முன்னாள் காதலியின் சதியில் மாட்டும் காதலனின் கதை! - ப்ரீசியஸ் கார்கோ





cinema.com.my: Precious Cargo450 × 675





ப்ரீசியஸ் கார்கோ 2016 ஆங்கிலம்

இயக்கம் மேக்ஸ் ஆடம்ஸ்

கதை – ஆடம்ஸ், பால் சீட்டாசிட்

இசை ஜேம்ஸ் எட்வர்ட் பார்கர், டிம் டெஸ்பிக்

ஒளிப்பதிவு பிராண்டன் காக்ஸ்


கரென் என்ற கொள்ளைக்காரி, எடி என்ற குற்றவாளி தலைவரை ஏமாற்றி வைரங்களை திருடுகிறார். இதற்காக கரென் தன் முன்னாள் காதலனின்(ஜாக்) உதவியை நாடுகிறாள். அதற்கு சொல்லும் பொய், அவளது முன்னாள் காதலனின் தோழி லோகனின் உயிரை ஊசலாட வைக்கிறது. இறுதியில் எடியின் பிடியில் சிக்கிக்கொள்ளும் கரெனை எப்படி ஜாக் மீட்கிறான் என்பது இறுதிக்காட்சி.

சிறிய அளவில் குற்றவாளிக்குழுக்களுக்கு ஆயுதங்களை கொடுக்கல் வாங்கல் செய்து வருகிறான் ஜாக். அவனின் பேக்கப்புக்காக அவனோடு எப்போது துணையாக இருக்கிறாள் கேர்ள்பெஸ்டி லோகன். இது காதலா, நட்பா என யோசிக்காதீர்கள். கடைசிவரையும் நட்பாகவே கொண்டுபோய் முடித்துவிட்டார்கள்.

ஜாக்குக்கு முன்னாள் காதலி ஒருத்தி இருந்தாள். ஆனால் கருத்துவேறுபாட்டில் பிரிந்துவிடுகிறாள். ஜாக் சரி, மனம் காலியாகத்தானே இருக்கிறது என காதலிக்க நினைக்கிறார். அப்போதுதான் லோகனின் நாய் கிரேஸ் வசமாக மாட்ட அதை வைத்தே விலங்குகள் மீது பாசம் கொண்ட டாக்டர் பெண்ணை வலையில் வீழ்த்துகிறார். மேற்படி பெண்களை டின்னரை அழைத்தால் சாப்பாடு என்னவாக இருக்கும்? அந்த பெண்ணை வளைத்து சமாச்சாரம் செய்யும்போது திடுக்கென அவனைத் தேடி முன்னாள் காதலி கரென் வந்துவிடுகிறாள். அவனது குழந்தையை வயிற்றில் சுமப்பதாக பேச, டி.ஆரைவிட வேகமாக கண்ணீர் விடுகிறார் ஜாக். அதற்காகவே அவளைக் காப்பாற்றி, அவளின் திட்டத்திற்கு உடன்படுகிறான். அவன் குழு நண்பர்களை திரட்டி எடி எனும் க்ரைம் மன்னனோடு மோதுவதுதான் முக்கியமான காட்சிகள். ஆக்சன் காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள். அதை பார்க்கலாம். அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதற்கான விஷயம் கதையில் உள்ளது.

ஆஹா

ஆக்சன் காட்சிகள்தான். நாயகன் அம்சமாக இருக்கிறார். லோகனும் கூடத்தான். அப்புறம் எதுக்கு டாக்டர் அம்மணியை நாயகன் லவ் பண்ணனும் என்ற கேள்வியைக் கேட்க கூடாது. கரென்னின் சின்ன துரோகம், பொய்தான் படத்தின் பெரிய ட்விஸ்ட். மற்றபடி வேறொன்றுமில்லை.

ஐயையோ

படத்தில் ப்ரூஸ் வில்லிஸ் நடக்கிறார், பேசுகிறார் அவ்வளவுதான். அவருக்கு முழு ஓய்வு கொடுத்துவிட்டதால் படத்தில் வேகம் ஏதுமில்லை. நாயகன் என்ன நினைக்கிறானோ அதை செய்கிறான். அப்புறம் எதுக்கு வில்லன் என்று ஒருவர் என இயக்குநர் யோசிக்கவேயில்லை.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்