இடுகைகள்

வேதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருத்தலியல் உளவியலின் தந்தை ரோலோ மே!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்ட்டின் ஹெய்டெகர், ஃபிரடெரிக் நீட்சே, சோரன் கியர்கெகார்ட் ஆகியோர் அன்றை சமூக நிலைக்கு எதிராக புதிய கருத்துகளை கூறினர். இதன் வழியாக மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வழி கிடைக்கும் என நம்பிக்கை உருவாகியது. இதை இருத்தலியம் என்று கூறலாம். தன்னம்பிக்கை, தனிப்பட்ட பொறுப்பு, அனுபவங்களை எப்படி புரிந்துகொள்வது, வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்வி ஆகியவை இருத்தலிய கொள்கையில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டன. 1950ஆம் ஆண்டு, உளவியலாளர் ரோலோ மே  தி மீனிங் ஆஃப் ஆன்க்சைட்டி என்ற நூலை எழுதினார். அதில், மனிதர்களை மையப்படுத்திய உளவியல் முறையை விளக்கியிருந்தார். இதன் காரணமாக ரோலோ மே இருத்தலியல் உளவியலின் தந்தை என பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.  வாழ்க்கை என்பது முழுக்க அனுபவங்களால் நிறைந்தது. அதில் வலி, வேதனை என்பது கூட இயல்பான அனுபவங்களின் பகுதிதான். பல்வேறு அனுபவங்களை தேடுவதன் வழியாக ஒருவர். தன்னை சமநிலையுடன் வைத்துக்கொள்ள முடியும். பழக்கமான சூழலில், இலகுமான அனுபவங்களை எதிர்கொள்வதன் மூலம் உடல், மனம் என இரண்டையும் ஒருவர் சமநிலையில் வைத்துக்கொள்ளமுடியும். இப்படி பழக்கப்

இதுவே சரியான நேரம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார்   ரோபோக்கள் மேம்படுத்தப்படும்போது, மனிதர்கள் தினசரி இரண்டு மணி நேரம் வேலை   செய்தால் போதுமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகும். அப்போது மனிதர்கள் என்ன செய்வார்கள்? பொழுதுபோக்கு துறையால் ஈர்க்கப்படுவார்களா? அல்லது   அந்த துறையில் உள்ள விஷயங்களை கவனித்து சோதித்துப் பார்ப்பார்களா? இவைதான் மனிதர்களுக்கான   இரண்டு வாய்ப்புகளாக   உள்ளன. சானன் 21 ஜூலை 1981 தி நெட்வார்க் ஆஃப் தாட்   நீங்கள் கொண்டிருக்கும் வரைமுறையிலான திறன்கள் மற்றும் பரிசுகள் ஆபத்தான நண்பர்களாக உள்ளன. அவை உங்களுக்கு புரியாத தன்மையையும், சோகத்தையும் கொண்டு வருவதில்தான் நிறைவுபெறுகின்றன. உங்களது உணவு, உடை, பாவனை, மகிழ்ச்சி ஆகியவை மெல்ல சோர்வுற்றவராக மாற்றுகிறது. உங்களது மனது உணர்ச்சிகளற்றதாக, விஷயங்களை புரிந்துகொள்ளும் திறனை விரைவில் இழப்பதாக உள்ளது. சக்திவாய்ந்த மனம் நிறைய செயல்பாடுகளை செய்கிறது. குறிப்பாக, உரையாடுகிறது. நடனமாடுகிறது. இதற்கென அதற்கு காரணங்கள்,முடிவு, விழிப்புணர்வு ஆகியவை உள்ளன. இதன் வழியாக அமைதி, தெளிவு கிடைக்கிறது. தி வேர்ல்ட் வித் இன் தன்னை அ

கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

படம்
  கனவுகளின் ஆராய்ச்சி! கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.  விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.  பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறலாம். அமெரிக்காவின்

மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?

படம்
            நீண்டகால நினைவுகள் நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம் . கவன ஈர்ப்பு பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும் . பெண்களின் லோஹிப் ஜீன்ஸ் , தொட்டிச்செடி கட்டிங் , உடைகள் , ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம் . இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான் . இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால் , அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது . தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது . உணர்ச்சிகர ஈர்ப்பு உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது . நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு , தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு , நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் , மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

காமம் ஓர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகள்! - மொபியஸ் - கிம் கி டுக்

படம்
            மொபியஸ் கிம் கி டுக் ஒரு குடும்பத்தில் நடக்கும் மனைவியைத் தாண்டிய செக்ஸ் உறவு அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை படமாக எடுத்துள்ளார் . காமம் எப்படி பல்வேறு உறவுகளை குலைக்கிறது . வாழ்வில் மறக்கமுடியாத வேதனையையும் , குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை பெரும்பாலும் வசன்ங்களே இல்லாமல் கிம் கி டுக் படமாக எடுத்துள்ளார் . நிறைய இடங்களில் இந்த இடத்தில் வசனங்கள் இருந்திருக்கலாமே என நாடகமயமாக படம் பார்த்த அனைவருக்கும் தோன்றும் . ஆனால் அப்படி நினைக்கும் காட்சிகளில் உடல்மொழியான நடிப்பு மட்டுமே நம்மை கலங்க வைக்கிறது . ஆண்குறியை வெட்டுவது , அதை வாயில் இட்டு மெல்லுவது , இன்னொரு இடத்தில் ஆண் குறி மீது வாகனங்கள் நசுக்கியபடி செல்வது , காமத்தை அனுபவிக்கும்போது வலியை இன்பத்துடன் ஏற்று மார்பகங்களை தடவுவது , காதுகளை நாக்கில் உரசுவது என பல்வேறு காட்சிகள் மிரட்டலாகவே உள்ளது . தந்தை தான் செய்த காரியத்தால் மகன் தண்டனை ஏற்பதை அறிந்து கண்ணீர் விடுவது , அதன் பிறகான அதற்கு பரிகாரமாக அவர் உதவி செய்யும் காட்சிகள் குற்ற உணர்வின் வெளிப்பாட

நேற்று இன்று நாளை - நாஸ்டாலஜியா நல்லதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாஸ்டாலஜியா நல்லதா கெட்டதா? பொதுவாக நாம் கடந்த காலத்தில் செய்த தில்லுமுல்லுகள், போக்கிரித்தனங்கள், கோமாளித்தனங்கள் இவைதானே இன்று நம்மை வடிவமைத்துள்ளன. அதனால்தான் ஜென் இசட், மில்லினிய இளைஞர்களைக்கூட இறந்த காலத்திற்குள் சென்று பார்க்கும்படி திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இதன்மூலம் கடந்த காலத்தில் நடந்த சமாச்சாரங்களை சற்று கண்கொண்டு பார்க்கலாம். இன்றும் காமெடி என்றால் வடிவேலுவை பேசுபவர்கள் அடுத்து சபாபதி படத்து காமெடியில் சென்று முடிப்பார்கள். காரணம், அந்த பட கலைஞர்கள் இன்றைய கலைஞர்களுக்கு ஊக்குமூட்டுபவர்களாக இருந்திருப்பார்கள். பொதுவாகவே வரலாறு தெரிந்தால்தானே வரலாறு படைக்க முடியும் என்று கூறுவார்கள். அதுதான் விஷயம். இதில் எதிர்மறையான விஷயங்களை விட நேர்மறையான சங்கதிகள் நிறைய உள்ளன. எனவே நாஸ்டாலஜியாவுக்கு சென்று வருவது உங்களை புத்துணர்வாக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி