ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் காட்டும் பாசநேசத்திற்கான காரணம்- சீன உளவியல் ஆய்வாளர் குவோ

 








அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி எட்வர்ட் கட்த்ரை என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர், உளவியல் பற்றி ஆய்வுகளைச் செய்தார். இவான் பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்ற கோட்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். நாய்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மணியை ஒலிக்கவிட்டு உணவு வழங்கினால், மணி ஒலிக்கும்போது வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். இதுதான் ஆய்வின் முக்கியமான முடிவு. மனம் எப்படி பழக்கத்திற்கு அடிமையாகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். 


நாய்க்கு குறிப்பிட்ட செயலை செய்தால் உணவு கிடைக்கும் என்பதை தெரிய வைத்தால் பின்னாளில் என்ன செய்தால் உணவு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்கிறது என எட்வின் கூறினார். அதாவது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வதால் அதன் குணநலன் உருவாவதில்லை. உணவுக்காக செய்யும் செயல்பாடுகள் மெல்ல உருவாகி மேம்பாடு அடைந்து குண இயல்புகளாக மாற்றம் அடைகிறது. இதற்காக ஒரே சோதனையை விலங்குகளிடம் மீள மீள செய்யவேண்டியதில்லை என்று உறுதியாக கருதினார். 


அடுத்து செய்திகளில் பார்த்த விஷயத்தைப் பார்ப்போம். உலகில் எப்போதும் பொருந்திப்போகாத விலங்குகள் உண்டு. பூனை, எலி, பூனை, நாய் ஆகியவை எப்போதும் பொருந்திப்போகாதவை. ஜென்ம எதிரிகள் என்று சொல்லலாம். ஆனால் இவை சிலசமயங்களில் நட்பாக இருப்பதை நாளிதழ்களில் எடுத்து பிரசுரித்திருப்பார்கள். இப்படி ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் நட்புகொள்வது சாத்தியமா என்றால் சாத்தியம்தான் என்று கூறுகிறார் ஸிங் யாங் குவோ. இவர் சீன நாட்டைச் சேர்ந்தவர். இரு ஜென்ம எதிரியான விலங்குகளை சிறு வயதில் இருந்து ஒரே கூண்டில் அடைத்து வைத்து வளர்த்தால் அவை இரண்டுமே தம்மை நண்பர்களாக கருதும். எதிரிகளாக நினைத்துக்கொள்ளாது என்று தனது உளவியல் ஆய்வைக் கூறினார். 


இயற்கை என்பதை நாம் விலங்குகளிடம் உருவாக்க முயல்கிறோம். இந்த வேகத்தில் விலங்குகளிடம் உள்ள இயற்கையை மறந்துவிடுகிறோம். நமது உளவியல் ஆய்வுகள் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன என்று துணிச்சலாக சொன்ன உளவியலாளர் குவோ. சீனத்தில் ஏற்பட்ட அரசியல் பிரச்னைகளால் அங்கிருந்து தப்பி அமெரிக்காவுக்கு வந்து பிறகு ஹாங்காங்கில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து ஆய்வுகளை செய்து வெளியிட்டார். 

டெனர்.காம்


கருத்துகள்