இருத்தலியல் உளவியலின் தந்தை ரோலோ மே!

 







பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்ட்டின் ஹெய்டெகர், ஃபிரடெரிக் நீட்சே, சோரன் கியர்கெகார்ட் ஆகியோர் அன்றை சமூக நிலைக்கு எதிராக புதிய கருத்துகளை கூறினர். இதன் வழியாக மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வழி கிடைக்கும் என நம்பிக்கை உருவாகியது. இதை இருத்தலியம் என்று கூறலாம். தன்னம்பிக்கை, தனிப்பட்ட பொறுப்பு, அனுபவங்களை எப்படி புரிந்துகொள்வது, வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்வி ஆகியவை இருத்தலிய கொள்கையில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டன. 1950ஆம் ஆண்டு, உளவியலாளர் ரோலோ மே  தி மீனிங் ஆஃப் ஆன்க்சைட்டி என்ற நூலை எழுதினார். அதில், மனிதர்களை மையப்படுத்திய உளவியல் முறையை விளக்கியிருந்தார். இதன் காரணமாக ரோலோ மே இருத்தலியல் உளவியலின் தந்தை என பெருமையுடன் அழைக்கப்படுகிறார். 


வாழ்க்கை என்பது முழுக்க அனுபவங்களால் நிறைந்தது. அதில் வலி, வேதனை என்பது கூட இயல்பான அனுபவங்களின் பகுதிதான். பல்வேறு அனுபவங்களை தேடுவதன் வழியாக ஒருவர். தன்னை சமநிலையுடன் வைத்துக்கொள்ள முடியும். பழக்கமான சூழலில், இலகுமான அனுபவங்களை எதிர்கொள்வதன் மூலம் உடல், மனம் என இரண்டையும் ஒருவர் சமநிலையில் வைத்துக்கொள்ளமுடியும். இப்படி பழக்கப்பட்ட இடங்களை தேடும் இயல்பே அனுபவங்களை நல்லது, கெட்டது என அடையாளம் காண உதவுகிறது.


மகிழ்ச்சி தருகிறது, துயரத்தை தருகிறது, இயல்பான சூழலாக இல்லை என்று ஒரு நிகழ்ச்சியை பார்க்கும்போது  ஒருவரின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. நடைபெறும் சம்பவங்களை இயல்பான ஒன்றாக ஒருவர் ஏற்பது முக்கியம். ஆனால் அதை எதிர்த்து போராடும் போது வளர்ச்சி, மேம்பாடு என்பது நடைபெறாமல் போகிறது.பௌத்த வழியில் ஒருவருக்கு நேரும் அனைத்து சம்பவங்களையும் அப்படியே ஏற்பது நல்லது. நல்ல இயல்புகளை குணங்களை ஏற்பது போலவே ஒருவரிடம் ஆழமாக உள்ள எதிர்மறை இயல்புகளை பழக்கங்களை ஏற்றுக்கொள்வது அவசியம். வலி, வேதனை, சோகம் என்பது வாழ்க்கையின் இன்றியமையாத பகுதிதான். அதை தீர்ப்பது என்பது தவறான அணுகுமுறை என ரோலோ மே கருதினார். 

பின்டிரெஸ்ட்







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்