கனவில் வன்முறை செய்யும் மனிதர்கள் - பாராசோம்னியா ஆபத்து
பாராசோம்னியா
ஆபத்து
இன்சோம்னியா
பிரச்னையே பலருக்கும் தீரவில்லை. ஆனால், இப்போது வந்திருப்பது பாராசோம்னியா. இன்சோம்னியா
பிரச்னை என்பது தூக்கமின்மை. தூங்காமல் ஏதோ
ஒன்றை இரவிலும் செய்துகொண்டிருப்பார்கள். தூங்கும் நேரம் மிக குறைவாக இருக்கும். பாராசோம்னியாவில்
வன்முறையான செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக குற்றவழக்குகளும் பதிவாகி
வருகின்றன. குற்றவாளி கொலையை, திருட்டை செய்கிறார் என்றால் அதற்கென ஒரு காரணம் வேண்டும்
அல்லவா? தூக்கத்தில் செய்யும் விஷயங்கள் ஒருவருக்கு நினைவிலேயே இல்லாதபோது அவரை நீங்கள்
என்ன செய்வீர்கள்?
இங்குதான்
கிராமர் போர்னிமன் துணைக்கு வருகிறார். இவர், ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் என்ற அமைப்பில்
வேலை செய்துவருகிறார். நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து என பறந்து சென்று பாராசோம்னியா
பற்றி விளக்கம் கொடுத்து வருகிறார். நீதிபதிகளுக்கு, ஜூரிகளுக்கு தூக்கத்தில் ஒருவர்
இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்பது பற்றிய தெளிவும் அறிவும் கிடையாது. எனவே, கிராமர்
அதை அவர்களுக்கு விளக்கி வருகிறார்.
2006ஆம் ஆண்டு
ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. நரம்பியல் ஆய்வாளர் மார்க்
மகோவால்ட், உளவியலாளர் கார்லோஸ் ஸ்னெக் ஆகிய இருவரும்தான் இதை தொடங்கினர். 2020ஆம்ஆண்டு
மகோவால்ட் காலமானார். பிறகுதான் கிராமர் நிறுவனத்திற்குள் வந்தார். அதன் துணை நிர்வாக
இயக்குநராக உள்ளார் . 400 பாராசோம்னியா வழக்குகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
தூக்கத்தில்
நடக்கும் வியாதியை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது இந்த வியாதி
இன்னும் பரிணாமவளர்ச்சி பெற்று தூக்கத்தில் சாப்பிடுவது, காரோட்டுவது வரையில் வந்துவிட்டது.
பாராசோம்னியாவில்
கனவு காண்பவர், வன்முறையான சம்பவங்களை கனவாக காண்கிறார். இதை உண்மையாக நினைத்து அருகிலுள்ள
காதலி, மனைவியை கொல்வது, தாக்குவது எளிதாக நடைபெறுகிறது. இதைப்பற்றி ஸ்லீப் ஃபார்ன்சிஸ்
நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை தருகிறது. இதன்மூலம்
குற்றவாளிகளைப் பற்றி எளிதாக அறிய முடிகிறது. 1980ஆம் ஆண்டு, மகோவல்ட், கார்லெஸ் ஆகியோர்
ஆர்பிடி ரெம் பிஹேவியர் டிஸார்டர் குறைபாட்டை கண்டறிந்தனர். இந்த நிலையிங் தூங்குபவர்
உதைப்பது குத்துவது ஆகியவற்றை செய்கிறார். ஆனால், அவருக்கு உண்மையில் என்ன நடந்தது
என்பது தெரியாது. கார்லோஸ், இந்த குறைபாட்டை 1982ஆம் ஆண்டு ஆவணப்படுத்தினார். ஆய்வில் 67 வயதான நோயாளி டொனால்ட். இவர் கனவு கண்டு
அதில் கால் பந்து விளையாடுவதாக நினைத்தார். அந்த வேகத்தில் வீட்டில் இருந்த பல்வேறு
பொருட்களை உடைத்தெறிந்தார். தூக்கத்தில ரெம் நிலையில் இருந்தபோது இப்படி அதிரடியாக
நடந்தகொண்டார்.
இப்படி ஆய்வு
செய்த நோயாளிகளின் அடிப்படையில் 1986ஆம் ஆண்டு, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அதில்தான்
ஆர்பிடி பற்றி முதல்முறையாக குறிப்பிட்டிருந்தனர். அறிவியல் உலகிற்கே அது புதிது. வயதானவர்கள்,
பார்க்கின்சன் வியாதியஸ்தர்களுக்கு ஆர்பிடி ஏற்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
2019ஆம் ஆண்டு
ஸ்லீப் ஃபாரன்சிஸ் வெளியிட்ட அறிக்கையில், உறக்க குறைபாடுகளில் வன்முறை வெளிப்படுவதை
சுட்டிக்காட்டியது. செக்சோமேனியா என்ற குறைபாட்டில், கொலையும், பாலியல் ரீதியான தாக்குதலும்
கூட இருந்தது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், சிந்திப்பதை விட குறைவான
கட்டுப்பாட்டையே செயலில் கொண்டிருக்கிறோம் என்பதைதான். செயல்பாடு எல்லை மீறும்போது
காவல்துறையினரும், நீதிமன்றமும் தலையிட நேருகிறது.
நோய் பற்றி
அறிய aasm.org
ஸ்டீவ் நாடிஸ்
டிஸ்கவர்
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக