டைம் வார இதழின் சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

 










டைம் புதிய கண்டுபிடிப்புகள் 2023


லெனோவா  யோகா புக் 9ஐ


இந்த யோகா புக்கைப் பயன்படுத்தி வீட்டில் வேலை செய்வது எளிது. 13.3 அங்குலத்தில் இரண்டு திரைகள் கொண்ட கணினி. மேசைக்கணினி, மடிக்கணினி, டேப்லட் என எப்படி வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓஎல்இடியில் இரண்டு திரை என்பது இந்த கணினியில் புதுசு. வாங்கி பயன்படுத்துங்கள். வடிவமைப்பில் அசத்துகிற கணினி இது. 


அல்காரே பாட்

கடல்பாசிகள் குளம், ஏரியில் அதிகரிப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நன்மை என்றால் காற்றிலுள்ள கார்பனை அதிகம் உள்ளிழுக்கும். தீமை என்றால் அழுகிப்போன வாடையோடு நீரிலுள்ள பிற உயிரினங்களின் வாழ்வை பாதிக்கும். இதை சரி செய்ய அல்காரே ரோபோட் உதவுகிறது. பாசிகளை நீரின் அடிமட்டத்தில் கொண்டு சென்று அழுத்து கார்பனை அங்கேயே தங்கியிருக்கச் செய்கிறது. வளைகுடா நாடுகள், புளோரிடா ஆகிய பகுதிகளில் இந்தரோபோட் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து வருகிறது. 


ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர் 


டீ, காபி தரும் மெஷின்களை பார்த்திருப்போம். அதைப்போலவே உணவுக்குப் பயன்படுத்தும் சாஸ்களை ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர் வழங்குகிறது. எப்படி என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. இதில் சாஸ் காரமாக, இனிப்பாக அல்லது அறுசுவையும் கலந்ததாக இருக்கவேண்டுமா என்பதை மக்களே தேர்ந்தெடுக்கலாம். அடுத்த ஆண்டு தியேட்டர் ஹோட்டல் என பல்வேறு இடங்களி்ல் வெளிவரவிருக்கிறது. சமோசாவுக்கு தொட்டுப்பார்த்து சாப்பிட்டுவிட்டு சாஸ் சுவை எப்படி என அறிந்துகொள்ளலாம். 


பார்க் போன்


இது ஒரு ஸ்மார்ட்போன்தான். ஆனால் இதை பெற்றோர் குழந்தைகளுக்கு தைரியமாக கொடுக்கலாம். ஆனால் குழந்தைகள் சமூக வலைதளத்தில் என்னென்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் எளிதாக கண்காணிக்கலாம். தவறுகளை தட்டிக்கேட்டு திருத்தலாம். அவர்களின் உடல் மன நலனை பாதுகாக்கலாம். சிறந்தபோன் என பார்க் கம்பெனி சொன்னாலும் பயன்படுத்துபவர்கள்தான் அதன் பலாபலன்களை சரியாக புரிந்துகொள்ள முடியும். 


தானியங்கி கார் 


மெர்சிடஸ் பென்ஸ் கம்பெனியின் எஸ் கிளாஸ் கார்கள்தான் தானியங்கி கார் பெருமையை வாங்கியுள்ளனன. போக்குவரத்து நெரிசலில் குறைந்த வேகத்தில் தானியங்கி முறையை இயக்கினால் ஸ்டீரியங் வீலை பயத்துடன் பார்க்கவேண்டியதில்லை. சாலையையும் பீதியுடன் கடக்க வேண்டியதில்லை. பென்சின் சென்சார்கள் துல்லியமாக செயல்படுகின்றன. பயத்தை குறைக்கின்றன. அமெரிக்காவில் நெவடா, கலிபோர்னியாவில் வரும் 2024ஆம் ஆண்டு இந்த கார்களை வாங்கி ஓட்டலாம். 


யுஇ ப்ரீமியர் இயர் பட்ஸ் 


இன் இயர் ஹெட்போன்கள். இதில் இசையை துல்லியமாக கேட்க மட்டும் இருபத்தி ஒரு ட்ரைவர்களை பயன்படுத்தியிருக்கின்றனர். பொதுவான மக்கள் வாங்குவது கடந்து இசைத்துறையை சார்ந்தர்கள் வாங்குமளவு தரம் கொண்ட இயர் போன்கள் இவை. இசையில் எந்த ஒரு பகுதியையும் தவறவிடாமல் கேட்கமுடியும் என கம்பெனியினர் கூறுகின்றனர். 


குராபிராக்ஸ் சம்பா ரோபோட்டிக் பிரஷ்


மாற்றுத்திறனாளிகளுக்கான பிரஷ். அவர்கள் முகத்தை கூட அசைக்கவேண்டியதில்லை. பிரஷ் நன்றாக வேலை செய்து அவர்களில் பற்களிலுள்ள அழுக்குகளை நீக்குகிறது. இருபது ஆண்டுகால ஆராய்ச்சியில் பிரஷ் ரோபோட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பிரஷ் இல்லை என்பதால் அவர்களில் எண்பது சதவீதம் பேருக்கு பற்களில் பிரச்னை குறைபாடுகள் உள்ளன. 


செயற்கைக் கால் 


வீல்சேரில் உட்கார்ந்து இருப்பவர்களுக்குத்தான் அந்த வேதனை தெரியும். பிறரைப் போல இல்லை என்றாலும் சில இடங்களுக்கு நடந்து செல்வது அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் அதற்கு கூட செயற்கைக் கால் தேவை. இதற்கான செலவு அதிகம் என்றாலும் மனித கால் போவே செயல்படும் ரோபோ கால்களை பலரும் தேடி வருகிறார்கள். உடா பயோனிக் லெக் இந்த வகையில் சிறப்பானது. உடா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டொமாஸோ லென்சி, தனதமு குழுவுடன் சேர்ந்து செயற்கை காலை தயாரித்திருக்கிறார். 


நைக் ஏரோகாமி


நைக் நிறுவனம், ஜாக்கிங் செல்பவர்களுக்கான ஸ்மார்ட் ஜாக்கெட் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதை அணிந்துகொள்பவருக்கு வியர்வை உருவானால், உடையில் உள்ள துளைகள் திறந்து அதை வெளியேற்றும். உடல் குளிர்வது போல தெரிந்தால், திறந்துள்ள துளைகள் மூடிக்கொண்டு உஷ்ணத்தை வெளிவிடாமல் தடுக்கும். ஏறத்தாழ உடலில் இயல்பு போலவேதான். இப்போதைக்கு பெண்களுக்கு தயாரித்திருக்கிறார்கள். விரைவில் ஆண்களுக்கா உடை வெளிவரவிருக்கிறது. 



பாலியல் சீண்டல்களுக்கு எதிரான சைரன்


பேர்டி என்ற நிறுவனம் தயாரித்துள்ள பெண்களின் பாதுகாப்புக்கான கருவி இது. இந்த கருவியை ஆபத்தான சூழலில் அழுத்தினால் சைரன் ஒலி உருவாகும். இது பெண்களுக்கு பாதுகாப்பு தரும். கூடவே அவசரகால உதவிகளுக்கும் அழைப்பு செல்லும். ஒருவகையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இது முக்கியமான கண்டுபிடிப்பும் கூட. 


அமேஸான் எக்கோ ஹப்


வீட்டிலுள்ள அனைத்து ஸ்மார்ட்டான பொருட்களையும் அமேஸானின் எக்கோ ஹப்புடன் இணைத்து இயக்கிக்கொள்ளலாம். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பொருட்களுடன் இணைத்து வீட்டை இன்னும் ஸ்மார்ட்டாக மாற்றலாம். அமேஸான் எக்கோவின எட்டு அங்குல திரையில் அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்த முடியும். இப்போதைக்கு அமேஸானின் எக்கோவுடன் இருபதுக்கும் மேற்பட்ட கருவிகளை மக்கள் இணைத்து பயன்படுத்தி வருகிறார்கள். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். 


சிஷன் விஷன் இன் விஷன்

கையில் உள்ள தோல்திசுக்களை சோதித்து புற்றுநோயை உறுதிபடுத்துகிறார்கள். பெரும்பாலும் இப்படி சோதித்து ஒருவர் காப்பாற்றப்படுவது கடினம். இப்படி புற்றுநோயை கண்டுபிடிப்பது வேகம் பிடித்திருக்கிறது. இன்விஷன் என்ற கருவியில் தோல் திசுக்களை சோதிப்பது வேகமாக நடக்கிறது. நோய் உறுதியானால் சிகிச்சை விஷயங்களை எளிதாக பட்டியல் போட்டுக்கொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதமே பல்வேறு மருத்துவமனைகளில் இன்விஷன் கருவியை வாங்கத் தொடங்கிவிட்டனர். 


அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் மாடல் ஏ


இரண்டு சீட்டுகளைக் கொண்ட மின்சார கார். இதைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கூட கிடைத்துவிட்டது. கார் 2026ஆம் ஆண்டு வெளிவருகிறது. 110 மைலுக்கு பறக்க முடியும் என கம்பெனியினர் கூறுகிறார்கள். சாத்தியமா என்று விரைவில் தெரிந்துவிடும். கருப்பு நிறத்தில் நம்பிக்கையூட்டும் வடிவத்தில் உள்ளது. 


டிரெக் ப்யூல் எக்ஸி 2023


பார்க்க சாதாரண மலையேற்ற சைக்கிள் போலவே உள்ளது. ஆனால் இதில் சக்திவாய்ந்த பேட்டரி உள்ளது. மலையேறும்போது மின்சக்தி தீர்ந்துவிட்டால் என நினைக்கவேண்டாம். அப்படியெல்லாம் ஆகாது என கம்பெனியினர் கூறுகிறார்கள். பிற மின் சைக்கிள் மோட்டார்களை விட இருபது சதவீதம் சிறியதாக மோட்டார் உள்ளது. மின் வாகனம் என்று நண்பர்களிடம் கூட சொல்லவேண்டியதில்லை. அந்தளவு சாதாரண சைக்கிள் போலவே தோன்றுகிறது. உடனே வாங்கி பயணிக்கத் தொடங்குங்கள். 


கேட்ச்பாக்ஸ் 


டெம்பிள் மங்கீஸிலுள்ள ஒட்டுமொத்த ஆட்களுமே சேர்ந்து பேசுமளவு சக்திவாய்ந்த மைக்குகளைக் கொண்டுள்ள கருவி. வயர்லெஸ் மைக் உள்ளதால், மைக்கை அங்கே கொடுங்க என்று கூறாதபடி சந்திப்புகளை நடத்தலாம். யூட்யூப் நடத்துபவர்களுக்கான சிறந்த பொருள். 


டுயோலிங்கோ இசை ஆப்


ஆப்பை இன்ஸ்டால் செய்து இசையைக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இதில் பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள் தொடங்கி பீத்தோவன், பாக் வரை உள்ளது. எனவே, அவற்றை இசைத்து பழகி இசைக்கலைஞராக மாற வாய்ப்புள்ளது. பாரம்பரியம், ரத்தத்தில் கலந்தது இசை என்பதைப் பற்றி கவலைப்படாமல் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு டுயோலிங்கோ ஆப் உதவுகிறது. 


டூனா சென்ஸ்அலர்ட்


கார் சீட்டுகளை தயாரிக்கும் நிறுவனம், குழந்தைகளுக்கான இருக்கை மற்றும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்படி எளிதாக அகற்றும் சீட்டை பொருத்தி அதில் குழந்தைகளை உட்கார வைத்துவிட்டால், காருக்குள் வெப்பம் அதிகரித்தால் அல்லது விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தால் கூட தாய்க்கு, அப்பாவுக்கு போனில் எச்சரிக்கை செய்தி வந்துவிடும். உடனே பாய்ந்து வந்து கேப்டன் விஜயகாந்த்போல வந்து குழந்தையை அலேக்காக தூக்கி காப்பாற்றிவிடலாம். அமெரிக்காவில் ஆண்டுக்கு நாற்பது குழந்தைகள் காரில் இறந்துபோய் வருகிறார்கள். இதை உத்தேசித்து உருவாக்கிய தயாரிப்பு இது. 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்