இடுகைகள்

நிச்சயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாக்சியின் கவர்ச்சி தாராளத்தில் களைகட்டும் யுவராஜூ!

படம்
  யுவராஜூ   மகேஷ்பாபு பால் வடியும் முகத்துடன் பிளேபாயாக நடித்துள்ள படம். படத்தை யாருக்காக பார்ப்பது என்றால், தயங்கவே வேண்டாம். சாக்சி சிவானந்தின் கவர்ச்சிக்காக பார்க்கலாம். மூன்று பாடல்கள் அவருக்கென இருக்கிறது. ஒரு பாடல் சிம்ரனுக்காக. இன்னொரு பாடல் நாயகனின் அறிமுகம். மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா, கௌசல்யாவின் அறைக்கு குடிபோதையில் சென்று தூங்கும் பெண்ணை   கசகசா செய்வாரில்லையா அதே போல்தான் படத்தில் ட்விஸ்ட் உள்ளது. இதில் அந்த சமாச்சாரத்தில் ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்தே வருகிறார் சிம்ரன். இந்த உண்மையை தெரிந்துகொண்டு மகேஷ்பாபு தனது கல்யாணத்தை நிறுத்தி, சிம்ரனோடு சேர்கிறார். ஆனால், அதற்குள் சாக்சியோடு மழை நடனம் ஆடி, நிச்சயதார்த்தத்தின் போது முதுகு, இடுப்பு, உதடு என முத்தம் கொடுத்து பலவித இளமைக் குறும்புகளை செய்துவிடுகிறார். அதற்குப்பிறகுதான் உண்மை தெரிகிறது. யாருக்கு? முதலில் மகேஷூக்கு பிறகு சாக்சிக்கு. அப்படியும் கூட சிம்ரனுக்கு ரத்தவாந்தி ஏற்பாடு செய்திருக்கிறார். இயக்குநர். ஆனாலும் கூட இறுதியில் சாக்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகேஷோடு வாழத்தான். வேறு எதையும் கற்பனை ச

திருமணம் நிச்சயிக்கப்பட்ட எட்டு மாதத்திற்குள் பேஷன் டிசைனராகி தன்னை நிரூபிக்கும் பெண்! மெரிசே மெரிசே - இயக்கம் பவன் குமார்

படம்
  மெரிசே மெரிசே தெலுங்கு தமிழ் டப்  படத்தில் உள்ள ஆந்திரதேச ஊர்களை பொள்ளாச்சி, சென்னை என மொழிபெயர்த்தவர்கள் படத்தின் டைட்டிலை அப்படியே விட்டு விட்டார்கள்.   படத்தில் வேறு விஷயங்கள் ஏதுமில்லை. பெண் தனக்கான அடையாளத்தை உருவாக்க எந்தளவு கஷ்டப்படுகிறாள். அதற்காக அவள் படும் பாடுகளே கதை. இதில் பெரிதாக நாயகனுக்கு வேலை கிடையாது. நாயகனின் பெயர் சித்து, நாயகி பெயர் வெண்ணிலா. படத்தின் முதல் காட்சியிலேயே பெண்ணுக்கு கல்யாண நிச்சயம் ஆகிவிடுகிறது. அப்போது பெண் பிகாம் படித்துக்கொண்டிருக்கிறாள். அம்மா இல்லாத பெண். அப்பா மட்டும்தான். எனவே, அவர் நிறைய வரதட்சிணை கொடுத்துத்தான் பெண்ணை மணமுடிக்க நினைத்திருக்கிறார். அப்போது எட்டுமாதம் கழித்து   தான் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக மாப்பிள்ளை சொல்லுகிறார். அப்போதே பெண்ணின் தந்தை எட்டு மாதமா என திடுக்கிடுகிறார். ஆனால் மாப்பிள்ளை அவரை சமாதானப்படுத்துகிறார். அப்போதே கதை ஏறத்தாழ புரிந்துவிடுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அந்தப் பெண் கிடைக்கமாட்டாள் என்பது. இந்த இடைவெளியில் பிகாம் படிப்பை பாதியில் நிறுத்திய பெண், தனது உறவினர் வீட்டுக்கென சென்னைக்கு செல்கிறாள்.