இடுகைகள்

இந்தி திரைப்பட இயக்குநர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படத்தில் கதையைப் பற்றித்தான் பார்வையாளர்களிடம் பேசுகிறேன்! பிரகாஷ் ஜா, இந்தி திரைப்பட இயக்குநர்

படம்
        பிரகாஷ் ஜா, பிரகாஷ் ஜா, இந்தி திரைப்பட இயக்குநர் நீங்கள் எடுக்கும் படங்களில் நடிப்பவர்கள் கதையைத் தாண்டி நடிப்பதில்லை. எப்படி இந்த சூழலை ஏற்படுத்துகிறீர்கள்? அது எளிமையானதுதான். ஆனால் படத்தில் கதையைப் பற்றித்தான் பார்வையாளர்களிடம் பேசுகிறேன். அதில் நடித்துள்ள நட்சத்திரங்களைப் பற்றியல்ல. எனவே இந்த கோணத்தில் அணுகும்போது படம் சரியாக இருக்கிறது. படத்தில் கதை, கதாபாத்திரம் என்று மட்டும் பார்க்கமுடிகிறது. இப்போது வெளிவந்துள்ள ஆஷிராம் வெப்சீரியசிலும் கூட பாபி தியோல் படத்தில் தெரியமாட்டார். பாபாதான் தெரிவார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். வெப்சீரிஸ் செய்வது எப்படியிருக்கிறது? ஆஷிராம் சீரிஸை நாங்கள் நான்கு மாதங்களாக எடுத்தோம். இப்போது அடுத்த சீசனுக்கு தயாராகிவிட்டோம். வெப் சீரிசில் தனித்தனிய கதாபாத்திரத்தை விரிவாக காண்பிக்கும் வாய்ப்பு உள்ளது. சினிமாவில் அது சாத்தியமாகாது. நீங்கள் உடலை கவனமாக பராமரிக்கிறீர்கள் என்று அறிந்தோம். உங்களின் ஆரோக்கிய ரகசியத்தைச் சொல்லுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுவதும் என்னுடைய வழக்கம். சைவ உணவு சாப்பிடுகிறேன். தினசரி