இடுகைகள்

தண்டகாரண்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயநலமான மனிதர்கள், சமூகம், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் உள்நாட்டு அகதியின் வாழ்க்கை!

படம்
        மனோரஞ்சன் பியாபாரி, எழுத்தாளர்     இன்ட்ரோகேட்டிங் மை சந்தால் லைஃப் மனோரஞ்சன் பியாபாரி சிறுவயதில் தான் பிறந்தவுடனே தனது நாக்கில் வைக்க வீட்டில் தேன் இல்லை என்று மனோரஞ்சன் கூறுகிறார் . அப்படி இனிப்பு வைக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை . நூலில் இந்த பகுதியை படிப்பவர்களுக்கு இது பெரிதானதாக தோன்றாது . ஆனால் மனோரஞ்சனின் வாழ்க்கை மோசமாகவே அமைகிறது . இனிப்பு என்ற சுவையே உண்ணாதவன் , அறியாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும் ? இவரது வாழ்க்கையும் அப்படித்தான் . இந்த சுயசரிதை பலரையும் அச்சப்படுத்தக்கூடியது . பீதியூட்டக்கூடியது . அந்தளவு சாதியால் , துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர் . மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மனோரஞ்சன் . இன்று அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார் . ஆனால் அவரது தொடக்க , மத்தியகால கட்ட வாழ்க்கை என்பது புழுத்த நாய் குறுக்கே போகாது என வசைபாடுவதைப் பற்றி தி . ஜா கூறுவார் . அதைப்போலத்தான் உள்ளது . அந்தளவு நெருக்கடிகள் . வறுமை , வேலை செய்து சம்பளம் கிடைக்காதது , ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவது , ரயிலில் டிக்கெ