குடும்பத்தில் ஏற்படும் உறவுச்சிக்கல்களைத் தீர்க்க உதவும் தெரபி முறைகள்!


Elephant, Africa, African Bush Elephant, Proboscis
pixabay




இஎம்டிஆர்

எந்த பணிகளையும் செய்வதற்கு நாம் வேறு சூழல்களால் தாக்கப்படாமல் இருக்கவேண்டும். பொதுவாக நாம் ஏதாவது பணியில் இருக்கும்போது நம்மை அதை செய்யவிடாமல் தடுப்பது, நமது கண்களும் காதுகளும். இந்த தெரபி முழுக்க கண்களுக்கானது. தெரபி வல்லுநர் தன் சுட்டு விரலைக் காட்டி குறிப்பிட நிகழ்ச்சியை நினைக்கச் சொல்லுவார். பொதுவாக நமக்கு மகிழ்ச்சியான நினைவுகளை விட துயரமான வேதனையான நிகழ்வுகள்தான் நினைவுக்கு வரும். அவற்றிலிருந்து ஒருவரின் மனதை திருப்பி அவர்களின் எண்ணங்களை நேர்மறையாக மாற்றுவதுதான் இஎம்டிஆர் தெரபி நோக்கம்.

ஆர்ட் தெரபி

அனைவராலும் தன்னுடைய உணர்வுகளை பேசுவதன் மூலமாக வெளிப்படுத்திவிட முடியாது. அதற்காகவே ஒருவரின் மனதிலுள்ள எண்ணங்களை அவர்களது கலை வெளிப்பாட்டு வழியாக அறியும் தெரபி. ஓவியங்களை நாம் வெளிப்படையாக பிறருக்கு பார்வையிட அனுமதிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வும், விமர்சனங்களை ஏற்கும் மனநிலையும் ஏற்படுகிறது. ஓவியம் மட்டுமல்ல, இசை, எழுத்து ஆகியவையும் ஒருவருக்கு உதவலாம். இசை கேட்பது மட்டுமல்ல அதனை உருவாக்குவதும் மூளையிலுள்ள டோபமைன் சுரப்பில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன.

அனிமல் அசிஸ்டட் தெரபி

ஒருவருக்கு மிக மோசமான வன்முறை சார்ந்த அனுபவங்கள் ஏற்பட்டால் அவரால் அதனை மறந்து நிகழ்கால வாழ்க்கையை வாழ்வது கடினம். அவருக்கு பிறர் மீதும், தன் மீதும் நம்பிக்கை குறைந்து இருப்பதால் சமூகம் சார்ந்த உறவுகளை அவரால் ஏற்படுத்திக்கொள்ளவும் பராமரிக்கவும் முடியாது. இதற்கு வளர்ப்பு பிராணிகள் உதவுகின்றன. நாய், பூனை, குதிரை, டால்பின் போன்ற விலங்குகளுடன் பழகுபவர் மெல்ல இளகிய தன்மை கொண்டவராக, இரக்கம், நம்பிக்கை, மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தனிமையில் உள்ளவர்களுக்கும் துணையாக வளர்ப்பு பிராணிகள் உள்ளன.

ஹிப்னோதெரபி

குழந்தை  பிறப்பு, பல் சிகிச்சை, அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கும் வலியை மறக்க வைக்க ஹிப்னோதெரபி பயன்படுத்தப்படுகிறது. நோயாளியின் மூளையில் உள்ள தேவையில்லாத உணர்ச்சிகரமான சம்பவங்களை கீழே தள்ள ஹிப்னோதெரபி பயன்படுகிறது. இதன் மூலம் நோயாளியின் பழக்கவழக்கம், இயல்புகள் மேம்படும் வாய்ப்புள்ளது.

சிஸ்டெமிக் தெரபி

அலுவலகம், குடும்பம் என பல்வேறு இடங்களிலும் சிலரின் பழக்கவழக்கங்கள் அனைவரையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்காக அவர்களின் உடல்மொழி, குணங்களை மேம்படுத்த சிஸ்டெமிக் தெரபி உதவுகின்றன. ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம், பதற்றத்தை சாதாரணமாக கருதும்போது அது அவரின் குடும்பம், நட்பு, அலுவலக நட்பு என பல விஷயங்களையும் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது.

ஃபேமிலி சிஸ்டெம்ஸ் தெரபி

உளவியலாளர் முர்ரே போவன் உருவாக்க தெரபி முறை இது. குடுமத்திலுள்ள தனிநபரின் மதிப்பு, அவரின் பொறுப்பு, அவருக்குள்ள உரிமை, குழந்தைகளை அவர் நடத்தும் விதம், அவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உள்ள உறவு, குழந்தைகளின் பெற்றோர் பிறரிடம் கொண்டுள்ள உரிமை ஆகியவற்றைக் கொண்டு தெரபி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் குடும்ப உறவுகள் மேம்படுவதோடு அலுவலகரீதியான ஒருவரின் தனிப்பட்ட உறவும் வளரும் வாய்ப்பு உள்ளது.

ஸ்ட்ரேட்டஜிக் ஃபேமிலி தெரபி

குடும்பத்தில் உறவுகளிடையே ஏற்படும் பிரச்னைகளை தெரபியாளர் நேரடியாக அவர்களை பேச வைத்து பிரச்னைகளை ஆராய்ந்து அதனை தீர்த்து வைக்க அளிக்கும் தெரபி இது. பழனிச்சாமி தன் குடும்பதோடு அடிக்கடி பேசாமல் வெளியே போய்விடுகிறான் என்பது பிரச்னை. இதனை தீர்க்க தெரபியாளர் சரியான திட்டம் வகுப்பார். அதனை செயல்படுத்த குடும்பத்தினரின் ஒத்துழைப்பை நாடுவார். அதனை நேர்மறையான தன்மையுடன் தீர்த்து அவர்களின் குடும்ப வேறுபாடுகளை களைவது இறுதிப்பகுதி.

டையாடிக் டெவலப்மென்ட் தெரபி

வன்முறையால், குடும்பம் சார்ந்த சிக்கல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்பிக்கையும் வாழ்க்கை சார்ந்த நேர்மறையான உணர்வுகளை எண்ணங்களை ஊட்ட உளவியலாளர் இந்த தெரபியை பயன்படுத்துகிறார்.

 

கருத்துகள்