ரிசார்ட்டில் நடைபெற்ற மர்மக் கொலை !
குடும்ப உறவுகளால்
ஏற்பட்ட கொலைகள்
1981ஆம் ஆண்டு
அமெரிக்காவின் சியரா நெவாடா மலைப்பகுதியில் அமைந்துள்ள கெடி எனும் ரிசார்டில் படுகொலை
நடந்தது. இதில், ஷூ சார்ப், அவரது மகன் ஜானி,
மகனின் தோழி டனா விங்கேட் ஆகியோர் கொல்லப்பட்டனர். உடல் அருகிலிலேயே கத்தி, சுத்தியல்
கிடந்தன. கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் இருந்து பீறிட்ட ரத்தம் சுவரில், மேற்கூரையில்
படிந்திருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தது.
இவர்களைக்
கட்ட எலக்ட்ரிக் வயர், டேப் பயன்பட்டிருந்தது. அடுத்த அறையில் மூன்று பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அடுத்த
வீட்டில் தனது தோழியின் வீட்டில் உறங்கிய ஷீலா, ரிசார்டிற்கு வந்து பார்க்கும்போது,
நடந்த கொலையைப் பார்த்து அவருக்கு என்ன செய்வதென தெரியாமல் பயத்தில் உறைந்திருக்கிறார்.
பின்னர் உதவிகோரி அலறியிருக்கிறார்.
ரிசார்ட்டில்
இருந்து காணாமல் போன ஷீலாவின் சகோதரி டினா,
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐம்பது கி.மீ.
தொலைவில் மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டார். ரிசார்ட்டில் இருந்தவர்களில் பிழைத்தவர்
ஷூ ஷார்ப்பின் மகள் ஷீலா மற்றும் மூன்று பிள்ளைகள் மட்டும்தான். அவருக்கு இப்போது ஐம்பது
வயதாகிறது. தாய், தங்கை, சகோதரன் கொல்லப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகளை பிடிக்க
முடியாத வருத்தம் மனதில் இருக்கிறது. இதில் காவல்துறை சந்தேகப்பட்ட மார்ட்டி ஸ்மார்ட், பௌபெடே என இருவரும் இறந்தே போய்விட்டனர்.
கொலை செய்ததாக மார்ட்டியை காவல்துறை முதலில் சந்தேகப்பட்டது. இவர் ஷூ ஷார்ப் இறந்த
சில நாட்களில் அங்கிருந்து வேறு நகருக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.
மார்ட்டிக்கும்
மரிலீன் என்ற அவரது மனைவிக்கும் இருந்த பிரச்னைகளில் ஷூ ஷார்ப் தலையிட்டு ஆலோசனை சொன்னார்.
அதனால், மரிலீன் மார்ட்டியை விவகாரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். இந்த தலையீட்டால்,
ஆத்திரமடைந்த மார்ட்டி, ஷூ ஷார்ப்பை கொலை செய்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்தது. பின்னாளில்,
அவர் மரிலீனுகுக எழுதியிருந்த கடிதம் காவல்துறைக்கு கையில் கிடைத்தது. அதில் உன்னால்
நான்கு உயிர்கள் போய்விட்டது என மார்ட்டி எழுதியிருந்தார். ஆனால் அதை காவல்துறை ஆதாரமாக
ஏற்கவில்லை.
ஷூ ஷார்ப், அப்போதுதான் கனெக்டிகட்டில் ராணுவத்தில்
அதிகாரியாக இருந்த கணவரிடமிருந்து பிரிந்திருந்தார். அவரது கணவரால், ஷீலா, டினா என
இரு பெண் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தனர். அவரும் உடல், மன சிக்கல்களை
அடைந்திருந்தார். ஷூவுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். அவர்களை நன்றாக முறையில் வளர்க்க நினைத்துதான், கெடி ரிசார்ட்டிற்கு வந்து
தங்கியிருந்தார். அவருக்கு தம்பி ஒருவர் இருந்தார். அவர் ரயில் பாதை சார்ந்த பணியை
செய்து வந்தார். 2016ஆம் ஆண்டு, குப்பைகளை பொறுக்குபவர் கொடுத்த தகவல் அடிப்படையில்தான்,
துருப்பிடித்த சுத்தி ஒன்றை காவல்துறை மீட்டது. குளம் ஒன்றின் அருகில் கிடந்த சுத்தி,
கொலையில் பயன்பட்டிருந்தது. ஷூ ஷார்ப் கொலை செய்யப்பட்டபிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான்
டினா கொலை செய்யப்பட்ட இடம், உடலின் மிச்சங்கள் கண்டறியப்பட்டன.
2018ஆம் ஆண்டு டிஎன்ஏ சோதனைகளை காவல்துறை முயன்று
பார்த்தது. அப்போதும் கூட எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை.
ஷீ ஷார்ப்,
1980ஆம்ஆண்டு கெடி ரிசார்டிற்கு வந்து தங்கிவிட்டார். அங்கே இருந்த எல்க்ஸ் என்ற லாட்ஜில்
வேலை செய்து வந்தார். மாணவர்களுக்கு வணிக வகுப்புகளை எடுக்க திட்டமிட்டிருந்தார். அவருக்கு
அவரது பிள்ளைகளை நல்லபடியாக உருவாக்கிவிட ஆசையிருந்தது. ஆனால், அதற்குள் அவர் கொலை
செய்யப்பட்டுவிட்டார். தனியாக இருந்து ஐந்து பிள்ளைகளை வளர்த்து வந்தவரை, ஊர் முழுக்க
பல்வேறு வதந்திகள் பரவி சித்திரவதைபடுத்தின. தவறான ஆட்களோடு உறவு கொண்டிருந்தார். போதைப்பொருட்களை
விற்றார் என அவதூறுகளை சிலர் கூறினர். ஆனால், காவல்துறை விசாரித்துப் பார்த்துவித்து
அவை வதந்திகள் என அதை நிராகரித்துவிட்டனர்.
கீத் மர்பி
பீப்புள்
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக