இடுகைகள்

ஸீரம் இன்ஸ்டிடியூட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோயும், அதற்கான மருந்தும் கூட சீனாவிடமிருந்துதான் பெறுகிறோம்!

படம்
அண்மையில் உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19 நோய் பாதிப்பிற்கான 35 தடுப்பு ஊசி மருந்துகளை மேம்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. அதில் ஒரு ஊசி மருந்து இந்தியாவிலுள்ள முன்னணி மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனமான கோடாஜெனிக்சும் இணைந்துள்ளது. ஆதார் பூனாவா, சீரம் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ஆவார். தடுப்பூசிகள் பற்றி அவரிடம் பேசினோம். இந்தியாவிலுள்ள உள்நாட்டு  மருந்து சந்தையே கோவிட் 19ஆல் ஆட்டம் கண்டுள்ளது. ஏனெனில் மருந்துப்பொருட்களுக்கான பகுதிப்பொருட்களில் பெரும்பகுதி சீனாவிலிருந்து பெறப்பட்டது அல்லவா? மருந்து துறை மட்டுமல்ல வாகனத்துறை கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு மூலம் நாம் இந்தியாவில் தயாரிக்கும் பல்வேறு செயல்பாடுகளை முடுக்கிவிடுவது அவசியம். இதுபோல சவாலான காலகட்டங்களைச் சமாளிக்க நமக்கு சரியான பாதை தேவை. அரசு இத்துறையில் உள்ள பல்வேறு கிடுக்குப்பிடி விதிகளை தளர்த்தி மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க முன்வர வேண்டும். இதன் வழியாகத்தான் நாம் நோய்களுக்கு தேவையான புதிய மருந்துகளை எளிதாக தயாரித்