தற்காலிக நினைவிழப்பு, தன் கருத்தை பிரித்து செயல்படும் அம்சங்கள் உங்களுக்கு இருக்கிறதா?
டிஸ்அசோசியேட்டிவ் அம்னீசியா
பாலியல் துன்புறுத்தல்,
விபத்து, இயற்கை பேரிடர் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் தற்காலிக நினைவிழப்பை
டிஸ்அசோசியேட்டிவ் அம்னீசியா என்று கூறலாம்.
துப்பாக்கி முனையில் ஒருவர்
பணத்தைக் கொடுக்க மிரட்டுகிறார். இதன்விளைவாக கடும் மன அழுத்தம் பயத்திற்கு உட்படுபவர்,
அந்த சம்பவத்தை மறந்துவிடுவார். அந்நாளில் நடந்த பிற விஷயங்களை நினைவில் வைத்திருப்பார்.
இதன் தீவிரம் கூடும்போது தன்னுடைய முந்தைய காலங்களில் சந்தித்த நண்பர்கள், இடங்கள்,
சம்பவங்களை மறந்துவிடுவார்கள். புதிய அடையாளத்துடன் வேறு இடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும்
நிகழ்வது உண்டு. ஏமாற்றுகிறாரோ என நினைக்கவேண்டாம். வாங்கிப்போட்டு உதைத்து கேட்டாலும்
அவருக்கு அவரது முந்தைய வாழ்க்கை, அவரது பெயர் என எதுவுமே நினைவுக்கு வராது.
உலகில் ஏழு சதவீத மக்கள்தொகையினர்
இந்த வகை தற்காலிக நினைவு மறதி பிரச்னையில் தவித்து வருகின்றனர்.
உளவியல் வல்லுநர்களின் சிகிச்சை,
குறிப்பிட்ட இடங்கள், நண்பர்கள், பாடல் என பல்வேறு விஷயங்கள் முயற்சி செய்தால் அவரின்
தற்காலிக நினைவு மறதி அகல வாய்ப்புள்ளது.
**************************************************************************************
ஒருவர் தன்னுடைய கருத்து,
உணர்வுகள் என அனைத்திலுமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்வது, ஒருவர் தன்னை தான் வாழும்
சூழலிலிருந்து பிரித்து உணர்வது ஆகிய இரு குறைபாடுகளை இப்பிரச்னை கொண்டுள்ளது..
ஒருவர் ஐந்து நிமிடத்திற்கு
முன்னர் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அடுத்த பத்தாவது நிமிடம் தான் முன்னர் சொன்ன
விஷயத்திற்கு எதிர்ப்பதமாக ஒன்றை சொன்னால் அவரை நம்புவீர்களா? ஆம் உலகமே இப்படி நடந்துகொள்பவர்களை
பைத்தியம் என்றுதான் சொல்லும். டிரியலைசேஷன் என்றால், ஒருவர் திடீரென வேற்றுகிரகத்திலிருந்து
இங்கு வந்து வாழத்தொடங்கினால் எப்படியிருக்கும்? அனைத்துக்கும் பொருந்த முடியாமல் தடுமாறுவார்.
ஹாக்கி விளையாடுபவர் கிரிக்கெட் மைதானத்தில் என்ன செய்வார்? அதுபோன்றதுதான் இதுவும்.
இவர்களை பல்வேறு கேள்விகளைக்
கேட்டு அறிகுறிகளை அறிவது முக்கியம். அதன்பிறகு, பல்வேறு தெரபி வகுப்புகளோடு மனநிலையை
சமநிலைப்படுத்தும் மருந்துகளையும் சாப்பிடுவது அவசியம். குறிப்பிட்ட சூழ்நிலை ஒருவரது
உணர்ச்சியை ஏன் தூண்டுகிறது என்பதை உளவியல் மருத்துவர்கள் ஆராய்ந்து அதனை தீர்க்க முயல்வர்.
கருத்துகள்
கருத்துரையிடுக