இடுகைகள்

பிராண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!

படம்
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம். சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந...

குழந்தைகளை வாடிக்கையாளர்களாக்கி வளைக்கும் பெருநிறுவனங்கள்!

படம்
  லியோ காபி என்றதும் உங்கள் மனதில் என்ன நினைவுக்கு வருகிறது. ஏ ஆர் ஆரின் விளம்பர இசை நினைவுக்கு வந்தால் சிறப்பு. அதைக்கடந்து ஹாரிஸ்   ஏ ஆர் ஆரின் விளம்பர இசையை முதற்கனவே பாடலில் (மஜ்னு) பயன்படுத்தியதும் நினைவுக்கு வந்தால் மிகச்சிறப்பு.   இதேபோல்தான் குஜராத்தில் தயாரிக்கப்பட்டு இந்துஸ்தான் யூனிலீவருக்கு போட்டியாக சலவை சோப், தூளை விற்ற நிர்மா நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பரம் பலருக்கும் நினைவில் இருக்கும். இப்போதும் இந்த நிறுவனம் போட்டிகளை சந்தித்து சோப்பு, சலவைத்தூளை விற்கிறது. நிறுவனத்தின் ட்ரேட்மார்க்காக பாவாடை பறக்கும் பாப்பா கூட மாற்றப்படவில்லை. நினைவு தெரிந்த நாட்களில் கேட்ட விளம்பர இசை என்பதால் மேற்சொன்னவற்றை ஒப்புக் கொள்ளலாம். இதைக் கடந்து குழந்தை   வயிற்றில் இருக்கும்போதே அம்மாவின் இதயத்துடிப்பு, உடலில் செல்லும் பல்வேறு திரவங்களின் ஒலியைக் கேட்கிறது. கர்ப்ப காலத்தில் அம்மா கேட்கும் கார்த்திக் ஐயரின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ பாடலைக் கூட கேட்டு வைப் செய்ய முடியும். இப்படி கேட்டு வளரும் குழந்தை, அம்மாவின் இசை ரசனையை எளிதாக கற்று பின்னாளில் மகத்தான இசைக்கலைஞ...

மார்க்கெட்டிங்கில் மாஸ் மகராஜா ஆவது எப்படி? - மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி

படம்
      sample/pixabay           மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது , அதனை விற்பனை செய்வது என இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் ஏராளமான உள்நாட்டு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்கியுள்ளார் . மார்க்கெட்டிங்கின் அடிப்படை என்ன , அதில் பிரபல நிறுவனங்களாக இருந்தாலும் செய்த தவறுகள் என்ன , அதனை திருத்திக்கொள்வது எப்படி என விளக்கியுள்ளார் . ஒருவகையில் மார்க்கெட்டிங்கை பற்றி தெரியாதவர்கள் இந்த நூலைப்படித்தால் கூட அதனை எப்படி செய்வது என அடிப்படையைக் கற்றுக்கொள்ளலாம் . பெரிதாக அவர்கள் சாதிப்பார்களோ இல்லையோ , இதில் சதீஸ் கூறியுள்ள தவறுகளை நிச்சயம் செய்யமாட்டார்கள் . அந்தளவு நூலில் ஏராளமான நம் தினசரி வாழ்க்கையில் பயன்படும் பல்வேறு பொருட்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளார் . நூலை வாசிக்க உதவுவது சதீஸ் பயன்படுத்தியுள்ள மொழிதான் . நம் தோள் மீது கைபோட்டு நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பற்றி சொல்லிக்கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு மொழியுடன் நூல் உ...

நவீன காலத்திற்கு ஏற்ப கோத்ரெஜ் பிராண்டை மாற்றி அதனை சந்தையில் வேர்பிடிக்க வைத்த பெண்மணி! - தன்யா துபாஷ்

படம்
                 தன்யா துபாஷ், கோத்ரெஜ் தன்யா துபாஷ், நவீன காலத்தில் பழமையான கோத்ரெஜ் பிராண்டுகளை சிறப்பாக விற்பனை செய்யும் திட்டங்களை தீட்டி வருபவர். காலத்திற்கும், மக்களுக்கும் ஏற்றபடி கோத்ரெஜ் பிராண்டுகளில் பல்வேறு மாற்றங்களை செய்து அதன் ஆயுளை நீட்டிப்பவர் இவரே. அண்மையில் வலுவாக இருக்கும் துறைகளில் ஒரு காலையும், மாறிக்கொண்டு இருக்கு்ம் பிற துறைகளில் மற்றொரு காலை நகர்த்தியபடி இருக்கும் சூத்திரத்தை கோத்ரெஜ் நிறுவனம் கடைபிடித்து வெற்றி பெற்று வருகிறது. இதன் காரணமாகவே பலகோடி பயனர்களிடையே கோத்ரெஜ் பொருட்கள் இன்றும் சென்று சேர்கின்றன. ஹார்வர்ட் வணிகப்பள்ளியில் பட்டம் பெற்றவர், ப்ரௌன் பல்கலைக்கழகதில் பொருளாதாரம், அரசியல் அறிவியல் பயின்றவர். கோத்ரெஜ் நிறுவனத்தின் பல்வேறு நிறுவனங்களின் போர்டுகளில் உறுப்பினராக, தலைவராக, இயக்குநராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.