பரபர துறுதுறுவென திரியும் குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி இருக்கலாம்!
pixabay |
ஏடிஹெச்டி- அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்
மூளையிலுள்ள நரம்புமண்டலத்தில் ஏற்படும் குறைபாடு. இதன் காரணமாக குழந்தைகள் பரபர சுறுசுறுவென கட்டுப்படுத்த முடியாதபடி வேலைகளை செய்வார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் இருப்பார்கள். இடையறாது ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பதால் ஓய்வு என்பதே இவர்களுக்குத் தெரியாது. பார்த்தால் இது நல்ல விஷயம்தானே என்று தெரியும். ஆனால் வகுப்பில் இவர்களால் ஓரிடத்தில் அமர்ந்து பாடங்களை கேட்க முடியாது. அதனால் அனைத்து வகுப்புகளிலும் வகுப்புக்கு வெளியில் அவுட்ஸ்டேண்டிங்காக நிற்பார்கள். அல்லது இவர்களை நீங்கள் சிறப்புக் குழந்தைகள் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டியிருக்கும்.
மரபணு, சூழல், பிறக்கும்போது குறைந்த எடை, கருவிலிருந்து முன்கூட்டியே பிறப்பது ஆகியவற்றால் ஏடிஹெச்டி பிரச்னை ஏற்படுவதாக ஆய்வு வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
குழந்தையாக இருக்கும்போதும் இந்த செயல்பாடைக் கண்டுபிடிப்பது கடினம். அப்படி கண்டுபிடித்தால் இளைஞராகும்போது அவருக்கு ஏற்படும் வேலைவாய்ப்பு, உயர்கல்வி ஆகிய சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
இக்குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அப்புறம்தான் ஏடிஹெச்டி பிரச்னையைக் கண்டறிய முடியும். எவ்வளவு வேகமாக கண்டுபிடிக்கிறீர்களோ அவ்வளவு உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நல்லது.
அறிகுறிகளைப் பார்ப்போம்.
இவர்களை ஆண்டவனை வந்து சொன்னாலும் உட்கார வைக்க முடியாது. எழுந்து அங்குமிங்கும் நடப்பார்கள். ஓடுவார்கள். இதன் காரணமாக வகுப்பில் அமரச்செய்து ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுப்பது ம்ஹூம் என்ன செய்தாலும் நடக்காது.
கை, கால், தலை என உடல் பாகங்களை தேவையோ இல்லையோடு அசைத்துக்கொண்டே இருப்பார்க்கள். இது நிற்கும்போதும், நடக்கும்போதும் நடக்கும்.
நமக்கு காது செவிடோ எனும்படி அனைத்து விஷயங்களையும் சத்தம் போட்டு சொல்லிவிட்டுத்தான் செய்வார்கள். மென்மையாக பேசுவது என்பது இவர்களுக்குத் தெரியாது.
எப்போது ஏதாவது ஒரு விஷயத்தை செய்துகொண்டே இருப்பதால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்து, ஆபத்தில்லை என்பதை உணரமாட்டார்கள்.
நிறைய விஷயங்களை டக்கென மறந்துவிடுவார்கள்.
எதையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். யாராவது பேசும்போது இடையில் திடீரென புகுந்து பேசுவார்கள். எதையும் முழுமையாக செய்யமாட்டார்கள்.எளிதில் கவனம் கலைந்துவிடும்.
பொருட்களை எளிதில் கீழே போட்டு உடைத்துவிடுவார்கள்.
டிவி தொகுப்பாளர்களை விட அதிகம் பேசுவார்கள். அவர்களைப் போலவே யோசிக்காமல் பேசுவார்கள். பிறர் பேச வாய்ப்பே தர மாட்டார்கள்.
எப்படி கையாள்வது?
தினசரி இக்குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதை பட்டியல் போட்டு அவர்கள் அதைப் புரிந்துகொள்ளும்படி கூறவேண்டும். இதனை படமாகவே, எழுத்துக்களாகவே நீங்கள் உருவாக்கலாம்.
குழந்தைகள் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்தால் அவர்களுக்கு பரிசுகளை வழங்கலாம். இதனால் விஷயங்களை கவனம் சிதறாமல் அவர்கள் செய்து முடிக்க முடியும்.
குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை பெற்றோர் புரிய வைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க முடியும்.
ஏடிஹெச்டி குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு தனியே தெரபிகள் உண்டு. அதனை பெற்றோர் ஏற்று செய்யலாம். மூளையிலுள்ள டோபமைன் சுரப்பு இவர்களுக்கு அதிகம் என்பதால், அதனை தூண்டிவிடக்கூடிய பானங்களை குடிக்க தரக்கூடாது. அவர்களை அமைதிபடுத்தினாலே அவர்களின் செயல்பாடுகள் குறையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக