உங்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நூல் - டெய்லி ரிச்சுவல்
டெய்லி ரிச்சுவல் மாசன் குரே சுயமுன்னேற்ற நூல் 171 பக்கம் தினசரி சடங்கு என கலைஞர்களுக்கு என்ன இருக்கும்? கட்டுரை, நாவல், ஓவியம், திரைப்படம் இதுதானே? அதை எப்படி உருவாக்குகிறார்கள், அதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள். நூலில் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கட்டுமான கலைஞர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள் தங்களின் பழக்க வழக்கம் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களைப் பற்றி கூறுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி சுயசரிதை எழுதும் பத்திரிகையாளர்கள் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். நூலை வாசிப்பவர்களுக்கு தேவையான குறிப்புகளும் கூட நூலின் பின்பக்கத்தில் உள்ளது. நூல்களை தேடி எடுத்து பார்த்துக்கொள்ளலாம். சில எழுத்தாளர்கள் திருமணம் செய்தாலும் கூட எழுத்தாளராக சாதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காகவே ஒருவர் வேலைக்கு செல்வது இன்னொருவர் எழுதுவது என திட்டமிடுகிறார்கள். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், இன்னொருவர் தோல்வியுறுகிறார். இந்தவகையில் எழுத்தாளர் கார்சன், ரீவ்ஸ் ஜோடியில் கார்சன் வெற்றிபெறுகிறார். அதாவத...