இடுகைகள்

உராங்குட்டான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உராங்குட்டான் நகைச்சுவை உணர்வுமிக்கது!

படம்
  டாக்டர் பைருட் கால்டிகாஸ் விலங்கியலாளர் பைருட் கால்டிகாஸ், இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உராங்குட்டான்களை ஆராய்ந்து வருகிறார். பூர்விகம், கனடா. கனடாவிலுள்ள சைமன் ஃபிரேஸர்  பல்கலைக்கழகத்தில் அகழாய்வுத்துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.   நீங்கள் உராங்குட்டானை முதன்முறையாக எப்போது பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா?  பள்ளியில் படிக்கும்போது, டைம் லைஃப் புத்தகத்தைப் படித்தேன். அதில், ஆண் உராங்குட்டான் புகைப்படத்தை முதன்முறையாக பார்த்தேன். மனிதர்களோடு அதிக ஒற்றுமை கொண்ட குரங்கினம்.  அந்த புகைப்படம், இன்றுவரையும் என் மூளையில் மறக்கமுடியாத நினைவாக  உள்ளது.  உராங்குட்டானை 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறீர்கள். அவற்றைப் பற்றி வரையறை செய்யமுடியுமா? வால்ட் டிஸ்னி உருவாக்கிய அனிமேஷன் விலங்குகள் போன்றவை தான்  உராங்குட்டான்கள். மனதில் நகைச்சுவை  உணர்வு நிரம்பியவை. அவற்றின் உணர்ச்சிகளை நீங்கள் கூர்ந்துகவனித்தால், எனது கருத்தைப் புரிந்துகொள்ளலாம்.  பல்கலைக்கழக படிப்பை முடித்தவுடன் உராங்குட்டானைப் பற்றி ஆய்வு செய்ய எப்படி முடிவு செய்தீர்கள்? அப்போது எனக்கு வயது 19. என்னுடைய பேராசிரியர், ஆப்பிரிக்காவி

பாமாயிலால் அழியும் உராங்குட்டான்கள்!

படம்
  மழைக்காடுகளில் வளர்க்கப்படும் பனைமரங்களிலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதற்கு கொடுக்கும் பெரிய விலையாக உராங்குட்டான்களின் வாழிடம் அழிக்கப்படுகிறது.  பாமாயில் மேற்கு ஆப்பிரிக்க பனை எனும் மரத்திலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதனை நீங்கள் பெரும்பாலும் வெஜிடபிள் ஆயில் என்ற வார்த்தையின் கீழ் புரிந்துகொள்ளலாம். இன்று பிரிட்டானியா, ஐடிசி, யுனிபிக், மெக்விட்டிஷ், ஓரியோ என அனைத்து பிஸ்கெட் கம்பெனிகளிலும் மலிவான முதல் விலை உயர்ந்த அனைத்து பொருட்களிலும் பாமாயில் பயன்படுகிறது. பாமாயில் என்ற பெயர் வர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதும், பருவ மழைக்காடுகளில் அதிகம் விளைவிக்கப்படுவதும் முக்கியமான காரணம்.  உலகளவில் பயன்படுத்தும் பாமாயில் 85 சதவீதம் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்குதான் உராங்குட்டான்கள் காடுகளில் வாழ்கின்றன.  பாமாயிலுக்காக பனை மரங்களை விளைவிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் உராங்குட்டான்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வாழிடமும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவுக்காக அவை நகரங்களுக்குள் வருவது தவிர்க்க

மனிதர்களின் முன்னோடி விலங்குகளின் பழக்கம், வாழ்க்கைமுறை!

படம்
                              முன்னோர்களின் பழக்கங்கள்… . பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் , தங்களது பழக்கவழக்கங்களை எப்படி பெற்றார்கள் ? இதற்கான விடையை மானுடவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் வழியாக தேடி வருகிறார்கள் . சிம்பன்சி , ஏப் , உராங்குட்டான் , கொரில்லா . போனபோ ஆகிய விலங்குகளின் நம்மின் மரபணுக்களோடும் , பழக்கங்களோடும் ஓரளவு நெருக்கமாயிருக்கின்றன . சாப்பிடுவது , தூங்குவது , குடும்பத்தலைவர் , அதற்கு கீழ் உள்ள அதிகாரப் படிநிலை , குழுக்களின் செயல்பாடு , தினசரி வாழ்க்கை சவால்கள் என பலதையும் இதில் நாம் பார்க்கலாம் . சிம்பன்சி வம்சாவளிப்பிரிவில் நெருங்கிய உயிரினமாக உள்ளது . நாம் இந்த விலங்கின் மரபணுக்களோடு 98 சதவீதம் ஒத்துப்போகிறோம் ., தனது ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் குட்டிகளை பராமரிப்பதிலும் பெரும் குழுக்களாக வாழ்வதிலும் திறன் பெற்றவைகளாக உள்ளன . பதிமூன்று வயது தொடங்கி சிம்பன்சிகள் கருத்தரிக்கத் தொடங்குகின்றன . குட்டிகளை இரண்டு வயது வரை கண்ணும் கருத்துமாக தோளில் தூக்கி வைத்து பராமரிக்கின்றன . ஆண் சிம்பன்சிகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன . இவ