அறியப்படாத விடுதலை வீரர்களுக்கு புதிய கௌரவம்! - விடுதலைப் பெருநாள் சிறப்பு திட்டம்
இந்திய அஞ்சல்தலை |
சுதந்திர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் |
அறியப்படாத உள்ளூர் விடுதலைப் போராட்ட
வீரர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிடும் இந்திய அரசு!
எழுபத்தைந்தாவது
விடுதலை பெருநாள் விழா தொடர்பான நிறைய திட்டங்களை இந்திய அரசு தொடங்கியது. அதில் முக்கியமானது,
வரலாற்றில் இடம்பெறாத உள்ளூர் விடுதலை வீரர்களை ஆவணப்படுத்துவது இந்த வகையில் இந்திய
அரசின் கலாசாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 25 வரலாற்று ஆய்வாளர்களோடு இணைந்து
விடுதலை போராட்ட வீரர்களை கண்டறிய முயன்றது.
இந்திய அரசின்
முயற்சியைத் தொடர்ந்து நாட்டிலுள்ள மாநில அரசுகளின் உதவியோடு தொடக்க கட்டமாக 10 ஆயிரம்
விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் உருவங்களை இந்திய அரசு
அஞ்சல் தலையாக மாற்றி அவர்களை பெருமைப்படுத்தவிருக்கிறது. தனிநபர்கள், குறிப்பிட்ட
தொகையை அஞ்சல் அலுவலகத்தில் கட்டி அவர்களின் புகைப்படங்களைக் கொடுத்தால் அதையே அஞ்சல்
தலையாக மாற்றித் தரும் செயல்பாடு உள்ளது. அதிலிருந்து விடுதலை வீர ர்களின் அங்கீகாரம்
எப்படி மாறுபடுகிறது என தெரியவில்லை.
உத்தரப்பிரதேசத்தைச்
சேர்ந்தவர் மகேந்திர பிரதாப் சிங். இவர் உள்ளூர் கலைஞர்கள் உதவியுடன் பல்வேறு கலைப்பொருட்களை
தயாரித்து விற்று வந்தார். வெளிநாட்டு பொருட்களை எதிர்த்த சுதேசி இயக்க செயல்பாட்டாளர்.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வெளிநாட்டு மக்களின் உதவியைக் கோரியவர். இவரது தியாகத்தை
போற்றும் வகையில், இந்திய அரசு அலிகார் பல்கலைக்கழகத்தில் நினைவு அடிக்கல் ஒன்றை உருவாக்கியது.
முன்னர் செய்த
தவறுகளை திருத்தி புதிய இந்தியாவை உருவாக்குவதாக கூறும் இந்திய பிரதமர், அடையாளம் காணப்படாத
விடுதலை வீரர்களைக் கண்டுபிடித்து அவர்களை அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
‘எனது தாய்மண்,
எனது தாய்நாடு’ என்ற பெயரிடப்பட்ட விழா, இம்மாதம் நடைபெறவிருக்கிறது. அதில் இதுவரை
தொகுக்கப்பட்ட விடுதலை வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இரண்டரை லட்சம்
விடுதலை வீரர்கள் பெயர்கள், நாடெங்கும் நடைபெறும் விழாக்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.
உ.பியைச்
சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஹிமான்சு சதுர்வேதி. இவர், தனது மாநிலத்தில் 400 விடுதலை
வீரர்களைப் பற்றி தேடி ஆய்வுசெய்து பட்டியல் தயாரித்து இந்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
விடுதலை வீரர்களை தேடி அவர்களது அனுபவங்களை கேட்டதில் ஹிமான்சு, ஏராளமான ஆச்சரியத்திற்கு
உள்ளாகியிருக்கிறார்.
கோரக்பூரைச்
சேர்ந்தவரான பாபா ராகவ் தாஸ், அங்கு கல்வி சார்ந்து உழைத்து முக்கியமான விடுதலை வீரர்களில்
ஒருவர். இவர் மதன் மோகன் மாளவியாவைப் பின்பற்றி இயங்கி வந்தார். மக்களிடையே உணர்வு
பொங்கு விடுதலை உரையாற்றும் வல்லமை பெற்றவர்.
தனது உரைக்காக
சிறையில் அடைக்கப் பட்டவர் விடுதலையானபிறகு, மதன்மோகன், மரணதண்டனை விதிக்கப்பட்ட
172 மக்களை விடுவிக்கும் பணியில் இணைத்துக்கொண்டார். நீதிமன்றத்தில் பாபா ராகவ் தாஸின்
செயல்பாடுகளால், பத்தொன்பது பேர்களுக்கு மட்டுமே மரணதண்டனை விதிக்கப்பட்டது. பிறருக்கு
சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா, சுதந்திரம் பெற்றபிறகு ராகவ் தாஸ், கல்வி சார்ந்து
இயங்கத் தொடங்கினார். கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு ராகவ் தாஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குஜராத்தில்
ஆய்வுசெய்த வரலாற்று ஆய்வாளர் ஆத்யா, போராட்டக்காரர்களின் 200 பெயர்களை அடையாளம் கண்டிருக்கிறார். இதில் நாற்பதுக்கும்
அதிகமானவர்கள் பெண்கள் என்பது முக்கியமானது. 1857ஆம் ஆண்டு தொடங்கி 1947ஆம் ஆண்டு வரையிலான
காலகட்டத்தில் போராடிய விடுதலை வீரர்களின் தகவல்கள், பெயர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அமிதா ஷா
ஓபன் வார இதழ்
14 ஆகஸ்ட்
2023
படம் - டைம்ஸ் நவ், பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக