இடுகைகள்

ரிசர்வ்வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமா?

படம்
          பணம் - கையாளப் பழகுவோம் 3 முதலீடும் துணிச்சலும் வங்கியில் முதலீடு செய்வது , அதற்கான அதிக வட்டியை எதிர்பார்ப்பது ஆகியவற்றிலும் ஆபத்துகள் உண்டு . முதலீடு மூலம் கிடைக்கும் நிதி பயன்களை நினைத்து செய்யும் அனைத்து நிதி முதலீடுகளிலும் பல்வேறு அபாயங்கள் உண்டு . எனவே , திட்டத்தை ஆராயாமல் செயல்பட்டால் , முதலீடு செய்த பணம் கைவிட்டுப் போகும் அபாயம் உண்டு . நிதிப்பயன்களை குறைவாக வரையறுத்துக்கொண்டால் , நீங்கள் செய்யும் செயல்களில் ஆபத்துகளும் குறையும் . நிதி சார்ந்த முதலீடுகளில் முக்கியமான விதி இதுதான் . அதிக பணத்தை எதிர்பார்த்து முதலீடுகளை தேர்ந்தெடுத்தால் அதில் பெருமளவு இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது . குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் திட்டங்களை நம்பி உடனே அதிகளவு பணத்தை முதலீடு செய்யாதீர்கள் . மேலும் , திட்டம் பற்றி நிறுவனங்கள் தரும் திட்ட அறிக்கையை முழுமையாக படித்து நிபந்தனைகளை நன்றாக யோசித்துவிட்டு நிதி முதலீடுகளைச் செய்யுங்கள் . நீங்கள் பணம் கட்டி வரும் நிறுவனம் உங்கள் முதலீட்டுத்தொகையை தர மறுத்துவிட்டால் , திட்டம் தொடர்பாக ஏதாவது பிரச்

பரவும் டிஜிட்டல் கரன்சி மோகம்! - இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா?

படம்
        cc       பரவும் டிஜிட்டல் கரன்சி மோகம் ! இந்திய ரிசர்வ் வங்கியின் மே மாத இதழில் டிஜிட்டல் கரன்சி பற்றிய ஆய்வு வெளிவந்துள்ளது . ஒய் . வி . ரெட்டி போன்ற முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இதழின் ஆலோசனைக் குழுவில் இருக்கும் நிலையில் , இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது . இந்தியா , டிஜிட்டல் கரன்சிகளை இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை . பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வு , டிஜிட்டல் கரன்சிகளின் எதிர்காலம் , பிற நாடுகள் அதனை எப்படி உருவாக்கி வருகின்றன என்பதை விவரித்தது . கிரிப்டோகரன்சிகள் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாதவை . இவை கிரிப்டோகிராபி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன . டிஎல்டி தொழில்நுட்பம் மூலம் கிரிப்டோகரன்சிகளின் செயல்பாடுகளை அறியமுடியும் . பல்வேறு நாடுகள் தொடங்கி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனம் ( லிப்ரா குளோபல் ) கூட இதில் ஆர்வம் காட்டுகிறது . ” ஜப்பான் , டிஜிட்டல் கரன்சி பற்றிய பணிகளைத் தொடங்கிவிட்டது . இந்தியா இன்று இல்லையென்றாலும் இன்னும் சில ஆண்டுகளில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த தொடங்கும்” என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்ன