இடுகைகள்

ஆண்ட்ரூ கார்பீல்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நண்பன், காதலி தூரம் தள்ளிப்போக இசைவாழ்க்கையை தக்க வைக்க போராடும் கலைஞனின் கதை! டிக் டிக் பூம்

படம்
  டிக் டிக் பூம் ஆண்ட்ரூ கார்பீல்ட் படம் அமெரிக்க இசைக்கலைஞரான ஜொனாதன் லார்சன், வாழ்க்கையைப் பேசுகிறது.  ஜொனாதன் லார்சனாக ஆண்ட்ரூ கார்பீல்ட் நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சி தொடங்கி படம் முடியும் வரை அவரின் அர்ப்பணிப்பு உணர்வு அசத்தலாக இருக்கிறது.,  ஜொனாதனுக்கு சில நாட்களில் 30 வயது தொடங்கவிருக்கிறது. அதுநாள் வரை அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என அவருக்கே கேள்வி எழுகிறது. எனவே, அவர் இத்தனை நாட்களும் பிராட்வே நாடகங்களுக்கு இசையமைப்பும் வாய்ப்பை பெற முயன்று வந்தார். ஆனால் ஏதோ ஒரு விஷயம் இசையில் வேலை செய்யவில்லை. எனவே, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் காதலியும் நடனம் சார்ந்த வேலைக்காக வேறு இடத்திற்கு போக நினைக்கிறாள். சிறுவயது நண்பன் நடிக்கும் வாய்ப்பு தேடி முயன்று தோற்று வேலை தேடி வேறு இடம் நோக்கி போகிறான்.  எனவே, தன் வாழ்க்கை சார்ந்து வேகமாக யோசிக்கும் நிலைக்கு ஜொனாதன் தள்ளப்படுகிறான். வாழ்க்கையை நடத்த இசை மட்டுமே போதாது அல்லவா? இதனால் துரித உணவகம் ஒன்றில் வெய்ட்டராக வேலை பார்க்கிறான்.  ஜொனாதனின் சிறப்பே, அவன் எழுதும் பாடல்கள் அனைத்துமே தினசரி வாழ்