உலகில் வாழும் ஆசையை, தாக்குப்பிடிக்கும் தன்மையை மரங்கள் தூண்டுகின்றன!




பெத் மூன்

புகைப்படக்காரர்.

பெத் மூன், உலகின் அரிய வயதான மரங்களை புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார். அவரிடம் பேசினோம்.

நீங்கள் பார்த்த மரங்களில் உங்களை ஆச்சரியப்படுத்திய மரம் எது?

பல்வேறு காரணங்களுக்காக நான் பார்க்கும் ஒவ்வொரு மரமுமே எனக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் செனகல் சென்றபோது அங்கு பார்த்த மரத்தை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். அங்குள்ள கிராமத்தின் நடுவில் உள்ள மரம், அனைத்து மக்களும் கூடுமிடமாக உள்ளது. அதன் உட்புறம் பளிங்கு போன்று இருந்தது. அதன் மேற்பகுதியில் வௌவால்கள் வாழ்ந்து வந்தன. அடுத்தநாள் அங்கு சென்றபோது சூரியனின் காலை வெளிச்சம் விழும்போது அதனை புகைப்படம் எடுக்க நினைத்தேன். அக்டோபர் மாதத்தின் நடுவில் சென்றதால், மரத்தில் உள்ள கனிகளைப் பார்த்தேன். இதனால் மரத்தில் ஏராளமான பறவைகளை என்னால் பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.

தொன்மையான மரங்களை படம் எடுக்க தூண்டியது எது?

இயற்கையின் அழகைக் கொண்டுள்ள ஆதார விஷயங்களை படம்பிடிக்க ஆசைப்பட்டேன். இயற்கையிலுள்ள தொன்மையான மரங்களைப் படம் பிடிப்பது அதன் மீதான கவனத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நினைத்தேன்.

மரங்களை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

காலத்தின் பல்வேறு சவால்களை சந்தித்து மரங்கள் வாழ்வது எனக்கு பெரும் வியப்பை அழித்தது. மரங்களை படம் பிடித்து இருபது ஆண்டுகள் கழித்து பார்த்தால், என் வாழ்நாளிலேயே அவற்றின் மரணத்தை பார்த்தேன். தெற்கு இத்தாலியில் ஆலிவ் மரங்கள் பெயர் தெரியாத நோயால் இறந்துபோயின. அண்மையில் ஆப்பிரிக்கா, நமீபியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் நிறைய மரங்கள் அழிந்துபோய்விட்டன. நாம் இம்மரங்களைக் காக்க நிறைய முயற்சிகளை செய்யவேண்டும்.

உங்கள் புகைப்படங்களில் மரங்கள் வாழவிரும்புவதற்கான எத்தனிப்பை பதிவு செய்திருக்கிறீர்களா?

இன்யோ தேசியப்பூங்காவில் உள்ள பிரிஸ்டல்கோன் பைன் மரங்கள் எத்தனை ஆண்டுகளாக அங்கு உள்ளன தெரியுமா? 4 ஆயிரம் ஆண்டுகளாக அவை அங்கு வாழ்கின்றன. அவற்றின் வளர்ச்சி இன்று நின்றுபோயிருப்பது கூட தேவையான நீர் இல்லாத காரணத்தினால்தான். இம்மரங்கள் எந்த சவாலான சூழலிலும் வளரக்கூடியவை. அவற்றின் வாழ்க்கை எனது புகைப்படங்களில் நீங்கள் பார்க்க முடியும்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, ஸ்ரீஜனா மித்ரா தாஸ். 

கருத்துகள்