இடுகைகள்

சாமந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்!

படம்
  தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்!  காடுகளில் விலங்குகள்  தனது எல்லையை உறுதி செய்ய, எதிரிகளை எச்சரிக்க, உணவு தேட என  பலவகையில் குரலைப் பயன்படுத்துகிறது. மனிதர்களுக்கும் தகவல் தொடர்பு கொள்ள குரல் முக்கியமானது. இன்று இதை மிஞ்சும்படியாக சுற்றுப்புறமெங்கும் வாகன இரைச்சல், அதிகரித்து வருகிறது. இவற்றிலிருந்து விலங்குகள் மற்றும் மனிதர்கள் நகர்ந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் தாவரங்கள் என்ன செய்யும்? இதைப்பற்றிய ஆராய்ச்சி ஈரான் நாட்டில் நடைபெற்றுள்ளது.  ஈரானின் தலைநகரான டெஹ்ரானில், சாஹித் பெகிஷ்டி பல்கலைக்கழகத்தில்  ஒலி மாசுபடுதல் பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வை தாவரவியலாளர் அலி அக்பர் கோட்பி  ராவண்டி வழிநடத்தினார். இதில்தான், தாவரங்களும் ஒலி மாசுபடுதலால் பாதிக்கப்படுவதை கண்டுபிடித்திருக்கின்றனர்.  பெரும்பாலான தாவரங்கள் தம் வளர்ச்சிக்கு  மகரந்த சேர்க்கையை நம்பியே உள்ளன. இதற்கு விலங்குகள் மறைமுகமாக உதவுகின்றன. வாகன இரைச்சல் காரணமாக விலங்குகளின் வரத்து குறைந்தால், அது தாவரங்களையும் பாதிக்கிறது. திட, திரவ, வாயு என மூன்று ஊடகங்களின் வழியாக ஒலி, அலைகளாக பரவுகிறது. இதனை தா