குற்றவாளிகளைப் பிடிக்க ஹோட்டல் நடத்தும் காவல்துறையின் சாணக்கிய குழு! - எக்ஸ்ட்ரீம் ஜாப்


줄거리x, 스포x, 간단 리뷰] 극한직업 (Extreme Job, 2018)


எக்ஸ்ட்ரீம் ஜாப் கொரியா - 2019

இயக்கம் – லீ பையங் ஹியோன்

ஒளிப்பதிவு – நோ சுயங் போ

இசை – கிம் டா சியோங்

 

போதைப்பொருள் மாபியா குழுவை பிடிக்கவேண்டும். ஆனால் அவர்களைப் பற்றிய அணுவளவு தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்ன செய்வது? அதற்குத்தான் காவல்துறை கோ என்ற போலீஸ்காரர் தலைமையில் ஐந்து போலீஸ்காரர்களைக் கொண்ட படையை அமைக்கிறது. இவர்கள் போதைக்குழுவைக் கண்டுபிடிக்க உணவகம் ஒன்றில் சந்திக்கின்றனர். ஆனால் என்ன முயன்றும் அவர்களை இவர்களால் கண்டுபிடித்து குற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியவில்லை. அதனால், உணவகம் ஒன்றை தொடங்கி அங்கே காத்திருப்பது, சரியாக ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர்களை கைது செய்ய நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உணவகத்தை பெயருக்கு நடத்த முயல்கிறார்கள். அப்போது சக போலீஸ்காரர், முயற்சிக்கும் ஃபிரைடு சிக்கன் வெற்றிபெறுகிறது. இதனால் அவர்கள் கடை அப்பகுதியில் விரைவிலேயே புகழ் பெற்றுவிடுகிறது. இதனால் அவர்கள் போதைக்கும்பலை பிடிக்க முடியாமல் நாள்தோறும் ஹோட்டலை நடத்துவதும் வரும் காசை எண்ணிப் பார்ப்பதுமாக போகிறது. போதை மாபியாவை இந்தக்குழு எப்படி பிடித்தது, ஹோட்டலை நடத்தினார்களா, போதைக்குழுவினர் இவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தார்களா என்பதே கதை.

ஆஹா

சுந்தர் சி படத்திற்கான கதை போலவே இருக்கிறது. போலீஸ்காரர்கள்தான். ஆனால் குற்றவாளிகளைப் பிடிக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் மிகத்துல்லியமாக சொதப்புகிறார்கள். ஜீரோ எப்படி ஹீரா ஆனார்கள் என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி. படத்தை தொடக்கம் முதல் இறுதி வரை ரசிக்க வைப்பது காமெடிதான். சிக்கனை அனைவரும் செய்து பார்த்து இறுதியில் ஒரு போலீஸ்காரரின் சிக்கன் தேறும்போது வெற்றிக்குறி காட்டி கடைசியில் கடையில் குவியும் மக்களால் காவல்துறை வேலையை பார்க்கமுடியாமல் தடுமாறுவது என காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

ஐயையோ

வில்லன், போலீஸ்காரர்களின் கிளை உரிமைகளை வாங்கி போதைப்பொருட்களை தயாரித்து விற்கும் காட்சிகள் படத்தில் நீளம் போல தோன்றுகின்றன.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்