடோனிக் நெக்ரோலிஸ்ட் என்று மருத்துவர்கள் வரையறுக்கிறார்கள். இவர்கள் யாரையும் கொலை செய்வதில்லை.ஆ னால் பிறர் ஆபத்தானவர்கள்தான்.  ஒருவரை நெக்ரோபிலி என மருத்துவர்கள் வரையறுக்கிறார்கள் என்றால் அவர் பிணங்களின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதே பொருள். உயிருடன் வாழும் மனிதர்களின் மீது அவர் அக்கறை கொண்டவர் அல்ல. சிலர் உயிருடன் வாழ்பவர்களைக் கொன்று அவர்களின் உடல்களை தங்களோடு வைத்துக்கொண்டு உறவு கொள்வது, உடல் உறுப்புகளை சிதைப்பது ஆகியவற்றை செய்வார்கள். இவர்களை முழுமையான நெக்ரோபிலி என கூறுவது கடினம்.

உடலுறவு என்பது பெண்தான் சந்தோஷ|ம் கொடுப்பவள் என புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இந்த செயலில் ஆண், பெண் என இரு பாலினத்தவருக்குமே மகிழ்ச்சி உண்டு. ஒருவருக்கு மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால், அதன் பொருள் மகிழ்ச்சி பெறுபவர் ஒரு சுயமோகியாக இருக்க வாய்ப்புண்டு. இந்த வகையில் பிணத்தை உடலுறவுக்கான கருவியாக பயன்படுத்துபவர் இப்படித்தான் இருக்கிறார்.

இலினாய்சில் டெஸ் பிளெய்னெஸ் என்ற இடம். அங்கு வாழ்ந்த ஜான் என்பவரின் வீட்டு அருகில் கடுமையான துர்நாற்றம் வீசியது. பிணம் அழுகியது போன்ற வாடை. எனவே,  அந்த இடத்தை சோதிக்க காவல்துறை அதிகாரி நிர்வாகத்திடம் வாரண்ட் வாங்கினார். சோதித்ததில் 33 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் பல உடல்களில் கையும், காலும் மாறியிருந்தன. ஜான் வெய்ன் கேசி என்பவர்தான் குற்றவாளி. அவர் ஆரோக்கியமான சிறுவர்களை உடலுறவுக்கு ப் பயன்படுத்தி பிறகு மனதில் எழுந்த குற்றவுணர்ச்சிக்கு தண்டனையாக சிறுவர்களைக் கொன்று சாக்கடையில் வீசினார். இறந்த பிணங்களுடன் சிலமுறை உடலுறவும் கொண்டார் ஜான்.

பிணம் சிதைந்து போனதால் யாருடைய பிள்ளை என எவராலும் அடையாளம் கூறமுடியவில்லை. எனவே, தடய அறிவியல்துறை ஆறு வாரங்கள் வேலை செய்து பிணங்களின் சிதைந்துபோன பாகங்களை ஒன்றாக சேர்த்தனர். பிறகுதான் அவர்களை அடையாளம் காண முடிந்தது. ஜான் கேசி காரணமாக, ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதத்தை வெற்றிகரமாக ஊடகங்கள் நடத்தின. 1994ஆம் ஆண்டு கேசிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. வீட்டுக்கு கீழேயே பிணங்களை புதைத்த வைத்தார் ஜான். பிணங்கள் அழுகிய வாடை ஜானுக்கு பிரச்னை இல்லை. ஆனால் மற்றவர்கள் அரசு நிர்வாகத்திற்கு எந்த புகாரையும் தரவில்லை. ஜான் கொல்ல ஆரம்பித்த தொடக்க காலத்தில் அவரது இரண்டாவது மனைவியும் அம்மாவும் வீட்டில் இருந்தனர். பிறகுதான் அவர்கள் அங்கிருந்து விலகினர். ஆனால் அவர்களும் ஏதும் சொல்லவில்லை. செப்டிக் டேங்க் கசிவு என நாற்றத்திற்கு ஜான் காரணம் சொன்னார். அதை எளிதாக சரி செய்ய முடியவில்லை என்று சுற்றியிருந்தவர்களும் நம்பியது எப்படி என்று யாருக்கும் புரியவில்லை.  தான் கொல்பவர்களின் உடலோடு சிலமணிநேரம் தனியாக இருப்பது ஜானுக்கு பிடிக்கும். கூடவே இரவில் பிணத்தை அருகில் படுக்க வைத்து தூங்குபவர் பிறகு பிணத்தை காலையில் எழுந்ததும் மேலேயுள்ள பரணில் எடுத்து வைத்துவிடுவார்.


கருத்துகள்