ஜப்பானியர்களை பாதிக்கும் தஜின் கியோஃபுசா மனநல குறைபாடு!



Mental, Health, Brain, Psychology, Head, Mind, Medical
pixabay



பிற குறைபாடுகள்

மன அழுத்தம், பதற்றம் காரணமாக ஏராளமான மனநல குறைபாடுகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சோமாட்டிக் சிம்ப்டம் டிஸ்ஆர்டர்

உடலில் ஏற்படும் வலி அல்லது உடல் பருமன் ஏற்படுத்தும் பதற்றம் சார்ந்த குறைபாடு. வலி உணர்வால் தனக்கு பெரிய நோய் ஏற்பட்டுள்ளதாக நினைப்பார்கள். எதிர்மறை எண்ணங்களோடு இருப்பதால் சமூக அளவில் கடும் மன அழுத்தத்தைச் சந்திப்பார்கள்.

ஃபேக்டிஷியஸ் டிஸ்ஆர்டர்

தன்னைத்தானே காயங்கள் செய்துகொண்டு, அல்லது பிறரது கை, கால்களை முறித்துப்போட்டு மருத்துவம் தேவை என்று சொல்லுவார்கள். தனக்கு அல்லது பிறருக்கு உள்ள உடல்நலக்குறைபாட்டை பிரமாண்ட பிரச்னையாக சொல்லி மருத்துவர்களுக்கு பீதி ஊட்டுவார்கள். சிறுவயதில் ஏற்பட்டு மோசமான அனுபவங்கள், மனச்சோர்வு சூழல் இந்த குறைபாட்டுக்கு முக்கியக் காரணம்.  

டவுண் சிண்ட்ரோம்

மூளையில் ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு. இதனால் இவர்களது அறிவுத்திறன், சமூக உறவு, தினசரி செயல்பாடு என அனைத்துமே பாதிக்கப்படும். பதற்றக்குறைபாடு, கற்றலில் தடுமாற்றம், தகவல்தொடர்பில் பிரச்னை என அறிகுறிகள் தெரியும். மரபணுக்களின் சமச்சீரின்மை, தன்னை அளவுக்கு அதிகமாக செல்கள் பெருக்கிக்கொள்வதால் இக்குறைபாடு ஏற்படுகிறது. உடலுக்கும் மூளைக்குமான செயல்பாடு தேக்கம் கொள்ளும். மொழித்திறன் இவர்களுக்கு குறைவாக இருக்கும். கற்ற விஷயங்களை நினைவுகொள்வதும் கடினம்.

ஜென்டர் டிஸ்போரியா

ஒருவரின் பாலின அடையாளம் ஒன்றாக இருக்கும். அவர்கள் தன்னை வேறு பாலினமாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆணாக இருந்தால் பெண்களைப் போல பழகி வருவார்கள். அப்போது பிரச்னை வராதா? ஹார்மோன்களின் தாறுமாறு வளர்ச்சி வேகத்தால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. ஆண், பெண் என முழுமையாக வளர்ச்சி பெறாத வடிவம் இவர்கள் என்று கூறலாம். பதற்றம், மன அழுத்தம் கொண்டு தன்னைத்தானே காயம் செய்துகொள்ள முயல்வார்கள். தற்கொலை முயற்சிகளையும் செய்வார்கள். இதற்கு தீர்வு, அவர்களின் மனதில் நினைத்துள்ள பாலினமாக தங்களை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொள்வதே.

செக்ஸூவல் டிஸ்ஃபங்ஷன்

ஆண்களும் பெண்களும் உடலுறவில் ஈடுபடும்போது, திருப்தி பெறமுடியாது. உடலிலும் மனதிலும் தடைகள் இருப்பதாகத் தோன்றும். ஆண்களுக்கு வேகமாக செயல்படமுடியாமை, விந்து முந்துதல் ஆகிய பிரச்னைகள் இருக்கலாம். பெண்களுக்கு உடலுறவில் ஆசை இல்லாமலும், பாலுறுப்பில் வலியும் ஏற்படலாம். சமூக பதற்றம், மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். உளவியல் மருத்துவரின் ஆலோசனைப்படி உடலுறவில் ஈடுபடலாம். இருவரின் ஒத்திசைந்து உறவில் ஈடுபட்டால் மட்டுமே உடலுறவில் திருப்தி கிடைக்கும்.

பாராபிலிக் டிஸ்ஆர்டர்

இவர்களுக்கு இயல்பான உடலுறவில் நாட்டம் இருக்காது. சட்டத்திற்கு புறம்பான வகையில் உடலுறவை அமைத்துக்கொள்வார்கள். இதற்கு சிறுவயதில் நடந்த சம்பவங்கள், மரபணு ரீதியான குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். உளவியல் ஆய்வுகள் செய்து பாதிக்கப்பட்டவரின் நினைவுகளை ஆராய்ந்தே சிகிச்சை வழங்கப்படுகிறது.

எலிமினேஷன் டிஸ்ஆர்டர்

இந்த பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் அல்லது மலம் கழிக்கிறேன் என கழிவறையே கதியாக கிடப்பார்கள். அடிக்கடி மலம், சிறுநீர் கழிப்பது அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை என்பதால், சாத்தியமாகும்போது எல்லாம் அங்கு சென்று இடங்களை அசிங்கப்படுத்துவார்கள். தன்மீது நம்பிக்கை இழந்து, கிண்டல் செய்யப்படுபவர்கள் இதுபோன்ற குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கான சிகிச்சை, இவர்களை ஊக்கப்படுத்தி குற்றவுணர்விலிருந்து  வெளிக்கொண்டு வருவதுதான்.

கோரோ

தன்னுடை பாலுறுப்பு காணாமல் போய்விட்டதா, அல்லது சிதைந்துவிட்டதா என பார்த்து பதறும் குறைபாடு இது. இருக்கா இல்லையா என எஸ்.ஜே. சூர்யா போல தொட்டு தடவிக்கொண்டே இருப்பார்கள். அவமான உணர்வு, பயம், பதற்றம் ஆகியவை இப்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உளவியல் மருத்துவர் இதற்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவார்.

அமோக் சிண்ட்ரோம்

நன்றாகத்தான் இருப்பார்கள். திடீரென தன்னைத்தானே தாக்கிக்கொள்வது, அல்லது பிறரைத் தாக்குவது என இறங்குவார்கள். இந்தச் சம்பவம் பற்றிய நினைவே அவர்களுக்கு இருக்காது. அதிக நாட்கள் தனியாகவே வாழ்வது, சிறையில் இருப்பது என்று வாழ்ந்தவர்களுக்கு இப்பிரச்னை ஏற்படும். இதற்கு பல்வேறு தெரபி, பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே தீர்வு கிடைக்கும்.

தஜின் கியோஃபுசோ

தனது வருகையால் பிறர் ஏதாவது வருத்தப்படுவார்களோ சங்கடப்படுவார்களோ என நினைத்து வருந்துவது. தன்னம்பிக்கை இன்மை, சமூகத்திலிருந்து தனித்து இருப்பது, மனப்பதற்றம் ஆகியவை இவர்களை இப்படி யோசிக்க  வைக்கிறது. தெரபி மூலம் அவர்களது தவறான நம்பிக்கைகளை தகர்க்க முடியும். ஜப்பானியர்களில் இருபது சதவீதம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்