இடுகைகள்

தள்ளுபடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 80

பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்கள்! - வாங்கும் பழக்கத்தை ட்யூன் பண்ணுங்க!

படம்
  உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை எதிர்கொள்ள என்ன செய்வது என நாம் நிர்மலா சீதாராமனிடம் அட்வைஸ் கேட்க முடியாது. அட்வைஸ் கேட்கிறாயே அதற்கென தனி ஜிஎஸ்டி போட்டுவிடுகிறேன் என்று கூட உத்தரவிடலாம்.  திட்டமிடுங்கள்  ஆன்லைனோ, இன் ஸ்டோரோ எதுவாக இருந்தாலும் ஆஃபர் உள்ள பொருட்களை வாங்குவது முட்டாள்தனம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம், புரமோட்டர்கள் உங்களை கடைகளுக்கு சென்று துரத்தி பொருட்களை வாங்க வைக்க முயல்வார்கள். அவர்கள் பொருட்களை திருடும் காக்கைகளைப் போல கை தூக்கி விரட்டி விட்டு எதற்கு கடைக்கு வந்தீர்களோ அந்த வேலையைப் பாருங்கள். அதுதான் வாழ்க்கை வளம் சேர்க்கும்.  சூப்பர் மார்க்கெட்டோ, ஹைப்பர் மார்க்கெட்டோ எதுவாக இருந்தாலும் வாங்க வேண்டிய பொருட்களை நீங்கள் பட்டியல் போட்டபின்னரே கடைக்கு போகவேண்டும். அப்படி போகாதபோது பர்சிலுள்ள பணம் வெட்டியாக செலவாகும்  பிராண்டிற்கு மாற்று  இதுவரை பிராண்டுகளை வாங்க நிறைய செலவு செய்திருப்பீர்கள். ஆனால் இனிமேல் அது சாத்தியமாகாது. எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள கம்பெனியின் சுயமான மா

கடனால் பாதிக்கப்பட்ட விவசாயியை அடையாளம் காண்பது இனி ஈஸி!- நபார்ட் வங்கியின் விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல்(FDI)

படம்
  நபார்ட் வங்கியை கேள்விப்பட்டிருப்பீர்கள். விவசாயத்திற்கான கடன்களை வழங்கிவரும் வங்கி இது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல் ஒன்றை உருவாக்க உள்ளது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் விவசாயிகளை எளிதாக அடையாளம் காண முடியுமாம்.  சின்ன டேட்டாவைப் பார்த்துவிடுவோம்.  தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய கடன் தள்ளுபடி தொகை ரூ.60 ஆயிரம் கோடி - 2008 2012 - 2013 ஆம் ஆண்டில் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13 2019ஆம் ஆண்டு உ.பி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை  36 ஆயிரம் கோடி 2017இல் மகாராஷ்டிர அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை 30 ஆயிரம் கோடி  இத்தனை தள்ளுபடி கொடுத்தபிறகுதான் ஒன்றிய அரசுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. நாம் சரியான ஆட்களுக்குத்தான் கடனை தள்ளுபடி செய்தோமா இல்லையா என்று. பஸ்ஸை விட்டு இறங்கியபிறகு கண்டக்டரிடம் மீதி சில்லறையை வாங்கவே இல்லையே என்பது போலத்தான் இதுவும். இருந்தாலும் அரசு யோசிக்கிறதே, அந்த மட்டில் அதனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.  கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வழங்கினாலும் கூட 60 சதவீத சிறு குறு விவசாயிகள் இப்பயன்களை பெற முடியவில்லை

கொரோனாவை சந்தித்து மீண்டு வந்த இந்திய புத்தக கடைகள்! - நிலையை எப்படி சமாளித்தனர்?

படம்
            தாக்குப்பிடித்த புத்தக கடைகள் ! உலகம் முழுவதும் பொதுமுடக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . புத்தக கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அப்படி தப்பி பிழைத்த புத்தக கடைகள் பற்றி இங்கு பார்ப்போம் . என்ன சாகசங்கள் செய்து ்தங்களை காப்பாற்றிக்கொண்டனர் என்பதை பார்ப்போம் . பாக்தண்டி புனே நேகா , விஷால் பிபாரியா ஆகியோர்தான் இந்த புத்தக கடையை நடத்தி வந்தனர் . பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள இவர்களுக்கு கிடைத்த ஐடியா , கிப்ட் வ வுச்சர்கள்தான் . அதனை தங்களது வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள கூறினர் . அப்படி வாங்கியவறை பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் . இப்படிக் கிடைத்த தொகை மூலம் மூடப்பட்ட நாட்களை சமாளித்துள்ளனர் . ஆன்லைனில் வலைத்தளங்கள் கொடுக்கும் தள்ளுபடிகளை புத்தககடைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம் . எங்களது வாடிக்கையாளர்கள் மூலமே நாங்கள் இன்றுவரை இயங்கி வருகிறோம் என்கிறார்கள் நேகா அ்ண்ட் கோ . விட்டுக்கொடுக்காமல் இருந்தது . புத்தக கடை என்பதை முழுமையான அனுபவமாக மாற்றியது இக்கடையின் வெற்றி என்கிறார்கள் . ரச்சனா ஸ்டோர்ஸ் காங்டொக் ரா