தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர்! - இந்தியா - சீனா அரசியல் கொள்கைகள் ஒப்பீடு
சீனா, அமெரிக்காவை விலக்கி முதலிடத்தை அடையும் முயற்சியில் உள்ளது. அதன் ஒழுக்கம், கட்சி கட்டுப்பாடு, அர்ப்பணிப்பான உழைப்பு குலையாத பட்சத்தில் அதை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவை சீனாவுக்கு எதிராக நிறுத்த மேற்கு நாடுகள் முயல்கின்றன. அவர்களின் உள்மன ஆசை அப்படி இருக்கலாம். ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி உள்ளது. இருநாட்டில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம். சீனாவில் மக்கள் குடியரசு ஆட்சியில் உள்ளது. இதிலுள்ள அதிகாரிகள், பிரதமர், அதிபர் அனைவருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அங்கு ஒரே கட்சிதான் உள்ளது. அந்த கட்சிதான் அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுக்கிறது. இதற்கான நிர்வாக கமிட்டியில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு இடம் இல்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிகராக கூறவேண்டுமெனில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக உள்ளது. இதன் தாய் சங்கமாக இந்து தீவிரவாத அமைப்பு, ஆர்எஸ்எஸ் உள்ளது. கலாசார அமைப்பு என பிரசாரம் செய்துகொள்ளும் இந்த அமைப்பே, இந்தியாவை உருவாக்கிய நவீன சிற்பிகளில் ஒருவரான மகாத்மா காந்தியை படுகொலை செய்தது. உறுப்பினர்கள் அடிப்ப...