கால்பந்து வீரர்களுக்கு அபாயமான மனநிலை பாதிப்பு!

சிடிஇ: குரோனிக் டிராமாடிக் என்செபலோபதி

கால்பந்து, ரக்பி, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களை விளையாடுபவர்களுக்கு இப்பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தலையில் அடிபடுவதால் தலைவலி, கிறுகிறுப்பு, ஞாபக மறதி, முடிவெடுக்கமுடியாமல் திணறுவது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமை ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்துவீரர்கள் 99 சதவீதம் பேருக்கு சிடிஇ பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்பு மூளையில் ஏற்படுவதைத் தடுக்க தலைக்கவசம் அணிந்து விளையாடுவது முக்கியம்.

சிடிஇ பாதிப்பு தீவிரமாகும்போது பார்க்கின்சன், டிமென்ஷியா பாதிப்புகள் வெளித்தெரியத் தொடங்கும். தலையில் மூன்றுமுறைக்கு மேல் அடிபட்டால் சிடிஇ குறைபாடு ஏற்பட்டுவிடும். இப்பாதிப்பு ஏற்பட்டவர்களை இறந்தபின்னர்தான் கண்டுபிடித்து வந்ததனர். ஆனால் இன்று நவீன அறிவியல் வசதிகளால் மூளையை ஸ்கேன் செய்து அடிபட்ட பகுதியை ஸ்கேன் செய்து பாதிப்பை அறியலாம். ஆனால் குணப்படுத்த முடியாது. தலையில் அடிபட்ட நூறு பேர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் இருபது முதல் ஐம்பது பேர்களிடம் சிடிஇ பாதிப்பு காணப்பட்டது. நூறில் ஒருவருக்கு சில ஆண்டுகள் கழித்து சிடிஇ அறிகுறிகள் தென்பட்டன.

உளவியல் வல்லுநர்களிடம் அறிகுறிகளைச் சொன்னால் அவர்கள், மன அழுத்தம் குறைவதற்கான தெரபி, மருந்துகளைக் கொடுப்பார்கள். தலை முழுமையாக குணமடைந்தாலும் அறிகுறிகள் வெளிப்பட்டால் விளையாட்டை கைவிட்டு ஓய்வெடுப்பது முக்கியம்.

 

  

டெலிரியம்

அக்யூட் கன்ஃபியூசனல் ஸ்டேட்

உலகிலுள்ள ஐம்பது சதவீத வயதானவர்களுக்கு டெலிரியம் பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மார்பு மற்றும் சிறுநீரக தொற்று உள்ளவர்கள், முறையான உணவுமுறையை பின்பற்றாதவர்கள்., ஊட்டச்சத்து பற்றாக்குறை கொண்டவர்கள், தீவிரமான நோய் பாதிப்பு கொண்டவர்கள் ஆகியோருக்கு டெலிரியம் பாதிப்பு ஏற்படுகிறது.

இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள் முகம் தூங்கினார்களா, தூங்கி எழுந்திருத்திருக்கிறார்களா என்று யாருமே சொல்ல முடியாத அம்சத்துடன் இருக்கும். மிக மெதுவாக அல்லது சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் நடப்பார்கள். தசைகளை இவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் பேசுவதை யாரும் புரிந்துகொள்ள முடியாது. மனநிலை ரிமோட்டில் டிவி சேனல்களை மாற்றுவதைப் போல மாறிக்கொண்டே இருக்கும்.

உளவியல் மருத்துவர்கள் நோயாளிகளின் அறிகுறிகளைக கேட்டும் அவர்களின் செயல்பாடுகளை நாள்முழுவதம் கவனித்து நோயைக் கண்டுபிடிக்கிறார்கள்.

நோயாளிகளுக்கு பார்க்கும் விதமாகவும், பேச்சு மூலமாகவும் அவர்களைக் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவைக்கலாம்.

தினசரி அவர்கள் செய்யவேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு கடைப்பிடிக்க சொன்னால் அவர்களின் நினைவுத்திறன் பாதாளத்தில் வீழாது.

தீவிரமான உடல்நலபாதிப்பை சரிசெய்ய முயல வேண்டும்.

கருத்துகள்