மனிதனின் ஆளுமைக்கும் செக்சுக்கும் என்ன தொடர்பு - உளவியல் ஆய்வு


Psychology, Mind, Thoughts, Thought, Fear, Head, Ideas
pixabay





உளவியல் ஆய்வு தியரி
விழிப்புணர்வற்ற நிலையில் மனம் எப்படி செயல்படுகிறது, மனிதர்களின் ஆளுமைகளை பழக்கவழக்கங்களை எப்படி வடிவமைக்கிறது என்பதை உளவியல் ஆய்வு தியரி கூறுகிறது.
மனம் ஒருவரின் நினைவில் பாதிப்பு ஏற்படுத்தாதபடி அவரது பழக்கவழங்கங்களை குணங்களை உருவாக்குகிறது. மனத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை ஒருவரின் உடல் காட்டிக்கொடுத்துவிடும். அதாவது அவரின் செயல்பாடுகள் மூலமாக. இதை ஆராய்ந்து சொன்னவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் சிக்மண்ட் ஃபிராய்ட். 

இதில் மூன்று பாகங்கள் முக்கியம் என்று அவர் வரையறுத்தார். அவை, ஐடி, சூப்பர் ஈகோ, ஈகோ. 

மனிதர்களின் பிறப்பிலிருந்து உளவியல் வளர்ச்சி தொடங்குகிறது. இது ஐந்து நிலையாக பிரிக்கப்படுகிறது. இதில் பாலியல் நிலை முக்கியமான அம்சமாக உள்ளது. பாலியல் வளர்ச்சியும் சமூகம் சார்ந்த எதிர்பார்ப்புகளும் ஒரு கட்டத்தில் எதிரெதிராக நிற்கின்றன. பாலியல் நிலை என்பது குழந்தையாக ஒருவர் இருக்கும்போது அவரின் பிறப்புறுப்பை தடவிக்கொண்டு மகிழ்வதில் தொடங்குகிறது என்கிறார் பிராய்ட்.
ஒருவரின் பாலியல் சார்ந்த எண்ணங்கள்தான் அவர்களின் ஆளுமையை வளர்க்கிறது, உருவாக்குகிறது என ஃபிராய்ட் நம்பினார். அதனை தனது கருத்தாக முன்வைத்தார். பின்னாளில் இவை கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இவரது மாணவர்களே அக்கருத்தை எதிர்த்து அதற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர். ஆனாலும் உளவியல் சார்ந்த கருத்துகளில் முக்கியமான ஆய்வுகளை ஆராய்ந்து சொன்னவர் என்ற வகையில் ஃபிராய்ட் முக்கியத்துவம் பெறுகிறார். 

தடுக்கும் மனநிலை

நீங்கள் கூறும் கருத்தை நண்பர்கள் ஏற்கவில்லை, உங்களை அவமானப்படுத்தும் வகையில் சிலர் நடந்துகொள்கிறார்கள் என்றால் மனதிலுள்ள தடுக்கும் செயல்பாட்டு நிலை இயக்கத்திற்கு வருகிறது. இம்முறையை ஆழ்நிலை மனம் உருவாக்குகிறது. இதுவே அனைத்து சூழல்களும் சரியாக உள்ளன என்று சொல்லி உங்களை அச்சூழ்நிலையிலிருந்து வெளியே கொண்டுவருகிறது.
சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவர் தியேட்டரில், மொபைலில், ஹோம் தியேட்டர் சினிமாவில் முகேஷ் விளம்பரத்தைப் பார்க்காமலா இருப்பார். ஆனால் அவர் அதைப்பார்த்துக்கொண்டே முதல் சிகரெட்டை புகைத்துவிட்டு அடுத்த சிகரெட்டை எடுக்க காரணம், அந்த பாதிப்பு எனக்கு வராது என்ற நம்பிக்கை. ஒருவகையில் எனக்கு அந்த பிரச்னை வராது என்ற மறுப்பு கூட. 

ஐடி
இந்தப்பகுதி ஐஸ்க்ரீமைப் பார்த்ததும் குழந்தைகளோடு பெரியவர்களும் சிலர் தன்னையும் அறியாமல் துள்ளி குதிப்பார்களே அந்தளவு ஆற்றல் கொண்டது. சிலவற்றுக்கு காரணம் சொல்ல முடியாத அன்பையும், வெறுப்பையும் உருவாக்குகிறது.
சூப்பர் ஈகோ
ரூல்ஸ் ராமானுஜம் பகுதி. தன்னுடைய குழந்தை என்றாலும் சொன்ன பேச்சை கேட்கணும் என கண்டிப்பான பெற்றோர் சிலர் உண்டு அல்லவா? அந்த பாத்திரத்தை சூப்பர் ஈகோ பகுதி செய்கிறது.
ஈகோ
ஐடி, சூப்பர் ஈகோ சொல்லும் விஷயங்களை மறுத்து என் வழி தனிவழி என பயணிக்கிறது.

ஆழ்நிலை மனம்
இதில் மனிதர்கள் வெளியே சொல்லாத பல்வேறு ஆசைகள், உணர்வு நிலைகள் இடம்பெற்றுள்ளன.
விழிப்புணர்வு மனம்
இதில் செயல்பாடுகள், அதற்கான உணர்ச்சிகள் என நமக்கு தெரிந்த நம்மைப் பற்றிய பிம்பங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.
தொடக்கநிலை மனம்
இதில் மனிதர்களின் சிறுவயது நினைவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
கனவுகளும் எதார்த்தமும்
ஆழ்நிலை மனத்தில் ஏற்படும் கனவுகள் அதைச்சார்ந்த உணர்ச்சிகள் நிகழ்கால வாழ்க்கையோடு எந்தவித பொருத்தமும் இல்லாதவை. இவை அதனோடு எப்போது இணைய முடியாதவை. அவற்றின் நிலைக்கு அச்சுறுத்தலானவையும் கூட.