இடுகைகள்

ஆளுமை. குணங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதனின் ஆளுமைக்கும் செக்சுக்கும் என்ன தொடர்பு - உளவியல் ஆய்வு

படம்
pixabay உளவியல் ஆய்வு தியரி விழிப்புணர்வற்ற நிலையில் மனம் எப்படி செயல்படுகிறது, மனிதர்களின் ஆளுமைகளை பழக்கவழக்கங்களை எப்படி வடிவமைக்கிறது என்பதை உளவியல் ஆய்வு தியரி கூறுகிறது. மனம் ஒருவரின் நினைவில் பாதிப்பு ஏற்படுத்தாதபடி அவரது பழக்கவழங்கங்களை குணங்களை உருவாக்குகிறது. மனத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை ஒருவரின் உடல் காட்டிக்கொடுத்துவிடும். அதாவது அவரின் செயல்பாடுகள் மூலமாக. இதை ஆராய்ந்து சொன்னவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் சிக்மண்ட் ஃபிராய்ட்.  இதில் மூன்று பாகங்கள் முக்கியம் என்று அவர் வரையறுத்தார். அவை, ஐடி, சூப்பர் ஈகோ, ஈகோ.  மனிதர்களின் பிறப்பிலிருந்து உளவியல் வளர்ச்சி தொடங்குகிறது. இது ஐந்து நிலையாக பிரிக்கப்படுகிறது. இதில் பாலியல் நிலை முக்கியமான அம்சமாக உள்ளது. பாலியல் வளர்ச்சியும் சமூகம் சார்ந்த எதிர்பார்ப்புகளும் ஒரு கட்டத்தில் எதிரெதிராக நிற்கின்றன. பாலியல் நிலை என்பது குழந்தையாக ஒருவர் இருக்கும்போது அவரின் பிறப்புறுப்பை தடவிக்கொண்டு மகிழ்வதில் தொடங்குகிறது என்கிறார் பிராய்ட். ஒருவரின் பாலியல் சார்ந்த எண்ணங்கள்தான் அவர்களின் ஆளும