இடுகைகள்

மருத்துவம் - தடுப்பூசி எதிர்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசிக்கு எதிர்ப்பு? - என்னாகும் உலகின் நிலை?

படம்
அண்மையில் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசிகளை எதிர்க்கும் குழுவினரின் நடவடிக்கைகளை வேதனையுடன் சுட்டிக்காட்டியது. தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள் எதிர்காலத்தில் தொற்றுநோய்களை தடுப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தும் என உலக நாடுகளை எச்சரித்துள்ளது. நாடுகளுக்கு மக்களின் வதந்தி பிரசாரங்களோடு, நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி அபாயம், மாசு, வெப்பமயமாதல் ஆகியவற்றையும் எதிர்கொள்ளும் தேவை உள்ளது. இதில் முக்கியமானது, யதார்த்த நிலைமையை மக்களுக்கு புரியவைப்பதுதான். தடுப்பூசிக்கு எதிர்ப்பு! கி.மு. பத்தாம் நூற்றாண்டில்  சீனாவில் சாங் மன்னரின் ஆட்சி நடந்தபோது, அந்நாட்டில் தடுப்பூசிகள் அமலில் இருந்துள்ளன. பின்னர், 1763 ஆம் ஆண்டு தடுப்பூசியை பிரான்ஸில் மருத்துவர் கட்டி(Gatti) அறிமுகப்படுத்தினார். பதினெட்டாம் நூற்றாண்டில் தடுப்பூசிகளுக்கு எதிராக இங்கிலாந்தைச் சேர்ந்த ரெவரெண்ட் எட்மண்ட் மாசே (Edmund Massey), ”இறைவனின் தீர்ப்புக்கு எதிரானது தடுப்பூசிகள் என பிரசாரம் செய்தார். இவரைப் பின்பற்றி தடுப்பூசிகளுக்கான எதிர்ப்பியக்கம் இங்கிலாந்தில் வேரூன்றியது. 1796 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னரால் கண்டுபிடிக்க