ஏழைமக்களை காக்க இந்திய அரசு தவறிவிட்டது! முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
r.k.laxman cartoon |
மொழிபெயர்ப்பு நேர்காணல்
ப.சிதம்பரம் முன்னாள் நிதி அமைச்சர்
பொருளாதாரத்தை மீண்டெழச்செய்ய என்ன செய்ய வேண்டும்? ஊரடங்கு காலத்திற்கு பிறகு தொழில்துறை மீண்டு வருமா?
தற்போது வேலை இல்லாமல் இருக்கிற தொழிலாளர்களுக்கு இந்திய அரசு மானிய உதவியாக குறிப்பிட தொகையை வழங்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் அதனைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களை வாங்குவார்கள். அடுத்து சிறு,குறு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு வரிச்சலுகைகளையும், நிதியையும் அளிக்கவேண்டும். நிதியை வங்கிக்கடன் மூலம் அரசு வழங்கமுடியும். இவற்றை வழங்கினால் மட்டுமே அரசு திரும்ப பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியும்.
தொழிலுக்கான ஆதாரங்களை எப்படி திரட்டுவது?
திரும்ப பல்வேறு தொழில்களை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஆறு லட்சம் கோடி உறுதியாக தேவைப்படும். அதனை திரட்டி பல்வேறு தேவையில்லாத செலவுகளை குறைத்தால் மட்டுமே அரசு தொழில்துறையைக் காப்பாற்ற முடியும். இதுதவிர, உலகவங்கி நூறு கோடி ரூபாயை அரசுக்கு வழங்கவிருக்கிறது.
ஊரடங்கு காலம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை எப்படி பாதித்திருக்கிறது?
உள்நாட்டு உற்பத்தி இரண்டு காலாண்டுகளில் குறைவாக இருந்தால் பொருளாதார சுணக்கம் என்று கூறலாம். நீங்கள் கூறியது போல உடனே பொருளாதார வீழ்ச்சி என்று கூறிவிட முடியாது. ஏப்ரல் – ஜூனில் உள்நாட்டு உற்பத்தி பூஜ்ஜியத்தை நெருங்கிவிட்டது. அடுத்த காலாண்டு மட்டுமே இப்போது நமது நம்பிக்கையாக இருக்கிறது. அரசு நிதிக்கொள்கையை எப்படி செயல்படுத்துகிறதோ அதைப் பொறுத்தே நிலைமை மாறவிருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் அரசு மற்றும் ஆர்பிஐயின் செயல்பாட்டு எப்படி பார்க்கிறீர்கள்?
மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பொருந்தி இரண்டாவது விளையாட்டு வீரர் போல ஆதரவு தந்து வருகிறது ஆர்பிஐ. அந்த அமைப்பின் முடிவுகளில் எதுவும் பெரிய பிரச்னையில்லை. ஆனால் மத்திய அரசு பொருளாதார சிக்கல்களையும், சுகாதார பிரச்னைகளையும் முதலில் இருந்தே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு அவசியப் பொருட்களை வழங்குவது, நிதியுதவிகளை வழங்குவது, ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக இருப்பது ஆகியவற்றை மத்திய அரசு செய்யத் தவறிவிட்டது.
நன்றி: பிஸினஸ் டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக