இடுகைகள்

அமிஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சதியின் இறுதி முடிவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
            தின்பண்ட நிர்பந்தம் ! அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . இன்றும் நான் அலுவலகம் சென்றேன் . சற்று ரிலாக்சாக வேலை செய்ய சனிக்கிழமை உதவுகிறது . ஆனால் என்ன நான் வாங்கும் சில தின்பண்டங்களை டெய்லி கதிர் செக்யூரிட்டிகளிடம் பகிர்ந்து சாப்பிடும் நிர்பந்தம் உள்ளது . அவ்வளவுதான் . வரும் வாரத்தில் தொடங்கும் நாளிதழ் வேலைகள் மெல்ல சுணங்குவது போல தோன்றுகிறது . எழுதும் ஆட்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது . நானே எழுதினால் அதுவெறும் செய்திக்கட்டுரை என்கிறார்கள் . பிறகு என்னதான் செய்வது என்றால் நம்மைப் பார்த்து கையை விரிக்கிறார்கள் . பிழைப்பு இப்படித்தான் ஓடுகிறது . வேர்ட் ஆப் ஹானர் என்ற வெப் தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் . மாண்டரின் மொழி தொடர் . எம்எக்ஸ் பிளேயரின் தமிழ்மொழிபெயர்ப்பு . தொன்மையான தற்காப்புக்கலை வல்லுநர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் . அதை பல்வேறு தனி மனிதர்கள் , தற்காப்புக்கலை மடங்கள் அடைய ஆசைப்படுகின்றன . அதை அடைந்தால் அவர்கள்தான் சீன நாட்டையே ஆளும் சக்தி பெறுவார்கள் . ஆயுதக்கிடங்கை அடையும் பேராசை மனிதர்களை எப்படி பாதிக

சுலைமானி டீயை அறிமுகம் செய்த அருமை நண்பர் சக்திவேல்! கடிதங்கள்- கதிரவன்

படம்
  25.1.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  நோய்த்தொற்று ஓரளவுக்கு இங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஞாயிறு லாக்டௌன் விலக்கப்பட்டு விடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி நடந்தால் நல்லதுதான். நாங்கள் தினசரி செய்திகளை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறோம். ஃபாரின் ரிடர்ன் முதலாளிக்கு பிடித்தால் வேலை இப்படியே தொடரும். இல்லையா மீண்டும் கோட்டை அடித்து திரும்ப போடவேண்டியதுதான்.  கதிரவன், முன்னர் நீங்கள் அனுப்பி வைத்த கடிதங்களை தொகுத்து தனி நூலாக்கிவிட்டேன். வெகுநாட்களாக தேங்கி கிடந்த வேலை அது. நூலை முடித்து மின் நூலாக அமேஸானில் பதிவேற்றம் செய்துவிட்டேன். இதுவரை அமேஸானில் பத்து மின்னூல்களை எழுதி பதிவிட்டுள்ளேன்.  குறிப்பிட்ட நேரத்தில் விஷயங்களை சேகரித்து எழுத முடியுமா என்று சோதித்த சோதனையின் விளைவுகள் இவை. வணிக ரீதியாக இந்த மின்நூல்களால் பெரிய பயன் ஏதுமில்லை. இந்த நூல்களை எழுதி முடிக்கும்போது தன்னிறைவு கிடைக்கிறது. அதுதான் இப்போதைக்கு ஊக்கம். பணம் பிறகுதான். அதுவும் கிடைத்தால்தான். ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் மனிதநேய உதவிகளை வழங்கிய மனிதர்களைப் பற்றி எழுதியிருந்

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான

சட்டத்தை தனது வாழ்வாக கொள்பவனின் மனைவியை ராவணன் கொள்ளையடித்தால்..... - இஷ்வாகு குலத்தோன்றல் - அமிஷ்

படம்
  எழுத்தாளர் அமிஷ் இஷ்வாகு குலத்தோன்றல் அமிஷ் தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசன்  வெஸ்லேண்ட் ராமாயணத்தை தனது பார்வையில் எழுதியுள்ளார். இதில் மூன்று பாக நூல்கள் உள்ளன. ராவணன் ஆர்ய வர்த்தாவின் எதிரி நூலை முன்பே படித்து அதற்கான விமர்சனத்தை எழுதியுள்ளோம். இப்போது, இந்த நூலைப் பற்றி பார்ப்போம். வாய்ப்பு கிடைத்தால் சீதா - மிதிலாவின் போராளி நூலையும் வாசித்து எழுதுவோம்.  கதை தொடங்குவது தண்ட காரண்யா வனத்தில். லஷ்மணனும், ராமனும் மானை வேட்டையாட தயாராக இருக்கிறார்கள். அதை வேட்டையாடி தூக்கிக்கொண்டு வரும்போது சீதா , ராமனை அழைக்கும் குரல் கேட்கிறது. அதை தேடி வேகமாக போகும்போது ராவணன் சீதாவை புஷ்பக விமானத்தில் கடத்திக்கொண்டு செல்கிறான். பாதுகாப்பிற்கு இருந்த ஜடாயூ ஏறத்தாழ குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறார்.  கதை பின்னோக்கி செல்கிறது. அதில் அயோத்யா நகரம் எப்படி இருக்கிறது, அதன் கலாசாரம், அங்குள்ள மக்கள் எப்படி என மெல்ல வாசகர்களுக்கு தெரிய வருகிறது.  தசரதன் சப்தசிந்து கூட்டமைப்பில் மன்னராக இருக்கிறார். இதுதான் பல்வேறு சிற்றரசுகளின் கூட்டமைப்பு. இதனை பல்வேறு அடக்குமுறைகளை செய்து மிரட்டி, ஒடுக்கி கப்பம் கட்டு